உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், முழுமையாக ஹிந்தியில் நேற்று நடத்தப்பட்டது.திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பீஹார், உ.பி., உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இந்திய கம்யூ., கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, திருப்பூர் முழுதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.நேற்றைய கருத்தரங்குக்கு, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால், கருத்தரங்கம் முழுதும் ஹிந்தியிலேயே நடத்தப்பட்டது.ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் வஹிதா நிஜாம், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புக்காக ஏ.ஐ. டி.யு.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஹிந்தியிலேயே பேசினார்.நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழில் பேசிய எம்.பி., சுப்பராயன், ஏ.ஐ. டி.யு.சி., மாநில தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோரது பேச்சுகள், ஹிந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டன.தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ., சார்பில், முழுக்க முழுக்க ஹிந்தியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கோபாலன்
பிப் 24, 2025 16:48

த ஸ் கரோட்கேலியே க்ரவுண்ட் வொர்க் கர்தியா


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 24, 2025 10:10

தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் தமிழக மக்கள் அதிகம் பணியாற்றி கொண்டு இருந்த தொழிற்சாலைகள் அனைத்தும் வெற்றிகரமாக மூடப்பட்டு விட்டது. இனி மிச்சம் மீதி இருக்கும் சாம்சங் போன்ற ஒன்றிரண்டு தொழிற்சாலைகளையும் மூட சாம்சங் தொழிலாளிகளை வைத்து பரிசோதனை முயற்சி நடந்தது கொண்டு உள்ளது. அது கூடிய விரைவில் முடிந்துவிடும் என்பதால் அடுத்த புராஜெக்ட் இந்த ஹிந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் கையில் எடுத்து உள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. இனி தமிழக இளைஞர்களிடம் உண்டியல் வசூல் வேட்டை நடத்த முடியாது என்பதால் வட மாநில தொழிலாளர்கள் டார்கெட். கம்யூனிஸ்டில் சேரா விட்டால் இங்கு பணிசெய்ய விட மாட்டார்கள். இவர்கள் இந்த மாதிரி செய்தால் வட மாநில தொழிலாளர்களை தமிழகத்தை விட்டு அகற்றுவது என்பதன் மூலமும் அதன் மூலம் தொழிற்சாலைகள் கையகப்படுத்தலாம் அல்லது அதன் உரிமையாளர்களை நல்ல அடிமைகளாக மாற்றி கமிஷன் பெறுவது என்பது திராவிட கட்சிகள் திட்டம். இதற்கு தான் இந்த முன்னோட்ட நிகழ்ச்சி. ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த தொழிலகமும் எங்கும் உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை. கோயமுத்தூர் மில்கள் மிகச் சிறந்த உதாரணம். கோவை மில்கள் இந்த கம்யூனிஸ்ட்களால் மூடப்பட்டு இலட்ச கணக்கில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. கருணாநிதி திட்டமான கோவை மில்களை மூடுவது கம்யூனிஸ்ட்கள் கொண்டு நடத்தி முடித்தார். அந்த கால கட்டத்தில் 35 சதவீதம் போனஸ் கொடுத்த மில்கள் இந்த கம்யூனிஸ்ட்கள் சதி வேலை காரணமாக மூடப்பட்டு கடன்களுக்கு உள்ளாக்கப்பட்டு கருணாநிதி கனவு திட்டமான மில்கள் கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்பதை கருணாநிதிக்காக நடத்தி கொடுத்தவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள். பெரும்பாலான மில்கள் தற்போது திமுக அதன் நண்பர்கள் கையால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டு உள்ளது. திமுகவின் அடுத்த டார்கெட் திருப்பூர். வளர்ந்து வரும் திருப்பூரை வளைத்து போட்டு அதில் ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் பார்ப்பது திமுகவின் திட்டம். அதற்கு உதவுவது கம்யூனிஸ்ட்கள்.


PARTHASARATHI J S
பிப் 24, 2025 08:38

இந்தியை வியாபாரிகள் எதிர்க்க மாட்டார்கள். நிறைய புலன் பெயர்ந்த பிஹாரிகள் தமிழைக்கற்று வருகின்றனர். ஒன்றிரண்டு திருமணங்களும் நடக்கின்றன. திமுகவில் ஒரு பத்தாயிரம் பேர் மட்டுமே பிடிவாதமாக இந்தியை எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு சாதனங்கள் வந்து விட்டன. இப்போது கைபேசியிலேயே ஆஃப் வந்து விட்டன.


Seekayyes
பிப் 24, 2025 07:45

தமிழா, அப்படினா இன்னாது நானா, அச்சா, அப்பா (கன்னடா), பித்தாஜி, பாபா, வாடில், பிதாஜி.


essemm
பிப் 24, 2025 06:01

இப்போ இவர்களுடைய தமிழ் பற்று எங்கே பொருச்சு. ஹிந்தி எதிர்ப்பு என்பது இந்த திராவிட மாடல் அரசின் ஒருவேஷமே தவிர இவர்களுக்கு தமிழின் மீது அக்கறையோ. தமிழை வளர்க்கும் என்னமோ துளியும் இவர்களுக்கு கிடையாது. இவர்கள் அரசியல்ஸ்ய்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். மக்களை குழப்பவேண்டும் இது ஒன்றே இவர்களின் நோக்கம். கேடுகெட்ட தாராவிட ஆட்சி நமக்கு தேவைதானா?.


xyzabc
பிப் 24, 2025 03:23

There you go Welcoming change