உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்மிடம் வரும்: அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்மிடம் வரும்: அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

'தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், நம்முடன் கூட்டணிக்கு கட்டாயம் வரும். அங்குள்ள கட்சிகள் நம்மிடம் பேசி வருகின்றன. எனவே, கூட்டணி குறித்து கவலைப்படாமல், கட்சிப் பணியாற்றுங்கள்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., உற்சாகம் ஊட்டி அனுப்பி உள்ளார்.

முற்றுப்புள்ளி

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதே, தோல்விக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில் கட்சியின் ஓட்டு வங்கி சரிந்துள்ளது.எனவே, அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என, நிர்வாகிகள் இடையே பேச்சு எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகள் ஆறு பேர், இ.பி.எஸ்.,ஐ நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும், தகவல் வெளியானது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தொகுதிவாரியாக, கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

நம்பவேண்டாம்

ஓ.பி.எஸ்., சசிகலா குறித்து கூட்டத்தில் சிலர் பேச முயற்சித்தனர். அப்போது, 'கட்சியில் அவர்கள் உறுப்பினர்களே இல்லை. மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. வெளியில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்' எனக் கூறி, அப்பிரச்னைக்கு இ.பி.எஸ்., முற்றுப்புள்ளி வைத்தார்.அடுத்தடுத்த கூட்டங்களில், அவர்கள் குறித்து பேச யாரும் அனுமதிக்கப்படவில்லை. தோல்விக்கான காரணம் குறித்து சில நிர்வாகிகள் கூறுகையில், பலமான கூட்டணி இல்லாதது முக்கியக் காரணம் என்றனர்.அதற்கு பதில் அளித்து, இ.பி.எஸ்., கூறியிருப்பதாவது: வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். தீவிரமாக கட்சிப் பணியாற்றுங்கள். மக்களை சந்தியுங்கள். நம் ஆட்சி சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியின் அவலங்களையும் தொடர்ந்து எடுத்துக் கூறுங்கள். சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை போன்றவற்றை, வீடு வீடாகச் சென்று, விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமையும். தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும். அதற்கான தகவல்களும், பாசிட்டிவ் சமிக்ஞைகளும் அந்தப் பக்கம் இருந்து தொடர்ந்து வருகின்றன. தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை, அக்கட்சிகள் முன்வைக்கும். அவற்றை தி.மு.க., ஏற்காது. அதை காரணம் காட்டி, அவர்கள் கட்டாயம் வெளியேறுவர்.

வந்து சேரும் தகவல்

தற்போது, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், தி.மு.க., அரசுக்கு எதிராக போராடத் துவங்கி உள்ளனர். இதைச் சுட்டிக் காட்டி, இரு கட்சியில் இருப்போர், நமக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதையடுத்து, அவர்களுடன் நாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்து ஆட்சியை பிடிப்பதற்கான, அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.எனவே, நீங்கள் கூட்டணி குறித்து கவலைப்படாமல், புதிய நபர்களை கட்சியில் சேர்த்து பலப்படுத்துங்கள். மாதந்தோறும் நிர்வாகிகள் கூட்டம் போடுங்கள். பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இ.பி.எஸ்., பேச்சை பிரதிபலிக்கும் வகையில், நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ''தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள், எங்களிடம் தான் கட்டாயம் வரும்,'' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SP
ஆக 03, 2024 21:19

இவரை கட்சியிலிருந்து விலக்கினாலே அதிமுக பலம் பெறும்.கூட்டணிக்காக அதிமுக காத்திருந்ததே கிடையாது.அதிமுகவை எவ்வளவு கேவலபடுத்தமுடியுமோ அவ்வளவையும் செய்கிறார்.


naranam
ஆக 03, 2024 17:36

கனவு காண இபிஎஸ் க்கு உரிமை இருக்கிறது.


Ms Mahadevan Mahadevan
ஆக 03, 2024 13:59

ஒரு பயலுக்கும் தனித்து போட்டியிட துப்புயில்லை. கூட்டணி வைத்து கொள்ளை அடிக்க வாருங்கள் என்று அழைப்பு.


VENKATASUBRAMANIAN
ஆக 03, 2024 08:29

இப்படியே சொல்லி எத்தனை நாள் ஓட்டு வாராம்


ramani
ஆக 03, 2024 08:00

என்ன்டா இது கனவு காணுதே இடைப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கமான போச்சு. நீயெல்லாம் களவு காத்த கிளி தான். புரிந்து கொள்ள முடியாதவரா இருக்காரே. தொண்டர்களே புரட்சி செய்து அவரை வெளியேறி கட்சியை காப்பாற்றுங்கள்


Sundar
ஆக 03, 2024 07:12

வரு‌ம்... ஆனா வராது... ?


கிருஷ்ணன்_பொள்ளாச்சி
ஆக 03, 2024 06:49

கண்டிப்பாக வரும் தலைவரே எதற்கு வரும் என்று தான் தெரியவில்லை.... ஒருவேளை மீண்டும் மீண்டும் எங்களை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சண்டைக்கு வருமோ


ராமகிருஷ்ணன்
ஆக 03, 2024 06:45

இது வரை நீங்கள் நடந்து கொண்டதை. பார்த்து எந்தக் கட்சியும் உங்களைக்.நம்பி. கூட்டணிக்கு வரவே. வராது. சங்கு ஊதி விடுங்க பாஸ்


vijay, covai
ஆக 03, 2024 06:19

வரும் ஆனா வராது


மோகனசுந்தரம்
ஆக 03, 2024 06:13

இவன மாதிரி போக்கத்தவர்களால்தான் எம்ஜிஆர் ஆல் துவங்கப்பட்ட அண்ணா திமுக ஒன்றுமில்லாமல் போய்விட்டது. திருட்டு அயோக்கிய திராவிடக் கட்சிகள் அழிந்து ஒழிவது தமிழகத்திற்கு நலம் பயக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


A Viswanathan
ஆக 03, 2024 09:59

இலவு காத்த கிளி போல் ஆகிவிடக்கூடாது.உடன் பிறப்புக்கள் ஒன்று சேர்ந்து இவருடைய EGO வை எதாவது செய்தால் பிற்காலத்தில் அதிமுக என்ற கட்சி இருக்கும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ