உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உச்சத்தை எட்டுகிறது தேர்தல் பிரசாரம்: வாக்காளர்களை குஷிப்படுத்த தீவிரம்: கவனிப்புக்கு தயாராகும் கட்சிகள்

உச்சத்தை எட்டுகிறது தேர்தல் பிரசாரம்: வாக்காளர்களை குஷிப்படுத்த தீவிரம்: கவனிப்புக்கு தயாராகும் கட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் வி.சி., ரவிக்குமார், அ.தி.மு.க., கூட்டணியில் பாக்யராஜ், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., முரளிசங்கர் என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது.விழுப்புரம் தொகுதியில் 3 கட்சிகளுமே தனிப்பட்ட செல்வாக்குடன் சம அளவில் ஓட்டுகள் உள்ளன. தனி தொகுதியான பிறகு, அ.தி.மு.க., 2 முறையும், தி.மு.க., கூட்டணியில் வி.சி., ஒரு முறையும் வென்றுள்ளது. கணிசமான ஓட்டுகளை இந்த கட்சிகள் பெற்றுள்ளன.இதனால், சமமான மும்முனை போட்டி நிலவுவதால், அதனை ஈடுகட்டி, முந்துவதற்கான பணிகளை கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், தி.மு.க., தரப்பில், வி.சி.,யுடன் இணைந்து அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள், சேர்மன்கள் என தனித்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., தரப்பில், முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய செயலாளர்கள், தே.மு.தி.க.,வினர் என தனித்தனியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பா.ம.க., தரப்பிலும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தொகுதிவாரியாக வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பா.ஜ.,வுடன் இணைந்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.3 பிரதான வேட்பாளர்கள், கடந்த 4 நாள்களாக விழுப்புரத்தைச் சுற்றி, ஒரு கிராமத்தையும் விடாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மும்முனை போட்டி நிலவுவதால், அதில் முந்துவதற்கு, கடைசி பிரம்மாஸ்திரமாக வாக்காளர்களை 'கவனிக்க' தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தரப்பில், தற்போது ஓட்டுக்கு 200 வழங்க முடிவு செய்துள்ளனர். அதற்கான கணக்கெடுப்பும் நடத்தி முடித்துள்ள தகவலும் வெளிவந்துள்ளது..இதனையறிந்த பா.ம.க., தரப்பும், தங்களுக்கான ஓட்டுகளை தக்க வைக்க அவர்களும் வாக்காளர்களை 'கவனிக்க' முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருவதாக அந்தந்த கட்சியினரே தெரிவிக்கின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ