உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுற்றுச்சூழலா, சுற்றுலாவா? இ - பாஸ் சபாஷ்!

சுற்றுச்சூழலா, சுற்றுலாவா? இ - பாஸ் சபாஷ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானலுக்கும் சுற்றுலா செல்ல, மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிக்கல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கூட, கொடைக்கானலில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு, சமவெளிப் பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், மே 7 முதல் ஜூன் 30 வரை, 'இ-பாஸ்' நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலை பொறுத்தவரை, சுற்றுலா முக்கியமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது, சமவெளிப் பகுதிகளை போல், நீலகிரி மாவட்டத்திலும், கொடைக்கானலிலும் வெப்பம் வாட்டி வருகிறது. உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சமவெளிப் பகுதிகளை ஒப்பிடும்போது, நீலகிரி, கொடைக்கானலில் வெப்பம் குறைவு தான் என கருதும் பெரும்பாலான சுற்றுலாப் பயணியர், சுற்றுலா மையங்களுக்கு படையெடுக்கின்றனர்.ஆனால், ஒரே நேரத்தில் வாகனங்கள் செல்வதால், இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணியர் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் அவதிப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ், நிச்சயம் வரவேற்கத்தக்கது.நீலகிரியை பொறுத்தவரை, தற்போது அணைகள் வறண்டுள்ளன. உள்ளூர் மக்களின் தேவைக்கே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. சுற்றுலா பயணியரும் அதிகளவு வந்து விட்டால், அவர்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற சிக்கல் ஏற்படும்.நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தால் தான், சமவெளிப் பகுதிகளுக்கு நீராதாரம். மாவட்டத்தின் பொருளாதாரத்துக்கு சுற்றுலா முக்கியம் என்றாலும், அந்த சுற்றுலாவுக்கே முக்கியமான சுற்றுச்சூழலிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இது, கொடைக்கானலுக்கும் பொருந்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை