உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கார்த்தி சர்ச்சை பேச்சு: ராகுலிடம் விளக்கம்

கார்த்தி சர்ச்சை பேச்சு: ராகுலிடம் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூட்டணிக்கு விரோதமாக செயல்படுவதாக கார்த்தி மீது, தி.மு.க., கூறிய புகார் குறித்து, ராகுலிடம் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் விளக்கம் அளித்து உள்ளார்.இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த ஜூனில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 'காங்கிரசை வலிமைப்படுத்துவதற்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி.'என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி என்கிற கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்' என்றார்.செல்வப்பெருந்தகைக்கு பதிலடி தரும் வகையில் இளங்கோவன் பேசுகையில், 'ஆட்சிக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். திராவிட ஆட்சி, காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி என்றல்லாம் பெயர் வைக்கலாம். என்னை பொறுத்தவரையில் ஸ்டாலின், காமராஜர் ஆட்சி தருகிறார்' என்றார்.இந்த மோதலுக்கு இடையில், தி.மு.க., கூட்டணிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.அதாவது, 'தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. காவல்துறை என்கவுன்டர் செய்வது, சட்டத்தை காப்பாற்றுவதற்காக என்று நினைக்க வேண்டாம். வழக்குகளை முடிக்கவே என்கவுன்டர்கள் செய்யப்படுகின்றன.'மின் கட்டண உயர்வு பற்றி காங்கிரஸ் பேச வேண்டும். மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கவில்லை என்றால், மக்கள் மனதில் நாம் இருக்க மாட்டோம்' என்றார்.மேலும், தனியார், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க.,வை உசுப்பேற்றும் விதமாக, 'அ.தி.மு.க., தீண்டத்தகாத கட்சி அல்ல' என்றார். கார்த்தி பேச்சும், அவரது கருத்தும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளங்கோவன், அழகிரி ஆதரவாளர்கள் டில்லி மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.தி.மு.க.,வின் மூத்த எம்.பி., ஒருவர் டில்லியில் சோனியாவை சந்தித்து, 'தமிழகத்தில் கூட்டணி குழப்பத்தை கார்த்தி ஏற்படுத்துகிறார்' என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்துள்ளார்.அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு ராகுலிடம் சோனியா கூறியிருக்கிறார். தனியார் ஏஜன்சி வாயிலாக, தமிழக காங்கிரசில் நடந்து வரும் அனைத்து விவகாரங்களையும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார்.அதன்பின், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.அவரும், 'தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்களில், கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக, காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசுகின்றனர். மற்றபடி தி.மு.க., கூட்டணிக்கு விரோதமாக யாரும் செயல்படவில்லை' என, ராகுலிடம் விளக்கியுள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ms Mahadevan Mahadevan
ஜூலை 31, 2024 10:59

காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் தனித்து போட்டி போட்டு 2026 தேர்தலில் பலத்தை நிருபிக்க வேண்டும் 2031 இல் ஆட்சி அமைத்து விடலாம்


பேசும் தமிழன்
ஜூலை 30, 2024 08:48

கட்சி தொண்டர்கள் கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது தான் கட்சி வளரும் என்று கூறுவது தவறு என்றால். எதற்க்கு தனியாக கட்சி நடத்தி கொண்டு .....பேசாமல் கான் கிராஸ் கட்சியை கலைத்து விட்டு....திமுக கட்சியில் ஐக்கியமாகி விட வேண்டியது தானே ???


A Viswanathan
ஜூலை 30, 2024 10:53

காமராஜ் ஆட்சி வேண்டும் என்றால் இப்போது உள்ள இத்தாலி கும்பலிடமிருந்து காங்கிரஸ் ஐ விடுவியுங்கள்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ