உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்; நவீன் பட்நாயக் பங்கேற்க அழைப்பு

மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்; நவீன் பட்நாயக் பங்கேற்க அழைப்பு

லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.பி., தயாநிதி ஆகியோர், ஒடிசாவில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.கேரளாவுக்கு அமைச்சர் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி எம்.பி., ஒடிசாவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் ராஜா, எம்.பி., தயாநிதி ஆகியோர், ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்தனர். தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, சென்னையில் தமிழக அரசு சார்பில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினர்.சந்திப்பு குறித்து தயாநிதி கூறுகையில், ''தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய ஏழு மாநிலங்களும், தொகுதி மறுவரையறை காரணமாக பாதிக்கப்பட உள்ளன. இதை தடுக்க, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மார் 12, 2025 15:31

அதுக்குன்னு அவரை ஒடிசா முதல்வர்னு குறிப்பிட்டு லெட்டர் அனுப்புவது திரா மாடல் கிண்டல் தானே?.


DUBAI- Kovai Kalyana Raman
மார் 12, 2025 13:06

இல்லாத ...ஒரு மீட்டிங் அதுக்கு தென் இந்தியா தலைவர்களுக்கு அழைப்பு வேற.. சென்ட்ரல் கோவர்ன்மெண்ட் சொல்லிருச்சே ..எந்த மாற்றம் இல்லை னு ..மக்களுக்கு தேவை ஆன விஷயங்களுக்கு மீட்டிங் போடுங்க, காவிரி, பெரியாறு, கிருஷ்ணா நதி நீருக்கு , போய் பேசு , மீட்டிங் போடு ..


சிவம்
மார் 12, 2025 10:35

பட்நாயக் அவர்களுக்கு என்ன ஆச்சு? ஒரு வேளை இந்த சாக்கில் தமிழ் நாட்டு கோவில்களுக்கு வர எண்ணமோ!!


Velan Iyengaar,Sydney
மார் 12, 2025 07:58

நாளை நமதே 40 தும் வேஸ்ட்.


Sakthi,sivagangai
மார் 12, 2025 09:30

அவர் ஒரு ஜென்டில் மேன் திருட்டு திமுக களவானிக் கும்பல்களுடன் சேர மாட்டார்


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 07:26

கார்பொரேட் மன்னர் தயாநிதி கூட இருப்பது யார் யார் ?


A Viswanathan
மார் 12, 2025 14:46

அவர் யோசித்து எதையும் செய்ய கூடிய முதிர்ச்சி உள்ள அரசியல்வாதி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் இருக்க மாட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை