உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர்கள் நெருக்கடி? : இடத்தை மாற்றிய விஜய்

அமைச்சர்கள் நெருக்கடி? : இடத்தை மாற்றிய விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்களின் மறைமுக நெருக்கடியால், நடிகர் விஜய் தன் கட்சி மாநாட்டை விக்கிரவாண்டிக்கு மாற்றியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்குவதாக, பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அறிவித்தார். மாநாடு நடத்தி கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், கட்சியை தயார்படுத்தும் பணியை செய்து வருகிறார்.த.வெ.க., முதல் அரசியல் மாநாடு, மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு தனியார் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்கள், மாநாடு நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டன. அமைச்சர்களின் மறைமுக நெருக்கடிகள் காரணமாக இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் இடத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு கட்சி மாநாட்டை, செப்., 22ல் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை விஜய் தரப்பினர் துவங்கியுள்ளனர். இந்த இடத்தையும் தரக்கூடாது என, அமைச்சர் ஒருவர் தரப்பில் நெருக்கடி தரப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mani . V
ஆக 20, 2024 06:17

ரௌடிகளின் மிரட்டலுக்குப் பயந்து?


sugumar s
ஆக 19, 2024 16:34

TVK means தமிழ் வெட்டி கட்சி


ems
ஆக 17, 2024 11:29

இப்போ நெருக்கடி கொடுப்பாங்க... அப்புறம் பயமுறுத்தி ... அப்புறம் கூட்டணி ஃபார்முலா...எதுக்கும் அசராத ஆள்ன... பொய் கேஸ் போட்டு....இதெல்லாம் இப்ப ஆட்சில இருக்கும் அரசியல்வியாதிகளுக்கு... அத்துபடி


ஆரூர் ரங்
ஆக 17, 2024 10:32

விக்கிரவாண்டியில் மீட்டிங் போட்டாலும் மீட்டிங்குக்கு ஜிஎஸ்டி உண்டாம்.


naranam
ஆக 17, 2024 10:24

நல்லது. திமுகவின் நெருக்கடி கூடக் கூட விஜய்க்கு மக்கள்ஆதரவும் கூடும். திமுக வின் செல்ஃப் ஆப்பு என்பது இது தான் போல..


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:19

வேரென்னவோ பிளான் பி இருக்கிறது என்றே தோன்றுகிறது


MP.K
ஆக 17, 2024 09:49

தமக்கு போட்டியாக யார் வந்தாலும் விட மாட்டோம் இது தான் அனைத்துக்கட்சிகளின் என்ற நிலைமை


angbu ganesh
ஆக 17, 2024 09:32

இதுக்கேய் பயந்துட்டா எப்படி இன்னும் நெறய பாக்கணும்


VENKATASUBRAMANIAN
ஆக 17, 2024 08:35

இதுதான் திராவிட மாடல்


nagendhiran
ஆக 17, 2024 06:18

இதான்டா திமுக


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ