உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்

நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், பட்டா பெற விண்ணப்பிக்கின்றனர். இதை எளிமைப்படுத்தவும், பொது மக்களுக்கு அலைக்கழிப்பை குறைக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதைத் தொடர்ந்து, பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் ஏராளம் வருகின்றன. இதுபோன்ற பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தால், அதன் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இது குறித்து, நில அளவை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும். இத்துடன், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளையும், இத்துறை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில் தரத்தை உறுதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும். சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். குறிப்பாக, நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Siva
ஜூலை 26, 2024 13:41

தற்போது உள்ள வழிமுறையில் நிலத்தின் அளவுகள் தவறுதலாக இருந்தால் அவர்களது முந்தைய கோப்புகளில் சரியாக இருந்தாலும் அதனை சரி செய்ய கோப்பு மாவட்ட ஆட்சியர் வரை செல்லும் நிலை உள்ளது. கிராம நிர்வாக ஆலுவர் ரிப்போர்ட் R ஐ ரிப்போர்ட் சர்வேயர் ரிப்போர்ட் மண்டல துணை வட்டாட்சியர் வட்டாட்சியர் கோட்டாசியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செச்டின் இயக்குனர் நில அளவை பிறகு மாவட்ட ஆட்சியர்.ஆர்டர். மீட்டும் இந்த கோப்பு இதே முறையில் கணீயில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆஃப்ருவ் செய்ய வேண்டும். இதற்கு சாதாரண மனுதாரருக்கு எடுக்கும் காலம் 2 ஆண்டுகள். அதிகாரிகளின் ரென்போர்ட்ஸ் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால் இல்லையேல் விக்ரமாதித்தன் கதை தான் அதிகாரிகளின் இல்லை அரசு என்னை தொடப்பு கொண்டாள் என்னால் எளிய வழி கூற முடியும். மிகுந்த வருதங்களுடம் எழுதிய பதிவு


Paramasundaram
ஜூலை 25, 2024 18:44

குட் intiative


Dhinesh Kumar
ஜூலை 25, 2024 16:40

நில அளவை பணிகளில் டிஜிலைசேஷன் மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும். கேரள அரசு அவர்களின் நிலங்களை நவீன சர்வே கருவிகள் மூலம் சீரமைத்து, ஆட்டோ கேட் வரைபடங்களில் பதிவுகளை வைத்துள்ளது. இது நில ஆக்கிரமிப்புகளை துல்லியமாக தவிர்க்கிறது.


Jagadeeswaran Deenan (Jaga)
ஜூலை 25, 2024 13:47

சென்னை அயனாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அயனாவரம் கிராமம் சர்வே எண் 21 உட்பிரிவு 04 கிரைய பத்திரம் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகி பல முறை பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்து எந்த பயனும் இல்லை தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Jagadeeswaran Deenan (Jaga)
ஜூலை 25, 2024 13:44

நிச்சயம் சென்னை பட்டா மாறுதல் தவறு இருந்தால் ஆய்வு செய்து சரி செய்ய படுமா? ஐயா அவ்வாறு நடந்தால் நாங்கள் இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்ட பலனை அடையலாம் ஐயா நன்றி..


Murugan Murugan
ஜூலை 25, 2024 07:57

useful


A.SAMIRAJI PENNAGARAM SS TV
ஜூலை 25, 2024 06:19

அருமை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை