பாட்னா: பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர். தற்போது, பா.ஜ., கூட்டணியில் உள்ளார். தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள, எந்த பக்கமும் தாவக் கூடியவர். அப்படித் தான் பீஹாரில் நீண்டகாலமாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.ஆனால், தற்போது பீஹார் மக்களிடையே இவருடைய புகழ் மங்கி வருகிறது. இவருடைய தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டம் வருவதில்லை. அத்துடன், இவருடைய பிரசாரம் உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த நிதீஷ், இப்போது பரிதாப நிலையில் இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z0xbx9t2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிதீஷ் கட்சியின் ஓட்டு வங்கி எனப்படுவது, மகா தலித் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். ஆனால், மோடி இங்கு பிரபலமாக உள்ளார். மத்திய அரசின் பல நலத் திட்டங்கள், பீஹார் கிராமங்களில் குறிப்பாக, பெண்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.இதனால், பா.ஜ.,விற்கு பீஹாரில் எந்த பின்னடைவும் ஏற்படாது. 'நிதீஷுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாவிட்டாலும், மும்முனை போட்டி காரணமாக, இவருடைய கட்சிக்கும் பிரச்னை இருக்காது' என, சொல்லப்படுகிறது.மேலும், 'இதற்கு முன் நடந்த தேர்தல்களில், நிதீஷை நம்பியிருந்தது பா.ஜ., ஆனால், தற்போதைய நிலைமை மாறி விட்டது; மோடியை நம்பி தான், நிதீஷின் வெற்றி உள்ளது' என்கின்றனர் பா.ஜ.,வினர்.