உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலை வருவதற்குள் அ.தி.மு.க.,வுடன் சமரசம்: வாசனை துாதராக்கி தமிழக பா.ஜ., முயற்சி

அண்ணாமலை வருவதற்குள் அ.தி.மு.க.,வுடன் சமரசம்: வாசனை துாதராக்கி தமிழக பா.ஜ., முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், கடந்தாண்டு செப்டம்பர் வரை, பா.ஜ.,வோடு இணக்கமான கூட்டணி கட்சியாகத்தான் அ.தி.மு.க., இருந்தது. அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா குறித்து, அண்ணாமலை பகிரங்கமாக விமர்சித்ததால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கொந்தளித்தார். 'அண்ணாமலையை தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்; அப்போதுதான் கூட்டணி தொடரும்' என, மத்திய பா.ஜ.,வுக்கு கெடு விதித்தார். இதை பா.ஜ., தலைமை ரசிக்கவில்லை. இருந்தபோதும், இரு கட்சி தலைவர்களையும் அழைத்த அமித் ஷா, டில்லியில் சமரச பேச்சு நடத்தினார். ஆனாலும், அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்தது, கூட்டணி முறிவுக்கு வழி வகுத்தது. அதன்பின், இரு கட்சியினரும் தங்கள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தனர்; தோல்வி தான் கிடைத்தது; தி.மு.க., 39 தொகுதிகளையும் அள்ளியது. அ.தி.மு.க.,வுக்கு பல இடங்களில் மூன்றாம் இடமும், சில இடங்களில் நான்காம் இடமும் கிடைத்தது; பல தொகுதிகளில் டிபாசிட் பறிபோனது.இந்நிலையிலும், 2026 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமைக்க, தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அண்ணாமலைக்கு துளியும் விருப்பமில்லை. இதனால் அமைதியாக இருந்த கட்சி மூத்த நிர்வாகிகள், வாய்ப்பு வரும் என காத்திருந்தனர். தற்போது, அதற்கான பணிகளை துவக்கிஉள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

படிப்புக்காக அண்ணாமலை ஆக., 28ல் லண்டன் சென்றார். அவர் இல்லாத இந்த சூழலை பயன்படுத்தி, மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பை உருவாக்க, பா.ஜ., மூத்த தலைவர்கள் களமிறங்கி உள்ளனர். இதற்காக, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனை துாதராக்கி உள்ளனர்.அதன்படி, கடந்த 3ம் தேதி, வாசன் டில்லிக்கு சென்று, அமித் ஷாவை சந்தித்தார். கடந்த சட்டசபை தேர்தல், 2024ல் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்களை பட்டியலாக ஒப்படைத்தார். ஏற்கனவே, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பங்கு போட, அ.தி.மு.க., -- பா.ஜ., என, இரு கூட்டணிகள் தவிர்த்து, நாம் தமிழர் கட்சியும் இருப்பதாலேயே கடந்த லோக்சபா தேர்தலில் மூன்று கூட்டணிகளும் தோல்வியை தழுவின. தற்போது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் வந்துள்ளது. ஆக, நான்கு கூட்டணிகள் தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிடும்பட்சத்தில், அக்கட்சியே மீண்டும் மிக எளிதாக வெற்றி பெறும். அதனால் தான், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அவசியம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை அமித் ஷாவிடம் பேசியுள்ளார். முன்னதாக இதே மாதிரியான கருத்துக்களை வலியுறுத்தியே, பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜாவும் அமித் ஷாவிடம் பேசியுள்ளார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரிடம் பேசி, நல்ல முடிவெடுக்கலாம் என சொல்லி, இருவரையும் அனுப்பி உள்ளார். இதையடுத்தே, அ.தி.மு.க., கூட்டணி மற்றும் பழனிசாமி குறித்து, ஹெச்.ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பழனிசாமி பழகுவதற்கு இனிய தலைவர் என கூறியுள்ளார். அண்ணாமலை தவிர்த்து, தமிழக பா.ஜ.,வின் பெரும்பாலான மூத்த தலைவர்கள், அ.தி.மு.க.,வோடு கூட்டணியை விரும்புவதால், அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்புவதற்குள், தேசிய தலைமையிடம் இருந்து, 'பாசிட்டிவ்' ஆன சிக்னலை பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக முயல்கின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்

மேற்கு வங்கத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக, தமிழக கட்சிகள் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளன. தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் எம்.எல்.ஏ., பதவியில் இருந்த நிலையில், ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்த விஜயதரணி தனக்கு பதவி வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவருக்கு நிச்சயம் கட்சிப்பதவி வழங்க வேண்டும்; வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.,வுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்.- நயினார் நாகேந்திரன், பா.ஜ., சட்டசபை குழு தலைவர் - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

S. Gopalakrishnan
செப் 06, 2024 23:39

பவதாரிணி இங்கு வந்ததும் பதவி தரவில்லையாம் ! இப்படி நேற்று கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றால் கட்சி அதோகதிதான் !


raj
செப் 06, 2024 23:27

நம்பிக்கை துரோகி


Ananthanarayanan KR
செப் 06, 2024 20:47

ADMK has clearly stated that there is no alliance with BJP in 2026 Mr.Vasan has gone to meet Mr. Shah for some other purpose but media creating false msg


Ananthanarayanan KR
செப் 06, 2024 20:44

எடப்பாடி சொல்லிட்டார் பிஜேபி உடன் 2026 ல்கூட்டணி இல்லை என்று பிறகு எதற்கு பிஜேபி முயற்சி செய் வேண்டும்


Saai Sundharamurthy AVK
செப் 06, 2024 19:37

மேலிடம் என்ன கூறுவார்கள் என்றால் அண்ணாமலையிடம் விவாதித்து கூறுகிறோம் என்று கூறி விடுவார்கள். கதை கந்தலாகி விடும். ஆகவே, வாசன் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது.


SP
செப் 06, 2024 19:12

தேசிய தலைமை அண்ணாமலை அவர்கள் லண்டனிலிருந்து திரும்பி வந்தவுடன்,அவரிடம் கலந்துபேசிதான் முடிவெடுக்கும்.யாரும் கனவுகாணவேண்டாம்.தமிழக பாஜ மூத்த தலைவர்கள் கிட்டதட்ட எல்லோருமே பாஜ வளர்வதற்கு மிகப்பெரிய தடையாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை களையெடுத்தாலே போதும்.


Barakat Ali
செப் 06, 2024 19:10

ஊட்டுக்காரரு வர்றதுக்குள்ள மேட்டரை முடிக்கணும் ன்னு அவசரப்படுறாங்க .... இதனால்தான் கள்ள உறவு ன்னு தற்போது அமெரிக்காவில் இருக்கும் துக்ளக்கார் அழுது புலம்பினாரோ ????


saravanan
செப் 06, 2024 19:09

எந்த ஒரு தனி நபரையும் நம்பி நிச்சயம் பாஜக இல்லை கட்சி வாய்ப்பு தந்தால் அதை திறம்பட பயன்படுத்தி இயக்கத்தையும், நாட்டையும் மேம்படுத்துவது அவரவர் திறமை கட்சி நிலையானது ஆனால் தலைமை மாறிக் கொண்டிருப்பது பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு. சட்ட மன்ற, உள்ளாட்சி தேர்தல்கள் வேறு வளரும் மற்றும் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான கட்சியான பாஜக அதனுடைய தலைமையில் கண்டிப்பாக ஓரு கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க முடியும் அதற்கு அணைத்து தளங்களிலும் பாஜக இயங்க வேண்டும். அதாவது தமிழும் வேண்டும், மக்கள் பிரச்சினைகளுக்கும் உரத்த குரல் எழுப்ப வேண்டும். ஆளும் தரப்பினரின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் நமது கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்


Senthil
செப் 06, 2024 21:52

எந்த ஊழலை அம்பலப்படுத்தின்லும் இங்கு எடுபடாது. முதலில் தமிழன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கட்டும், தமிழை மட்டம் தட்டிக்கொண்டே தமிழுக்கு எதிர்க பேசிக்கொண்டே தமிழனின் ஓட்டை பெற முடியுமா?வாய்ப்பே இல்லை. இன்று இல்லை என்றுமே பாஜாகவுக்கு வாய்ப்பு இல்லை. மும்மொழிக்கொள்கை என்ற மூட நம்பிக்கையை முதலில் தூக்கியெறுய வேண்டும். ஒரு மொழியை மட்டும் கற்கும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ் மக்கள்தான் அலிவில் பொருளாதாரத்தில் முனைனேறி இருக்கிறார்கள். நமக்கு நம் தாய் மொழி அலிவியல் வளர்ச்சி காணாத மொழியாக இருப்பதால் கூடுதலாக ஒரு மொழியாக ஆங்கீலத்தை கற்கிறோம், அதுவே ஒரு சுமை அதற்குமேல் இன்னொரு சுமையை ஏற்றினால் அறிவை வளர்க்க நேரம் எங்கு இருக்கும்? இந்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ள முடியாத மூடர்களுக்கு தமிழர்கள் எந்த காலத்திலும் ஓட்டுப்போட மாட்டார்கள்.


தேவதாஸ் புனே
செப் 06, 2024 17:27

இதை பாஜக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்....... சமீபகாலமாக பாஜக இந்திய அளவில் சில தவறான முடிவுகளை எடுத்து வருகிறது இதுவும் ஒரு உதாரணம்.


Kathirvelu
செப் 06, 2024 16:08

அண்ணாமலையின் சில சக தலைவர்கள் குறிப்பாக தமிழிசை சொந்தராஜன் அவரை ஓரம் கட்ட நினைக்கிறார் அண்ணாமலை இல்லை என்றால் தமிழ் நாட்டில் தாமரை என்பது காணமல் போய்விடும் இதை பாஜக மேலிடம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாமரை தமிழ் நாட்டில் மலர்ந்தே தீரும் என்று தமிழிசை அவர்கள் வெறும் வாயால் சொல்லி அசை போட்டுக் கொண்டிருந்தால் தாமரை மலராது. தமிழிசை அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்தால் துணை முதல் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கலாம். திராவிட கட்சிகள் இரண்டும் ஊழலில் ஊரிய கட்சிகள் என்று மக்களுக்கு தெரியும். பஜக திராவிட கட்சியுடன் கூட்டு வைத்தால் பஜகாவும் ஊழல் செய்ய தொடங்கி விட்டதாக தான் அர்த்தம். அண்ணாமலையின் துணிச்சலான செயல்களுக்கு பக்க பலமாக அவரது சக தலைவர்கள் ஒத்துழைத்தாலே போதும் அவரால் இப்போது மலர்ந்திருக்கும் தாமரை விரைவாக தமிழ்நாடு முழுக்க படரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை