உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆந்திரா மாணவர்களுக்கு ஒதுக்கீடு ரத்து; தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு

ஆந்திரா மாணவர்களுக்கு ஒதுக்கீடு ரத்து; தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு

ஹைதராபாத்: தெலுங்கானா உயர் கல்வி நிறுவனங்களில், ஆந்திர மாணவர்களுக்கு வழங்கி வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, தெலுங்கானா அரசு உத்தரவிட்டது. தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து பிரிந்த மாநிலம் என்பதால், உயர் கல்வி சேர்க்கையில் ஆந்திர மாணவர்களும் உள்ளூர் மாணவர்களாகவே கருதப்பட்டனர். இதன்படி, 85 சதவீத இடங்களில் ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மீதி 15 சதவீத இடங்கள் வேறு மாநிலத்தவருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கையின்போது, ஆந்திர மாணவர்கள், 85 சதவீத ஒதுக்கீட்டுக்குள் வரமாட்டர் என, தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து பிரிந்தபோது, 2014-ல் ஏற்படுத்தப்பட்ட ஆந்திர பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி, பொது சேர்க்கைக்கான 10 ஆண்டு காலக்கெடு முடிந்து விட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெலுங்கானா கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:தெலுங்கானாவில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், 85 சதவீத இடங்கள் தெலுங்கானா மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். உள்ளூர் மக்கள் என்ற அடிப்படையில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் இந்த பிரிவில் இட ஒதுக்கீடு கிடையாது. அவர்களை, மீதமுள்ள இடங்களில் தான் சேர்க்க வேண்டும். வெளிமாநில ஒதுக்கீட்டில் உள்ள, 15 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேருவதாக இருந்தால், அந்த மாணவர் வெளி மாநிலங்களில் படித்த காலத்தை தவிர்த்து, தெலுங்கானாவில் 10 ஆண்டு படித்திருக்க வேண்டும். மாணவரின் பெற்றோர், 10 ஆண்டுகள் தெலுங்கானாவில் வசித்திருக்க வேண்டும். தெலுங்கானாவில் வசிக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர் குழந்தைகள், பொதுத்துறை நிறுவன ஊழியரின் குழந்தைகள் உள்ளிட்டோரும் 15 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 01, 2025 20:23

இந்த ஆந்திர தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன் முதன் முதலாக அதற்கு ஆதரவு தெரிவித்து பிரித்து வைத்தவர் நமது உலக பொருளாதார மேதை மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.சிதம்பரம் அவர்கள். அப்போது அவர் மத்திய காங்கிரஸ் அரசில் நிதியமைச்சர்.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
மார் 01, 2025 18:27

நம்புங்க மக்களே இந்த கான் கிராஸ் அயோக்கியர்கள் தான் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்குப வர்கள்.நம்புங்கள் மக்களே நம்புங்க.இந்த அயோக்கியர்களை நாட்டை விட்டு துரத்தும்வரை தேச ஒற்றுமை என்பது கானல் நீர்தான்.


அப்பாவி
மார் 01, 2025 10:59

பிரிவினை சுயநல தத்திகளுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.


ஆரூர் ரங்
மார் 01, 2025 10:53

ஒழுங்கா ஒண்ணா இருந்த தெலுங்கு மக்களை இரண்டு மாநிலங்களாகப் பிரித்து ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆக்கிய சாதனை சோனியா UPA வினுடையது.


R S BALA
மார் 01, 2025 07:55

ரெண்டு மாநிலமா பிரிச்சதே இதற்க்காகத்தானே..


raja
மார் 01, 2025 06:43

பூரி ததா தமிழா யார் பிரிவினைவாதிகள் என்று...ஊழல் பெருச்சாளிகள் திருட்டு திமுகவும் அவனின் கூட்டாளி கான் கிராசும் தான்....


Bye Pass
மார் 01, 2025 04:45

இவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் திராவிட வரம்பில் வருவார்கள் ..


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 03:36

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க , பிரித்தாளும் சூழ்ச்சியா , இல்லை எல்லா இடமும் தெலுங்கு மாணவர்களுக்கே என்ற கோட்பாடா ?


புதிய வீடியோ