உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்!

கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்ட்ராக்டர்கள் பெயரில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே ரோடு வேலைகளை செய்வது குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, கோவையில் அத்துறையின் இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர்.தமிழக நெடுஞ்சாலை துறையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 90 சதவீத பணிகளை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மேற்கொள்கிறது. புதிதாக ரோடுகள் அமைப்பது, ரோடுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்யும் இந்தப் பிரிவுக்கு தான், பெருமளவு நிதியும் ஒதுக்கப்படுகிறது.இதில், ரோடு சீரமைப்பு பணிகளில் பெருமளவில் முறைகேடு நடக்கிறது. சீரமைப்பு என்ற பெயரில், பணிகளை தரமின்றியும், பணியே செய்யாமலும் பணத்தை எடுத்து முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஒரே ரோட்டில் நடக்கும் சீரமைப்பு பணியை, 15 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில், சின்னச்சின்னப் பணியாக பிரித்து வழங்கியும் முறைகேடு நடக்கிறது என்றும் கூறப்பட்டது.

தரமற்ற பணிகள்

கோட்ட பொறியாளரே, இந்த தொகையுள்ள பணிக்கு இ - டெண்டர் விட்டு, பணியை இறுதி செய்யலாம் என்பதால், ஒரு கோடி ரூபாய் பணியும் ஆறேழு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.இதனால், சின்னச்சின்ன கான்ட்ராக்டர்கள் பணிகளை எடுத்து, தரமற்ற முறையில் செய்கின்றனர். அதனால் தான், ரோடு சீரமைக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே கந்தலாகி விடுகிறது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றி துறையின் செயலருக்கு, கான்ட்ராக்டர்கள் சங்கம் சார்பில் புகார் அனுப்பப்பட்டது. நமது நாளிதழிலும், 'கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், ஜூன் 2 அன்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த முறைகேடு பற்றி விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. கோவையில் இக்குழு கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கோவை கோட்ட பொறியாளர் உட்பட, அனைத்து இன்ஜினியர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறப்பு திட்டப்பிரிவு ஆகிய உதவி கோட்ட பொறியாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றி வந்த ஏழு உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது. இதுதவிர வேறு பல இன்ஜினியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venkatakrishna
ஜூலை 04, 2024 19:55

எடப்பாடியார் ஆரம்பித்து வைத்தது தொடர்கிறது


Raghavan
ஜூலை 03, 2024 22:24

எங்க மாத்தியிருக்கப் போறாங்க பக்கத்து ஊருக்கு தான். மறுபடியும் கொடுப்பதை கொடுத்தால் திரும்பவும் எங்கிருந்து சென்றார்களோ அங்கேயே பதவி உயர்வு வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள். இது எப்படி என்றால் நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன் நீயும் அழுவதுபோல் அழு. கொஞ்சல் நாள் கழித்து உன்னை அங்கேயே போடுகிறேன் என்று மேலதிகாரி சொல்லுவார். மாற்றினால் குறைந்தது ஒரு 300 கிலோ மீட்டர் தள்ளி மாற்ற வேண்டும்.


Veerakumar 7777
ஜூலை 03, 2024 21:34

இதேபோல் மின்சார வாரியத்தில் நடக்கிறது..


Manoharan Maran Ram
ஜூலை 03, 2024 19:38

தினமலர் உதவியாலும் ஒப்பந்தகாரர் சங்கத்தின் அரிய முயற்சியாலும் இனிமேல் கோவை மாவட்டம் இனிமேல் நம்பர் 1 ஆக மாறிவிடும்


Gopalan
ஜூலை 03, 2024 18:19

பொறியியல் ஆய்வாளர் காண்ட்ராக்ட் எடுத்தால் வேலையிலிருந்து தூக்க வேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 03, 2024 17:05

தப்பு செய்தவர்களை இடமாற்றம் செய்துவிடுங்கள். அவர்கள் அங்கு சென்று தப்பு செய்யட்டும். இடமாற்றம் ஒரு தண்டனையா? மக்களை இன்னும் மடையர்களாக நினைக்கிறது இந்த திருட்டு திராவிடம்.


shakti
ஜூலை 03, 2024 16:41

சூப்பர்


பாரதி
ஜூலை 03, 2024 15:46

அரசுப் பணிகளின் தரம் பல்லை இளிக்கிறது. முடிந்தவரை தனியார் மையமே நம் நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது...


LS Jothilingam
ஜூலை 03, 2024 14:05

இடம் மாறுதல் என்பது மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த பொறியாளர்களுக்கு தான் வழங்கியுள்ளனர் மேலும் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் பணியாற்ற உதவி பொறியாளருக்கு 15 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலும் உதவி கோட்ட பொறியாளருக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் கோட்ட பொறியாளர் அவர்களுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் தொகை நிர்ணயிக்கப்பட்டு அமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே இந்த பணி மாறுதல் வந்துள்ளது எனவே இது நடவடிக்கை அல்ல இது ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையும் நடக்கக்கூடிய சம்பிரதாயம் தான்


Shanmugam
ஜூலை 03, 2024 13:02

இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்தால் சரியாக இருக்கும் மாநகராட்சி. நகராட்சி ஊராட்சி யூனியனிலும் செய்தால் மிக நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை