உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வக்பு சட்ட திருத்தத்துக்கு வழிவகுத்த கிராமம்

வக்பு சட்ட திருத்தத்துக்கு வழிவகுத்த கிராமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருச்சி மாவட்டம், திருச்செந்துறை மற்றும் சில கிராமங்களில் உள்ள நிலங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தம் என எழுந்த பிரச்னை காரணமாகவே, மத்திய அரசு வக்பு சட்டத்தை திருத்த முன்வந்துள்ளது. கடந்த 2022ல், திருச்சி மாவட்டம் திருசெந்துறை கிராமத்தில், முள்ளிகளப்பூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், தனக்கு சொந்தமான, 1.2 ஏக்கர் நிலத்தை விற்பதற்காக, சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.'இங்குள்ள நிலத்தை விற்க வேண்டும் என்றால், தங்களிடம் தடையின்மை சான்று பெற வேண்டும்' என தமிழக வக்பு வாரியம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பதிவுத்துறை தலைவர் இந்த அறிவிக்கையை பிறப்பித்தது தெரிய வந்தது. இதேபோல, பல கிராமங்களி லும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, திருச்செந்துறை கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ள நிலமும், வக்பு வாரிய பட்டியலில்இருப்பதாகக் கூறியதால், இப்பிரச்னை பெரிதானது. 2022ம் ஆண்டு செப்டம்பரில், பதிவுத்துறை உயரதிகாரிகள், வக்பு வாரிய சொத்து என்ற அறிவிக்கையை திரும்பப் பெற்று, பத்திரப்பதிவுகளை தொடர அனுமதித்தனர்.'வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று, ஒரு சொத்து குறித்து கடிதம் அளிப்பதற்கு, சட்ட ரீதியாக முறையான வரையறைகள் இல்லை. எனவே, வக்பு வாரியத்தில் இருந்து வரும் கடிதங்கள் அடிப்படையில், பத்திரப்பதிவை நிறுத்தக் கூடாது என, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என பதிவுத்துறை தெரிவித்தது.

நம் நாளிதழ் செய்தி

ஒரு சொத்து மீது உரிமை கொண்டாட முன்வரும் நபரிடம், அதற்கான சட்டப்பூர்வ ஆவணம் இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்று ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், வக்பு வாரிய அதிகாரிகள், கள ஆய்வு அறிக்கை என்ற பெயரில் சொத்துக்களை உரிமை கொண்டாட அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதை முறையாக, சர்வேயர்கள் வைத்து அளந்து உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் இன்றி சொத்துக்களை வக்பு வாரியம் பட்டியலிட்டதே பிரச்னைக்கு காரணம். இந்த காரணங்கள் அனைத்தும், 2022 செப்டம்பரில் நம் நாளிதழில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்த பின்னணியில் தான் மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்தம் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M NARAYANAN
ஆக 14, 2024 22:19

இந்து அரசியல்வாதிகளின் சொத்துக்களை வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடினால், அப்போது தெரியும் சேதி


ஆரூர் ரங்
ஆக 10, 2024 17:30

ஒன்பது லட்சம் ஏக்கரில் பெரும்பகுதி முகலாய மன்னர்கள் ஹிந்துக்களிடம் அபகரித்ததாக இருக்கலாம். நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு போக மீதியை விட்டுக் கொடுத்தால் போதும்.


தமிழ்வேள்
ஆக 10, 2024 17:05

நாளை , சென்ட்ரல் ,எழும்பூர் ஸ்டேஷன்கள் , கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ,கருணாநிதி சமாதி போன்றவையும் வக்ப் சொத்துக்கள் என்று நோட்டீஸ் கொடுக்கும்போதுதான் , இந்த திராவிட அரசு விழித்துக்கொள்ளும் போல .


venugopal s
ஆக 10, 2024 14:52

முதலில் இந்த வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களை இல்லாமல் செய்து இழுத்து மூட வேண்டும்!


hari
ஆக 10, 2024 19:10

வேணு... நீங்க நம்ம அமைச்சர் சீக்கரபாபு கிட்ட பேசலாமே....


சிவகுமார்
ஆக 10, 2024 14:49

Similar to the temples and associated lands donated by the Kings of yesteryears, now under the HR


ManiK
ஆக 10, 2024 14:37

திருச்சி கவெக்டர் ஆளுங்கட்சி அழுத்தத்தினால் peace committeனு ஒரு one sided meeting போட்டு பொய் தகவல் தெரிவித்தார். பத்திரப்பதிவு செய்ய wakfboard தடையை நீக்கியுள்ளது என்று கூறி, அந்த area wakfboardக்கு சொந்தம்னு சொல்லாமல் சொல்லியிருப்பது Totally அயோக்யத்தனம்


Bala
ஆக 10, 2024 13:04

சென்னை கோயம்பட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதி அகற்ற ப்படவேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை. எல்லாம் ஓட்டு வங்கி அரசியல். எந்த ஒரு மத வழிபாட்டுத்தலமும் ஆக்கிரமித்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


AMLA ASOKAN
ஆக 10, 2024 12:51

வக்ப் சட்டத் திருத்தம் வேறு எந்த மதத்திலும் இல்லாத கண்டிப்பான வலியுறுத்தல் , இறைவனுக்காக தர்மம் மற்றும் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என இஸ்லாத்தில் கடமையாக்கப் பட்டுள்ளது . அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லீம் தனவந்தர்கள் மற்றும் மன்னர்கள் மசூதிகளின் பராமரிப்புக்காக தங்களது சொத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்களை தானமாக அளித்துள்ளனர் . மசூதி நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்கால் காலப்போக்கில் 80 % சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன . இதை சீர்செய்வதற்காகத் தான் 1923 ஆம் ஆண்டு முஸல்மான் வக்ப் வாரியம் என அமைக்கப்பட்டது . அத்தனை மசூதிகளும் அதன் சொத்துக்களும் வக்ப் சொத்துக்கள் ஆக்கப்பட்டன . இன்று மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவையிலும் வக்ப் வாரிய அமைச்சகங்கள் உள்ளன . மாநில அரசுகளால் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாநில வாரியங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப் படுகின்றனர் . வக்ப் வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றன . அதன் CEO ஆக ஒரு IAS அதிகாரி தான் செயல்படுகிறார் . முஸ்லீம் பெண்மணிகள் நியமிப்பதில் எந்த தடையும் இல்லை . தமிழக வக்ப் வாரியத்தில் இன்றுவரை பெண்களும் தலைவராகவும் CEO ஆகவும் இருந்துள்ளனர். திருச்செந்துரை கிராமத்திலும் வக்ப் சொத்துக்கள் உள்ளன . அந்த கிராமம் முழுவதும் கோவில் உட்பட வக்ப் சொத்து என வக்ப் வாரியம் உரிமை கொண்டாடவேயில்லை .சர்வே நம்பர் குளறுபடியால் ஒரு நபரால் தனது சொத்தை விற்பதில் பதிவு செய்ய முடியவில்லை . மாவட்ட ஆட்சியர் தலையீட்டில் அது சரிசெய்யப்பட்டு விட்டது. இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள் . இந்த புதிய சட்டத்திருத்தம் அவர்களை உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழி வகை செய்யும்.


ஆரூர் ரங்
ஆக 10, 2024 14:54

வக்ஃபு வாரியத் தலைவரே திருச்செந்துறை கோவில்( விவகாரம் வெளிவந்த நேரத்தில்)உட்பட முழு ஊரும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டதுதான் என செய்தியாளர்களிடம் கூறிய வீடியோவைப் பாருங்கள். வடயிந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற பின்னும் வக்ஃபு க்கு ஒன்பது லட்சம் ஏக்கர் எங்கிருந்து கிடைத்தது? (?ஆவணங்களின்றி) வெறும் வாய்மொழியாக வக்பு க்கு சொத்து கொடுத்ததாக வேறு கூறுகிறிர்கள்.இதெல்லாம் நம்பும்படியாக உள்ளதா? வந்தேறிகளுக்கு திமுக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சர்யமில்லை.


seimen
ஆக 12, 2024 20:49

அவரவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் உரியவருக்கு போய் சேர வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வலுக்கட்டாயமாக இவ்வாறு சட்ட திருத்தம் மூலம் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் ஆக்ரமிப்பு செய்ய கூடாது. இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள். அது போல மடத்தான் இடமும் அனுபவித்து கொள்ளலாமே தவிர அதை விற்க முடியாது. பலரது பதிவுகள் ஆரியர்கள் அவர்களது சுய அறிவை எந்த அளவுக்கு மழுங்கடித்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.


vbs manian
ஆக 10, 2024 11:46

அடுத்து மரீனா பீச் வள்ளுவர்கோட்டம் இவைகளுக்கும் உரிமை கோரலாம்.


naranam
ஆக 10, 2024 10:44

தேச துரோகி காங்கிரசால் வலுப் படுத்தப்பட்ட இந்த கொள்ளைச் சட்டம் உடனடியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். முழு மெஜாரிட்டி அரசாக இருந்த்போதே பிரதமர் மோடி இதைச் செய்திருக்க வேண்டும். அதையே தற்போது செய்ய முயல்வது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல உள்ளது..


AMLA ASOKAN
ஆக 10, 2024 13:08

எந்த ஒரு சொத்தையும் எவ்வித ஆவணங்கள் இல்லாமல் யாராலும் அபகரிக்க முடியாது . இது இந்திய அரசின் சட்டம் . வக்ப் வாரியம் அடாவடியாக எந்த ஒரு சொத்தையும் கைப்பற்றியதாக எந்த ஒரு இடத்திலும் நடைபெறவில்லை. வக்ப் TRIBUNAL அல்லது CIVIL COURT அப்படி எந்த ஒரு தீர்ப்பையும் வழங்கியதில்லை மசூதி சொத்தோ கோவில் சொத்தோ ஆக்கிரமப்பாளர்கள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட வேண்டும் என்பது தான் நமது குறிக்கோள் . இது வரையில் வக்ப் சொத்து ஆக்கிரமப்பாளர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர விற்கவும் பதிவு செய்யவும் முடியாமல் இருந்தார்கள் . இந்த புதிய சட்டத்திருத்தம் அவர்களை உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழி வகை செய்யும் .


மேலும் செய்திகள்