வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டிஜிட்டல் அரெஸ்ட் ஈடுபடும் மர்ம கும்பல்கள் மீது நடவடிக்கை தேவை அவர்களை தூக்கிலிடவில்லை
சென்னை: மும்பை போலீசாக நடித்து மிரட்டி, பெண்ணிடம் ரூ.4.67 கோடி பறித்த 15 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.52.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரிடம் மர்ம நபர்கள் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் மும்பை போலீஸ் போல போனில் பேசியுள்ளனர். அந்த பெண் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறிய மிரட்டியுள்ளனர். மும்பை போலீஸ் அதிகாரிகள் போல் பேசிய அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரில் போதைப் பொருட்கள், போலி பாஸ்போர்ட்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள், புலித்தோல் கொண்ட பார்சல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணைக்கு 2 மணி நேரத்தில் மும்பை போலீசில் ஆஜராக வேண்டும்; இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள், சிறை செல்ல நேரிடும் எனவும் மிரட்டியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண், மிகவும் பயந்து விட்டார். அந்த பெண்ணிடம், அந்த நபர்கள் வீடியோ அழைப்பில் பேசியுள்ளனர். தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டியதால், தனது வங்கி கணக்கு விவரங்களை அந்த பெண் கொடுத்து விட்டார். அதன்படி அவரது வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்கில் இருந்த பணம் என மொத்தம், 4.67 கோடி ரூபாயை, அந்த நபர்கள் கூறிய கணக்குகளுக்கு அனுப்பி விட்டார். பணத்தை பெற்ற பின்னர் மர்ம நபர்கள் செல்போன் தொடர்புகளை துண்டித்துவிட்டனர். அதன் பிறகே தன்னை யாரோ மர்ம நபர்கள், ஏமாற்றி மிரட்டி பணம் பறித்து விட்டதாக சந்தேகம் அடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் சென்னை மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பெண்ணிடம் மும்பை போலீஸ் போல நடித்து பணத்தை அபேஸ் செய்த 15 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மும்பையில் உள்ள குற்றவாளிகளின் வீட்டில் இருந்து ரூ.52,68,000 மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எச்சரிக்கை
'எந்தவொரு மாநில காவல் துறையோ சி.பி.ஐ., டிராய் போன்ற அரசு துறை சார்ந்த அதி காரிகளோ இதுபோன்று ஸ்கைப், வாடஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து டிஜிட்டல் கைது செய்து விசாரணை செய்வதில்லை. ஆனால் சிலர் இதை உண்மை என்று நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்' என்று சென்னை கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய சைபர் குற்றங்கள் மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலை தள https://cybercrime. gov.in-ல் புகார் தெரிவிக்கலாம்.
டிஜிட்டல் அரெஸ்ட் ஈடுபடும் மர்ம கும்பல்கள் மீது நடவடிக்கை தேவை அவர்களை தூக்கிலிடவில்லை