உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரிசி விலை உயர்வில் தவறில்லை; சொல்கின்றனர் வணிகர்கள்

அரிசி விலை உயர்வில் தவறில்லை; சொல்கின்றனர் வணிகர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சியில், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி சம்மேளனத் தலைவர் துளசிங்கம், மாநில செயலர் மோகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 25 கிலோ மற்றும் அதற்கும் கீழ் உள்ள, பையில் அடைக்கப்பட்ட அரிசிக்கு, மத்திய அரசு ஜி.எஸ்.டி., விதிக்கிறது. இதனால், 1 கிலோ அரிசி கூடுதலாக சேர்த்து, 26 கிலோ அரிசி பையாக விற்பனை செய்ய வேண்டி உள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்ட 1 கிலோவுக்கும் சேர்த்து விலை வைப்பதால், அரிசி விலை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, அரிசிக்கான, 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை முழுமையாக விலக்க வேண்டும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அரிசி வரத்து இருப்பதால், தட்டுப்பாடு இல்லை. மற்ற பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதோடு, விவசாய கூலி மற்றும் இடு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன.அரசு தரப்பிலும், விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்கப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டால், அரிசி விலை உயர்வு இயல்பானது தான்; விலை குறைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

spr
மே 01, 2024 18:15

"தற்போது விற்பனை வரி என்று எந்த மாநிலத்திலும் கிடையாது பொருள் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி போன்ற அனைத்து வரிகளும் சேர்ந்து ஒரே வரியாக GST என்ற பெயரில், பொருளை வாங்குவோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது


Saai Sundharamurthy AVK
ஏப் 30, 2024 19:03

வணிகர்கள் என்பவர்கள் யார் ???? புரோக்கர்கள் தானே ! தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொண்டால் எப்படி ???


N DHANDAPANI
ஏப் 30, 2024 10:27

பொதுமக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில் விவசாயிகளிடமிருந்து விசா வசூலிக்கப்படும் ௦ ரூபாய் கட்டணத்தையும், சதவீத அடிப்படையில் லாபம் வைக்காமல் ரூபாய் அடிப்படையில் வைத்தும் வணிகர்கள் உதவலாமே?


Devan
ஏப் 30, 2024 06:04

சாமானிய மக்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை அவனுக்கு எப்படி பணம் வரும் விலைவாசி உயர்வு போல் வரும் பணமும் உயர்ந்தால் பரவாயில்லை அது நிரந்தரமாக இரண்டு வருடங்களுக்கு முன்பைப் போலவே இருக்கிறது எல்லோருக்கும் தன் நலம்தான் முக்கியம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ