வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கொள்ளையோ kollai
ஆவினின் அவலங்கள்
சென்னை: 'மொத்த பால் குளிரூட்டு மையங்களில் நடக்கும் கலப்படத்தை மூடிமறைக்கும் முயற்சி, ஆவின் நிர்வாகத்தை சீர்குலைத்து விடும்' என, ஆவின் பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில், தினமும் 4,000 லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்தது. இந்த பால், கோப்பம்பட்டி குளிரூட்டும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து, டெம்போ வாகனத்தில் மதுரைக்கு எடுத்துச் செல்லும் வழியில், பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.கடந்த மார்ச் 13ல், பால்வள மேம்பாட்டு விரிவாக்க அலுவலர் நடத்திய ஆய்வில், இந்த முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஒப்பந்த வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டது. பால் கலப்படம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, முறைகேட்டை கண்டறிந்த அலுவலர், உசிலம்பட்டிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.மீண்டும் கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட அலுவலர் வெளியிட்ட வீடியோவால், தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுதும், ஆவின் பால் மொத்த குளிரூட்டும் மையங்கள், புரோக்கர் பிடியில் சிக்கி, தங்கு தடையின்றி முறைகேடு நடந்து வருகிறது. இதுகுறித்து, பால்வளத்துறை அமைச்சர், ஆவின் நிர்வாக இயக்குனர், ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு புகார் தெரிவித்தும், ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை. இந்தச் செயல், பால் கலப்படத்தை மூடி மறைப்பதுடன், ஆவின் நிர்வாகத்தை சீர்குலைத்து விடும். இனியாவது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.
கொள்ளையோ kollai
ஆவினின் அவலங்கள்