உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் என்னென்ன?

த.வெ.க., மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் என்னென்ன?

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி அளித்துள்ள போலீசார், பாதுகாப்பை உறுதி செய்ய, கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

மாநாட்டுக்கு போலீசார் விதித்துள்ள 33 நிபந்தனைகள் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்க உள்ள மாநாட்டின் மேடை, இடம், தேசிய நெடுஞ்சாலையோர பார்க்கிங் வசதிகளின் வரை படங்கள் கொடுக்க வேண்டும்.அனுமதி கேட்டபோது 1.50 லட்சம் பேர் வருவர் என குறிப்பிட்டுவிட்டு, தற்போது, 50,000 பேர் வருவர் என்பதால், 50,000 பேர் கூட்ட அளவுக்கு தான் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். மாநாடு மதியம் 2:00 மணிக்கு என குறிப்பிட்டுள்ளதால் கூட்டத்தை மதியம் 1:30 மணிக்குள் வந்துவிட செய்ய வேண்டும்.வெளி மாநில, மாவட்டங்களில் யார் தலைமையில், எவ்வளவு பேர் வருகின்றனர் என்ற விவரம் வேண்டும். அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். 50,000 பேர் வருவர் என்று கூறிவிட்டு, வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக குறிப்பிட்டுள்ளீர். மாநாட்டிற்கு செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக இல்லாமல் சீரமைக்க வேண்டும்.மாநாடு நடைபெற உள்ள நில பரப்பளவு 85 ஏக்கர் என்பதால், மாநாடு மேடை, வருபவர்கள் அமரும் இடம் தவிர, பிற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும். பார்க்கிங், இடத்திற்கும், மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும்.கர்ப்பிணி, முதியோர்களுக்கு தனி இடம், விஜய் வந்து செல்லக்கூடிய வழியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிணறுகள் உள்ளதால், அந்த பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையொட்டிய பகுதியில் மாநாட்டிற்கு வருவோர் கடந்து செல்லாதவாறும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாட்டை நடத்த வேண்டும். பார்க்கிங் பகுதியிலிருந்து, மாநாட்டு இடத்திற்கு வருவதற்கான பாதுகாப்பிற்கு, தன்னார்வளர்களைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.கொடி கம்புகள், அலங்கார வளைவால், பேனர்கள் கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைக்கு வாய்ப்புள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு தயாராக இருக்க வேண்டும்.பொதுப்பணித்துறை பொறியாளரிடம் மேடையின் உறுதி தன்மையை பெற வேண்டும். மின் துறை, தீயணைப்புத் துறையிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும். கூம்பு ஒலிபெருக்கி, வாணவேடிக்கை கூடாது.மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜயுடன் வருபவர்கள் என யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது; விபரங்களை ஒப்படைக்க வேண்டும். எல்.இ.டி., திரைகள் அமைக்க வேண்டும்.மாநாட்டு திடலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு, மருத்துவக் குழு வாகனங்கள் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதோடு, அதற்கான பதிலையும் அளிக்கும்படி காவல்துறை கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
செப் 09, 2024 14:35

இது போல இன்னும் சில பல நிபந்தனைகளை விதித்து தங்களது அடிமை புத்திசாலி தனத்தை காட்ட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை