உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் வருவாரா?: டில்லி உஷ்ஷ்ஷ்

மீண்டும் வருவாரா?: டில்லி உஷ்ஷ்ஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினம், 3ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது அமைச்சக அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். இவருடைய அமைச்சகத்தில், 45 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐந்து செயலர்கள் பணியாற்றுகின்றனர்.'இன்று எனக்கு இந்த அமைச்சகத்தில் அமைச்சராக என்னுடைய கடைசி நாள். மீண்டும் அமைச்சராக வருவேனா என்பது தெரியாது. வராமல் கூட இருக்கலாம்; மேலும், வீட்டையும் காலி செய்து விடுவேன்' என, கூறி அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார் நிர்மலா.'மூன்றாவது முறையாக நிச்சயம் மோடி பிரதமராக வருவார்; அதில், எந்த சந்தேகமும் கிடையாது. வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என தெரியாது' என்றாராம் அமைச்சர்.நிதி அமைச்சகத்தின் செயலர் சோமநாதன்; இவர் தமிழர். 'எதற்கு இவ்வளவு சீக்கிரம் தேநீர் விருந்து கொடுத்து விடை பெறுகிறீர்கள்?' என, தமிழிலேயே நிதி அமைச்சரிடம் கேட்டாராம் சோமநாதன்.'நான் அமைச்சர் பதவியில் தொடர்வேனா என்பது பிரதமர் மோடியின் விருப்பம். அவர் தான் முடிவு செய்ய வேண்டும்' என, பதில் கூறினாராம் நிர்மலா.மற்ற மத்திய அமைச்சர்கள் யாரும் தன் அமைச்சக அதிகாரிகளுக்கு தேரீர் விருந்து கொடுத்து விடைபெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Swaminathan R
ஜூன் 10, 2024 11:42

தலை எழுத்து


Ramaswamy
ஜூன் 10, 2024 10:25

தலை வணங்கிறோம் உங்கள் நேர்மையான எண்ணத்திற்கு. உங்கள் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. உங்களுக்கு மந்திரி பதவி தராவிட்டால், மோடி ஜீ பெரிய ஒரு தவறு செய்கிறார் என ஆகும். மோடிஜி நியாயம் செய்வார்.


Venkatesh
ஜூன் 09, 2024 20:22

முட்டி மூளைக்கே இப்படியா?


Sankara Subramaniam
ஜூன் 09, 2024 14:42

இது தான் கௌரவமான மரியாதைமிக்க செயல் எதுவும் நிரந்திரமில்லை இவ்வுலகில்


Anwar
ஜூன் 09, 2024 13:30

யாரு இந்த?


C Arumugam
ஜூன் 09, 2024 15:42

தேர்தலில் போட்டியிடாமல் எத்தனை ஆண்டுகள் மந்திரியாக இருப்பார்கள்.


Jai
ஜூன் 09, 2024 12:57

வேறு மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இவர் தமிழர் என்பதை வைத்து தமிழ்நாட்டிற்கு கட்சி அளவில் பலன் கிடைக்கவில்லை. இதே பதவியை அண்ணாமலை அவர்களுக்கு கொடுத்தால் அந்தப் பதவிக்கான வேலைகளை சிறந்த முறையில் செய்து முடிப்பார். மேலும் தமிழ்நாட்டிற்கு கட்சி பலப்படுத்துவதற்கு உதவும். இவருக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகாவில் கேரளாவில் மும்பையில் மற்றும் டெல்லியில் பிரச்சாரம் செய்து கட்சிக்கு வலுவூட்டியவர் அண்ணாமலை. நிர்மலா சீதாராமன் அவ்வாறு செய்திருக்கவில்லை.


venkatakrishna
ஜூன் 09, 2024 11:37

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அது போன்று தனித்தன்மை மற்றும் கடின உழைப்பும் கொண்டவருமான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 11:23

கொரோனா ஊரடங்காலும் இஸ்ரேல் உக்ரேன் போர்கள் காரணமாகவும் உலக நாடுகளனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி தொடர்கிறது.ஜப்பானிய யென் நாணய மதிப்பு கூட சரிகிறது. ஆனால் இந்நிலையிலும் பாரத வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. நன்றி கெட்ட ஜென்மங்கள் மட்டுமே நிர்மலா அவர்களுக்குத் எதிராக இருக்கும். ஒரு பெண் பெரிய பதவியில் இருப்பது பல ஆணாதிக்க ஆட்களுக்கு பொறுக்கவில்லை.


ஆந்திராபாபு
ஜூன் 09, 2024 10:06

இதுக்குதான் இப்பவே நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போடறேன்னு கெளம்பியிருக்கக் கூடாது. தவிர உங்கள் கணவரே உங்களுக்கு சத்துரு. போயிட்டு இன்னும் 98 வருஷம் கழிச்சு வாங்க பாப்பம்.


Suppu Nachi
ஜூன் 10, 2024 10:12

Any reply now


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 10:00

நடுத்தர வருவாய்ப் பிரிவினரை அடித்துத் துவைத்த அமைச்சகம் .......


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 11:26

இலவச தடுப்பூசிகள், முத்ரா கடன்கள், புதிய வருமான வரிப் படிவத்தின்படி ஏழு லட்சம் வரை வரிவிலக்கு, போன்றவற்றால் பலனடைந்த நடுத்தர மக்கள் ஏராளம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை