உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாய்க்கடியால் 3.10 லட்சம் பேர் பாதிப்பு

நாய்க்கடியால் 3.10 லட்சம் பேர் பாதிப்பு

சென்னை: சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும், 5 லட்சம் வரை தெரு நாய்கள் இருக்கக் கூடும் என, கூறப்படுகிறது. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மாநிலம் முழுதும், 25 லட்சம் வரையிலான தெரு நாய்கள் இருக்கலாம் என, கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி முதல் ஜூன் வரை நடந்துள்ள நாய்க்கடி சம்பவங்கள்: மாவட்டங்கள் - நாய்க்கடி பாதிப்பு - ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு அரியலுார் - 3,768 - 0 செங்கல்பட்டு - 13,064 - 0 சென்னை - 5,970 - 0 கோவை - 8,690 - 1 கடலுார் - 8,567 - 1 தர்மபுரி - 3,056- 0 திண்டுக்கல் - 7,372 - 0 ஈரோடு - 8,725 - 0 கள்ளக்குறிச்சி - 6,194 - 0 காஞ்சிபுரம் - 9,747 - 1 கன்னியாகுமரி - 10,580 - 2 கரூர் - 5,387 - 0 கிருஷ்ணகிரி - 5,214 - 0 மதுரை - 6,633 - 2 மயிலாடுதுறை - 2,197 - 0 நாகப்பட்டினம் - 2,360 - 1 நாமக்கல் - 8,689 - 1 பெரம்பலுார் - 2,350 - 0 புதுக்கோட்டை - 10,482 - 0 ராமநாதபுரம் - 8,244 - 0 ராணிப்பேட்டை - 4,406 - 1 சேலம் - 19,250 - 1 சிவகங்கை - 10,310 - 2 தென்காசி - 4,535 - 0 தஞ்சாவூர் - 11,441 - 0 தேனி - 3,317 - 1 நீலகிரி - 1,624 - 0 திருவள்ளூர் - 10,478 - 1 திருவாரூர் - 10,353 - 0 திருச்சி - 11,371 - 0 திருநெல்வேலி - 5,906 - 0 திருப்பத்துார் - 9,005 - 0 திருப்பூர் - 5,728 - 0 திருவண்ணாமலை - 6,925 - 3 துாத்துக்குடி - 6,858 - 0 வேலுார் - 4,725 - 0 விழுப்புரம் - 7,936 - 0 விருதுநகர் - 8,236 - 0 மொத்தம் - 2,79,693 - 18 * கடந்த ஜூலையில் இருந்து, இம்மாதம் 10ம் தேதி வரை, 30,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 3.10 லட்சம் பேர் வரை, இதுவரை பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆண்டு வாரியாக நாய்க்கடி 2023 - 4.40 லட்சம் 2024 - 4.80 லட்சம் 2025 - 3.10 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 13, 2025 21:23

தெரு நாய்களுக்கு பரிதாபம் பார்க்கும் சிலர் இந்த செய்தியை முதலில் படிக்கவேண்டும்.


ever king
ஆக 12, 2025 06:21

நாய் வளர்ப்பதை தங்களது கௌரவமாக நினைத்து தங்களுக்கும் பிறருக்கும் உயிராபத்தை விளைவிப்போர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது. தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம். MBBS., M.D., அவர்கள் விவரிக்கும் இந்த பயங்கரத்தை படிப்பீர் பகிர்வீர். இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக பார்த்ததுண்டு . ஆனால் கடந்த வாரம் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை. அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்க பட்டிருக்கிறார். 40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய் ! அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர் .!! அந்த நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது. 40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த வளர்த்த நாயால் எதேட்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது மரணமடைந்தார் . தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன. அவரது குழந்தைகள் ,கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு அவர் இறந்த அந்த இரவும் ,அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது. அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்க பட்ட போதுஅவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில். வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும்,யாருக்கும் நிகழக் கூடாது. எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் #ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும் ,அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் " இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் கவனமாக இருங்கள் அல்லது நாய் வளர்க்காதீர்கள் ஏனேனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் .( mortality is 99.9percentage) இந்த வாரம் என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது. முடிந்த வரை நாய்கள் வளர்ப்பதை உங்கள் வீட்டில் மட்டுமல்ல பக்கத்து வீடுகளில் கூட கண்டிப்பாக தவிர்க்கவும் தடுக்கவும் செய்வீர்.. தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம்., MBBS., M.D., அவர்களின் இந்த எச்சரிக்கை பதிவை உடனடியாக அனைவருக்கும் பகிர்வீர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை