உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்கள் இல்லை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்கள் இல்லை

நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 50 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. நாட்டில் உள்ள, 25 மண்டலங்கள் மற்றும் வெளிநாடுகள் என, 1,287 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த பள்ளிகளில், 1.36 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக, இந்த பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையில், 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதிலும், பல பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பள்ளிகளில் பயிலும், மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, கே.வி., பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

மத்திய கல்வித் துறை கீழ் இயங்கும் கே.வி., பள்ளிகள் மட்டுமின்றி, ஜவஹர் நவோதயா பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இது தற்போது, 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பள்ளிகளிலும், 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், மாநில அரசு பள்ளிகள், சுயநிதி பள்ளிகளும் அடங்கும். சமீபத்தில், டில்லியில் நடந்த கல்வி அமைச்சக கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து விவரிக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களை பின்பற்றி, இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளதால், தாமதம் ஆவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடுத்த கல்வியாண்டுக்குள், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Kalai
ஆக 21, 2025 06:38

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க 7 வயது தொடங்க 31.03.26 தேதிக்குள் பிறந்திருந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்றால், 29.04.26 தேதியில் 7 வயது தொடங்கும் குழந்தைக்கு 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்க முடியும் என்ற விதியை மாற்ற வேண்டும்


Ramesh Kalai
ஆக 21, 2025 06:27

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க 31.03.26 ம் தேதிக்குள் 7 வயது தொடங்கி இருக்க வேண்டுமாம்... ஆனால் 29.04.26 ம் தேதியில் 7 வயது தொடங்கும் குழந்தைக்கு ஒரு மாதம் வித்தியாசத்தில் ஒரு வருடம் கழித்து தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க முடியும் என்றால் அந்த குழந்தைக்கு 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்க முடியும்.... இது போன்ற விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்....


ManiMurugan Murugan
ஆக 20, 2025 20:01

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது அதற்கு ஆசிரியர்கள் நியமனம் மாநில அரசு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.


Varadarajan Desikan
ஆக 20, 2025 19:53

பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில அவர்களை பணி அமர்த்தாமல் இருக்கும் அரசுக்கு,கல்வி விஷயத்துல உண்மையான அக்கறை இல்லை என்று தெரிகிறது


venugopal s
ஆக 20, 2025 17:47

மத்திய பாஜக அரசை ரொம்ப கேள்வி கேட்டீர்கள் என்றால் அப்புறம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளையும் அதானி ,அம்பானிக்கு விற்று விடுவார்கள்!


அப்பாவி
ஆக 20, 2025 17:29

வாட்ஸப் யூனிவர்சிட்டி கூட இருக்கு. ஆளாளுக்கு பாடம் எடுப்பாங்க. செலவை மிச்சப்படுத்தத்தான் ஆசிரியர்கள் நிதமனம் இல்லையாம். கர்த்தவ்ய பாடசாலா.


என்னத்த சொல்ல
ஆக 20, 2025 16:44

இதைப்பற்றியெல்லாம் அண்ணாமலை கருத்து சொல்லமாட்டார். இதே தமிழக அரசு பள்ளியா இருந்தால், கருத்து என்ற பேரில் வசவுகள் குவியும்..


sankar
ஆக 21, 2025 00:57

இன்னிக்குதான்டா செய்தி வந்திருக்கு அப்புறம் ஐப்ப்டி அண்ணாமலை பேச முடியும் .????


ஆரூர் ரங்
ஆக 20, 2025 15:17

ஹிந்தி கட்டாய பாடமாக உள்ள இந்த கேந்திரிய பள்ளிகளில் சேர விரும்பும் பல மாணவர்களுக்கு திராவிஷ எம்பிக்கள் சிபாரிசு கடிதம் அளிப்பது வழக்கம்.


குரு, நெல்லை
ஆக 20, 2025 14:22

கல்வி தரம் 5 ஆம் வகுப்பு வரை சுமாராகத்தான் உள்ளது. ஒன்றிரண்டு பள்ளிகளில் மட்டும் 80 சதவிகிதம் ஆசிரியர்புள்ளனர். சில பள்ளிகளில் 50 சதவிகிதம் ஆசிரியர் பகுதி நேர ஊழியர்களாக உள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் நன்றாக பாடம் எடுக்கின்றனர். மதுரை நரிமேடு பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் மூத்த ஆசிரியர்கள் சிலர் சுமாராகவே செயல் படுகின்றன.


Ramesh Sargam
ஆக 20, 2025 11:50

10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. மத்திய அரசு இதற்கு உடனே ஒரு நிரந்தரமுடிவு காணவேண்டும், மாணவர்களின் நலனைக்கருதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை