உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 93,000 இடங்கள் காலி: வேலைவாய்ப்பு குறைவால் மாணவர்களிடம் ஆர்வம் சரிவு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 93,000 இடங்கள் காலி: வேலைவாய்ப்பு குறைவால் மாணவர்களிடம் ஆர்வம் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டு, 93,000 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மாணவர்கள் இடையே டிப்ளமா படிப்பு மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது. டிப்ளமா முடித்தவர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பின்மையே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த கல்வியாண்டில், மொத்தமுள்ள 1 லட்சத்து 43,499 இடங்களில், வெறும் 58,426 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதாவது மொத்த இடங்களில், வெறும் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின; 85,073 இடங்கள் காலியாக இருந்தன. இதன் எதிராலியாக, இந்த கல்வியாண்டில் 30 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூடப்பட்டன; 50 கல்லுாரிகள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. அந்த வகையில், இந்த கல்வியாண்டில் 55 அரசு கல்லுாரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 321 தனியார் கல்லுாரிகள் மட்டுமே, முதலாம் ஆண்டில் மாணவர்களை சேர்த்துள்ளன. இதற்கான கவுன்சிலிங், கல்லுாரிகளில் நேரடியாக நடந்து வருகிறது. கவுன்சிலிங் துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 40,205 இடங்களில், இதுவரை 46,862 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 93,343 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்ப, மாணவர்களுக்கு, அந்த கல்வியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: டிப்ளமா படிப்பின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம், தொழில் பயிற்சிகள் அறிமுகம் என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த மாணவர்களையும் டிப்ளமா படிப்புகளில் சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து உயர் கல்வி படிப்புகளுக்கான முதல் கட்ட சேர்க்கை நிறைவு பெற்றவுடன், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, இப்படிப்பில் உள்ள காலியிடங்களில் சேர்ப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய திட்டத்தில் 7000 'சீட்'

குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்த, டிப்ளமா படிப்புகளுக்கு, பிளஸ் 2 வகுப்பில் வணிகவியல் படிப்பை தேர்ந்தெடுத்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் புது திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு டிப்ளமா படிப்பில், பிளஸ் 2 வணிகவியல் மற்றும் கலை படிப்புகளை தேர்ந்தெடுத்த 7000க்கும் அதிகமான மாணவர்களுக்கு, டிப்ளமா நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SUBRAMANIAN T
ஆக 21, 2025 07:00

தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிறதும் ஒரு முக்கிய காரணம் ....அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.3௦௦௦ க்குள் மட்டுமே கட்டணம். தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 40000 முதல் 150000 வரை கட்டணம் ... அதனால் தான் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் முழுமையாக நிரம்பியும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு வந்திருக்கிறது.. மத்திய அரசின் பல புதிய சட்டங்களால் தொழிலாளிகள் அடிமையாக பார்க்கப்படும் நிலையே இருக்கிறது.


Anba Zagan
ஆக 17, 2025 06:17

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே அரசியல்வாதிகளின் அடிப்படைக்கல்வி வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றப்பட வேண்டும்.? நடக்குமா ???


Elango S
ஆக 16, 2025 20:16

கல்லூரி ஆரம்பித்தார்கள் கல்லா கட்டினார்கள் இனி என்ன நிலங்களை விற்கலாம் நல்ல விலைக்கு


suresh guptha
ஆக 16, 2025 16:14

NO VACANCY IN TASMAC


PSTN
ஆக 16, 2025 06:48

பாலிடெக்னிக் படிப்பை டிகிரி படிப்பாக மாற்றினால் தான் மாணவர்கள் சேருவார்கள். பிறகு நல்ல நல்ல வேலைகள் கிடைக்கும்.. அதுவரை No


Saai Sundharamurthy AVK
ஆக 15, 2025 19:56

10 2 3 கலை, அறிவியல் படிப்புகள் என்பது 10 3 டிப்ளமோ படிப்புகளை விட மிக மிக மிக.......மோசம். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும், கிடைக்கும் சம்பளமோ வயிற்று பசிக்கும், போக்குவரத்துக்கும் தான் சரியாகி விடுகிறது. பிறகு, குடும்பம், பிள்ளைகள் என்று அவர்களை காப்பாற்றவும் போராட வேண்டும். மருத்துவ செலவுகள், பிள்ளைகளின் படிப்பு செலவுகள் என்று எவ்வளவோ உள்ளது. தன் சுய எதிர்காலத்திற்கு தேவையானதை எதையும் வாங்கி கொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் முன்னேறவும் முடிவதில்லை. அந்த சம்பளத்தில், சொந்தமாக ஒரு வீடு, ஏ.சி, கார் என்று வாங்கி அனுபவிக்க முடியுமா ??? கேட்டால், பொறியியல், மருத்துவம் என்று உயர் படிப்புகள் படித்திருக்க வேண்டும் என்றும், அவனைப் பார், இவனைப் பார் என்று தத்துவம் பேசுவார்கள். ரொம்ப சரி ! அரசியலில் அதுவும் குறிப்பாக திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் 8ஆம், 10 ஆம் வகுப்பை கூட தாண்டாதவர்கள். கோடிக் கணக்கில் கொள்ளையடித்தே சம்பாதிக்கும் இவர்களை தான் மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.....! இல்லையெனில் அரசங்க வேலை, அரசாங்க ஆசிரியர் வேலை என்று அலையும் கூட்டமாக தான் மாறி வருகிறார்கள்.


Muruvi M
ஆக 15, 2025 17:40

Study with age limit candidates


நந்தகோபால், நெல்லை in பெங்களூரு
ஆக 15, 2025 14:27

எங்கு பார்த்தாலும் டிகிரி படித்தவங்களுக்கு மட்டுமே வேலை


ஆரூர் ரங்
ஆக 15, 2025 11:03

கவைக்குதவாத ஏட்டு சுரைக்காய் கலைக் கல்லூரிகளை திறப்பதிலேயே கவனம் செலுத்தும் அரசுக்கு ITI, பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கூடங்களை காப்பாற்றும் திட்டமேயில்லை. பலவற்றில் காலத்துக்கேற்ற புதிய பிரிவுகளும் துவக்கப்படவில்லை. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவுமில்லை . இதன் காரணமாக வட மாநில ஆட்களே குழாய் பதிப்பு, எலக்ட்ரீசியன், தச்சு வேலைகளை செய்கிறார்கள். காலப்போக்கில் அவர்களே பெரிய காண்ட்ராக்ட்களை எடுத்து சுய தொழில் முனைவர்களாக ஆகிவிட்டனர். டிகிரி படித்த தமிழர்கள் டெலிவரி வேலைக்கு சென்று படித்த படிப்பை வீணாக்குகின்றனர்


அப்பாவி
ஆக 15, 2025 10:47

டிப்ளமா இன் பகோடா, அண்ட் சமூசா டெக்னாலஜின்னு படிப்பு சொல்லிக் குடுங்க. வேலை கிடைக்காது. சொந்தமா தொழில் செஞ்சு அசத்தலாம்.


முக்கிய வீடியோ