உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10ம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள்

10ம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த ராஜா (எ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி உள்ளது.புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து விவகாரத்தில் முன்ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; விவேக் ஆகியோர் கடந்த 10ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அடுத்த கருங்குழி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வள்ளியப்பன். 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த இவர், வேலை தேடி கடந்த 2000ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தவர், மருந்து கடையில் வேலை செய்தார். பின், கடலுாரில் ஏஜென்சி எடுத்து, மருந்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.அப்போது, கடலுார் தங்கராஜ் நகரில் தங்கியிருந்த மருந்து விற்பனை பிரதிநிதியான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த கழனிவாசலை சேர்ந்த முருகேசன்,31; என்பவர் அறிமுகமானார். அவர், அளித்த திட்டத்தின்படி வள்ளியப்பன், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை குரோம்பேட்டையில் விலை குறைந்த 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி, அதனை புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் வைத்து லேபிளை கிழித்துவிட்டு, விலை அதிகமுள்ள போலியாக அச்சடித்து வைத்திருந்த 'பெனட்ரில் சிரப்' லேபிளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தார்.இது குறித்த புகாரின் பேரில், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரை கைது செய்து கடலுார் சிறையில் அடைத்தனர். அவ்வழக்கில் 6 மாதம் கழித்து ஜாமினில் வந்த வள்ளியப்பன், அடுத்த சில மாதங்களில் தனது பெயரை ராஜா என மாற்றிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் 'யாசித் பார்மசி' பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து வந்தார்.பின், 2020ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் அபிேஷகப்பாக்கத்தில் 'நியூ ஜெர்ஜி' பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். அதில், போலி மருந்து தயாரித்ததாக ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து அபிேஷகப்பாக்கம் கம்பெனியை கடந்த 2023ம் ஆண்டு 'சீல்' வைத்தனர்.அதன்பிறகு, 2024ம் ஆண்டு திருபுவனைபாளையத்தில் மூடிக்கிடந்த லார்வான் கம்பெனியை ரூ.450 கோடிக்கு விலைக்கு வாங்கி, பிரபல நிறுவனங்களின் அதிகம் விற்பனையாகும் மற்றும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, அதனை புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள தனது ஸ்ரீ சன்பார்மா ஏஜென்சி மூலம், இல்லாத குடோன்களுக்கு அமன் பார்மா மற்றும் மீனாட்சி பார்மா என உரிமம் பெற்று, வட மாநிலங்களுக்கு விற்பனை செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.அதன் மூலம் புதுச்சேரி, மதுரை, கடலுார் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் உள்ளிட்ட பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், 16 வால்வோ பஸ்கள் வாங்கி தமிழகம் முழுதும் இயக்கி வருவதும், மேலும், இவர் தனது தொழிலை விரிவுப்படுத்த அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதும், சமீபத்தில் தனியார் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றிருப்பதும், பல்வேறு மருந்து நிறுவனங்களில் மூலப் பொருட்கள் வாங்கி, அந்த நிறுவனம் பெயரிலேயே மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வந்ததும், மூலப் பொருட்கள் வாங்கியதற்கு பல கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், வள்ளியப்பன் போலி மருந்து தயாரிக்க உதவிய புதுச்சேரி மற்றும் கடலுாரை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள லுாபின் மருந்து நிறுவனம் அளித்த போலி மருந்து புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜா (எ) வள்ளியப்பனையும், அமன் மற்றும் மீனாட்சி பார்மா குடோன்களின் உரிமையாளரான விவேக் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

100 பேருக்கு வலை

போலி மருந்து வழக்கில், இதுவரை ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், ஏஜென்சி உரிமையாளரான வள்ளியப்பனின் மனைவி ஞானப்பிரியா, குடோன் உரிமையாளர்கள், மூலப் பொருட்கள் கொடுத்தவர்கள், மருந்துகளை விற்பனை செய்தோர் என நுாற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பலத்த சந்தேகம்@

@ தொழில் நிறுவனம் துவங்க தொழில் துறை, மின் துறை, உள்ளாட்சி துறை, சுற்றுச் சூழல் துறை, தீயணைப்பு, தொழிலாளர் துறை என பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டியுள்ளது. எளிதாக கிடைத்து விடாது. வள்ளியப்பனுக்கு, அனைத்து அனுமதியும் உடனே கிடைக்க யார்யார் உடந்தை என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mani . V
டிச 15, 2025 05:12

தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பம் என்ன படித்தா இருக்கிறது? பலப்பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆசியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒரு குடும்பம்,


Barakat Ali
டிச 14, 2025 18:33

அண்ணன் இம்புட்டு ஒசரம் வளர காரணம் குடும்பக் கம்பெனிதானே ????


Gnanam
டிச 14, 2025 16:04

கிடைச்ச கமிஷனில் தன் பங்கு எடுத்துகிட்டு மேலிடத்துக்கு கப்பம் கட்டி இருப்பாங்க


Ramesh Sargam
டிச 14, 2025 13:35

இது என்ன இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிக்கூடம் பக்கமே போகாமல், அரசியல் என்கிற சாக்கடையில் குதித்து, அராஜகம் பல செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிக்கிறார்கள். அவர்களையும் பிடிப்பீர்களா...?


SIVA
டிச 14, 2025 12:50

இவர் நல்ல திராவிட மாதிரி வக்கீலை பிடித்தால் இந்த ஒரு காரணத்தை சொல்லி விடுதலை வாங்கி கொடுத்து விடுவார் ...


Saran
டிச 14, 2025 11:04

Earning money by selliing wrong medical ts to the illness. You must be hanged in public.


Saran
டிச 14, 2025 11:04

Earning money by selliing wrong medical ts to the illness. You must be hanged in public.


Iniyan
டிச 14, 2025 10:04

திமுக காரந்தான் இவர்


W W
டிச 14, 2025 09:32

வெட்க கேடு அரசியல் வியாதிகல், சில புல்லுருவிகள் ஆதரவில் இது மாதிரி சம்பவம் நாடகிறது மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இவனிடம் லஞ்சம் வாங்கி உதவிய ட்ராக் இன்ஸ்பெக்டர்ஸ் , ஆபிஸ்ஸர்ஸ், எல்லோருக்கும் அரபு நாடுகளின் தண்டனை கொடுக்க வேண்டும்.


aaruthirumalai
டிச 14, 2025 09:12

ஒன்னுமே புரியல ஆச்சரியமாக அதிர்ச்சியாக உள்ளது. இவனுக்கு ஒத்துழைப்பு ஆதரவு குடுத்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் யார் யார் அவர்களுக்கு என்ன தண்டனை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை