உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

கோவையில் காந்திபுரம், பீளமேடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகளும், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும், அதிகம் பார்க்க முடிகிறது. இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார். இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.தேசிய குற்ற ஆவண காப்பக (என்.சி.ஆர்.பி.,) 2023 டிச., மாதம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இந்தியாவில் இதுவரை மொத்தமாக பதிவான புகார்களின் படி, 47,000க்கும் மேல் குழந்தைகள் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும், அதில் 71.4 சதவீதம் மைனர் பெண் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே போன்று, 2022ம் ஆண்டில் மட்டும், 83,350 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டு, 80, 561 பேரை கண்டுபிடித்துள்ளனர்; 2789 குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் புகார்களில் சுமார், 90 சதவீதம் கடத்தப்பட்ட பதிவாகவே உள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதுபோன்ற புள்ளிவிபரங்களை பார்க்கையில், சிக்னலில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் குழந்தைகளும், கடத்தப்பட்டுதான் இருப்பார்களோ என்ற அச்சம் எழாமல் இல்லை. அந்த குழந்தைகள் மீது பரிதாபப்பட்டு, பண உதவி செய்வதை, ஒட்டுமொத்தமாக நாம் நிறுத்திக்கொண்டால் மட்டுமே, இது போன்ற கடத்தல்களை தடுக்க முடியும்.இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து, யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார்.இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.

அழைக்க வேண்டிய எண்

கண்டால் அழைக்க வேண்டிய எண் '1098'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா கூறுகையில், '' குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது கூடாது. இதுபோன்ற புகார்கள் வந்தாலோ, நாங்கள் பார்த்தாலோ அவர்களுக்கு உடனடியாக தங்கும் வசதிகளை மேம்படுத்தி, மேற்கொண்டு இதில் ஈடுபடாத வகையில் கண்காணிப்போம். குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதை கண்டால், பணம் கொடுக்காமல், 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Krishnamurthy Venkatesan
ஜன 26, 2025 13:12

தெருவில் கழைக்கூத்தாடி பெண்கள் கையில் 6 மாத குழந்தை, கர்ப்பவதி, யாசகம் கேட்கும் 4 வயது பெண் குழந்தை என சுற்றி வருகிறார்கள். பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


Ganapathy Subramanian
ஜன 21, 2025 10:00

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மக்கள்தான் போன் செய்யவேண்டுமா? எல்லா சிக்னலிலும் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தெரியாமல் பிச்சைக்காரர்கள் யாரும் பிச்சை எடுப்பதில்லையே? அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி கிடையாதா அல்லது பிச்சைக்காரர்களிடமும் பிச்சை எடுத்து போலீசார் பிழைப்பு நடத்துகிறார்களா?


Karthik
ஜன 20, 2025 18:48

தயவுசெய்து யாரும் அந்த குழந்தைகள் மீது பரிதாபப்பட்டு, பண உதவி செய்யாதீங்க, ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் காசு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்கள் மாற்று வேலை தேடி செல்வதுடன், இது போன்ற குழந்தை கடத்தல்களும் தடுக்கப்படும்.


shakti
ஜன 20, 2025 14:12

இந்தியாவில் குழந்தைகள் கடத்தப்படுவது இரண்டு பேருக்காக ... 1. பிச்சைக்காரர்கள் பரிதாபம் தேட 2. அனாதை இல்லங்கள் எண்ணிக்கை கூட்டி காட்டினால் டொனேஷன் அதிகம் கிடைக்கும் .. இந்த இரண்டையும் தடை செய்தால் குழந்தை கடத்தல் பெருமளவில் குறையும்


Ramesh Sargam
ஜன 19, 2025 21:10

நாட்டில் பல மாநகரங்களில் கூட இதே நிலைதான். குழந்தைகள் நல வாரியம் என்று எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அவர்கள் ஏன் அந்த குழந்தைகளை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி உதவி செய்யக்கூடாது.


theruvasagan
ஜன 19, 2025 21:02

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம். தண்டனைக்குரியது. ஆனால் சிசுக்களை கஷ்டப்பட வைத்து சம்பாதிக்கும் இத்தகைய செயல்கள் குற்றமாகாதா. அதற்கு தண்டனை இல்லையா. நமது சட்டங்கள் உளுத்துப்போன மரச்சட்டங்களாக இருக்கும்வரை நாடு வளராது. சமுதாயம் முன்னேறாது.


நிக்கோல்தாம்சன்
ஜன 19, 2025 20:26

இவர்களிடமும் வசூலித்து விடும் டாஸ்மாக் கழக தொண்டர்களும் , காவலர்களும் என்று ஒரு படமே எடுக்கலாம்


Ram pollachi
ஜன 19, 2025 19:51

இவங்க குழந்தைகளாக இருக்க வாய்ப்பு அதிகம்... வயிற்றில் ஒன்று இடுப்பில் ஒன்று இருக்கும்... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஊராக போய் யாசகம் கேட்டு சாப்பிடுவார்கள் இவர்கள் ஆண்கள் துணை இல்லாமல் சுற்றி சுற்றி வருவார்கள் பழைய துணி இருந்தால் கொடுங்கள் என்பார்கள் பார்க்க அழகாக ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையுடன் அனைவரும் இருப்பார்கள்.....


சண்முகம்
ஜன 19, 2025 16:30

இந்த பெண்களை விசாரிக்காமல் வெறும் அறிக்கை விடும் காவலர்களுக்கு கமிஷன் எவ்வளவு?


அப்பாவி
ஜன 19, 2025 18:43

கிடைக்கிற பிச்சையில் 40 பர்சண்ட்.


முக்கிய வீடியோ