உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேசிய பாதுகாப்பு படையினருடன் ஆதவ் டில்லி பயணம்: த.வெ.க.,வின் அடுத்த கட்ட மூவ் என்ன?

தேசிய பாதுகாப்பு படையினருடன் ஆதவ் டில்லி பயணம்: த.வெ.க.,வின் அடுத்த கட்ட மூவ் என்ன?

சென்னை:தேசிய பாதுகாப்பு படையினருடன், ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுஉள்ளதால், திடீர் பரபரப்பு எழுந்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, கரூர் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kiav9u84&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் செய்தி தொடர்பு பிரிவு துணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தேடுவதை அறிந்து, இருவரும் தலைமறைவாகி விட்டனர். புதுச்சேரியில், போலீஸ் பாதுகாப்பு மிகுந்த முக்கிய புள்ளி ஒருவரின் அரசு பங்களாவில், ஆனந்த் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அவரை கைது செய்ய முடியாமல், தமிழக போலீசார் புதுச்சேரியை சுற்றி வருகின்றனர். இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, த.வெ.க., பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தன் சமூக வலைதள பக்கத்தில், ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில், 'இலங்கை, நேபாளம் போல மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்திய இறையான்மைக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக கூறி, அவர் மீது ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், விஜய் ஏற்பாடு செய்த தனி விமானத்தில், சென்னையில் இருந்து, கடந்த 1ம் தேதி ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுள்ளார்; அவருடன் ஐந்து பேரும் சென்றுள்ளனர். இதில் இரண்டு பேர், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள். இவர்கள், விஜய் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக வழக்குப்பதிவான நிலையில், தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன், ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுள்ளது, புது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உச்ச நீதிமன்றத்தை த.வெ.க., நாடவுள்ளது. இது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கவே, ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுஉள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவு சீனியர் வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் ஆகிய இருவரையும், தங்கள் தரப்புக்கு வாதாட வைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சிக்கிறார். இருவரும் ஒப்புக் கொள்ளாதபட்சத்தில், வேறு ஒரு சீனியர் வழக்கறிஞரை நாட உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய புள்ளியின் நிர்பந்தத்தில், அவரை சந்திக்க ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது.

பிரசார வாகனத்தை மாற்றும் விஜய்

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத் திற்காக, மஞ்சள், சிவப்பு நிறம் கலந்த, கட்சி கொடி வண்ணத்தில், வாகனம் தயார் செய்யப்பட்டது. இதில், கழிப்பறைகள், ஓய்வறைகள், உணவருந்தும் கூடம், சோபா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அகல மான 'கேரவேன்' வாகனம், குறுகிய சாலையை அடைத்து கொண்டு நிற்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது எனவும் இதுவும் உயிர் பலிக்கு காரணம் எனவும், அரசு செய்தி தொடர்பாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா கூறியிருந்தார். இதையடுத்து, 'டெம்போ டிராவலர் ' வேனை பிரசாரத்துக்கு பயன்படுத்த, விஜய் முடிவெடுத்துள்ளார். இந்த வாகனத்திற்கும், விஜய் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனத்திற்கும், நேற்று முன்தினம், ஆயுத பூஜையன்று, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பூஜை போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

எவர்கிங்
அக் 03, 2025 13:50

தமிழ்வெட்டிப்பயக கட்சி ஆனந்த் தலைமறைவை ஆதரிக்கிறாரா


SUBBU,MADURAI
அக் 03, 2025 13:26

புஸ்ஸி ஆனந்த் மற்றும் CTR நிர்மல்குமார் இருவரையும் இன்று இரவுக்குள் கைது செய்ய ஐந்து தனிப்படை அமைப்புகளை திமுக அரசு நியமித்துள்ளது ஆனால் ஆதவ் அர்ஜுனை கைது செய்யவில்லை! ஏனென்றால் அவன் விசிக மற்றும் திமுக அனுப்பி வைத்த ஆள்


Sun
அக் 03, 2025 12:59

இலங்கை, நேபாளம் போல் புரட்சி ஏற்பட வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பேசியது நாட்டிற்கு எதிரான வன்மையான கருத்து இல்லையா? இதற்காக இவரை ஏர்போர்ட்டிலேயே கைது செய்திருக்க வேண்டாமா? விஜய் பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்ட மத்திய அரசின் பாதுகாப்புப் படையினர் இவருக்கு பாதுகாப்பாக எப்படி செல்லலாம் ? நாளை விஜய் சொன்னால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக செல்வார்களா? கரூர் துக்க நிகழ்வு விஷயத்தில் என்னவோ விஜய்க்கு சம்மந்தமே இல்லை என்பது போல் இவ்வளவு சாப்டாக விஜயை பா.ஜ.க வும், அ.தி.மு.க வும் அணுகுவது சரி இல்லாத செயல். கடைசியில் இரு கட்சிகளுக்கும் எதிராகத்தான் இது அமையும்.


Haja Kuthubdeen
அக் 03, 2025 11:33

விஜய் சார்பாக ஆதவ் செல்கிறார் என்றால் இது முதல் படி...


Natchimuthu Chithiraisamy
அக் 03, 2025 10:11

மக்கள் புரட்சி எல்லாம் நடக்காது. நடிகரை பார்க்கவேண்டும் என்று குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் இளம் பெண்கள் ரசிகர்கள் பெண்கள் கலந்து விட்டனர் இதில் பாதி பேர் வாக்காளர்கள். விஜய் பிஜேபி அதிமுக வுடன் சேருவது நல்லது. அந்த இடத்தில தொகுதி மக்கள் அனைவரும் வரவில்லை 3 சதவிகிதம் கூடி இருக்கிறார்கள் நல்ல சதவிகித இந்து ஓட்டுகள் ஜோசப்க்கு வரலாம்.


PalaniKuppuswamy
அக் 03, 2025 09:16

முரட்டு தனமான மனிதர் . உணர்ச்சிகரமான மனிதர், நிதானம் தேவை . விஜய் இவரை சற்று தள்ளி வைப்பது நன்று


kSethu
அக் 03, 2025 09:00

ஆதவ் கு யார் பணத்தில் பாதுகாப்பு ?


RAJ
அக் 03, 2025 07:37

விசய் .... உன் கட்சிக்கு கொள்ளி இந்த பெருச்சாளிதான்... இத அடிச்சு ஓட்டலன... பெரிய குழி தோண்டிடும்... பார்த்துக்கோ ... சொல்றத சொல்லிப்புட்டேன்.. அம்புட்டுதேன்...


bharathi
அக் 03, 2025 07:27

He is a dangerous guy we need to probe him well and arrest by NIA. Strongly doubt he must be organising such a group as he is capable and backed by money power


Kadaparai Mani
அக் 03, 2025 09:41

Centre should be very strict with anti national elements


சமீபத்திய செய்தி