உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டிமிக்கி தரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

டிமிக்கி தரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், தனக்கு பதிலாக வேறு நபரை நியமித்து முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் மீது அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கலாம்' என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் அனுமதி அளித்துஉள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டம், ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி, தனக்கு பதில் வேறொருவரை பணியமர்த்தி விட்டு, வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து உள்ளார். இதை, அப்பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த வாரம், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகின்றனரா என, மாநிலம் முழுதும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், ஆசிரியர்கள் யாரேனும் ஆள்மாறாட்டம் செய்தது ஆய்வின் போது கண்டறிந்தால், அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளே, உரிய நடவடிக்கை எடுக்கலாம் என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundaran manogaran
நவ 11, 2024 22:56

நீலகிரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்று இன்று தலைமை ஆசிரியர்களாக இருக்கும் ஒரு கூட்டம் பள்ளிகளில் இருப்பது...அதிசயம்


ram prasath
நவ 11, 2024 13:36

first check private school teacher get enough salary with job security because educated govt staff politicians, etc choose only private school


vinoth
நவ 11, 2024 07:07

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளியில் ஆள் மாறாட்டம் நடக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை