உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குஜராத்தில் 1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்: அடித்தளம் அமைத்து அதானி நிறுவனம் சாதனை

குஜராத்தில் 1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்: அடித்தளம் அமைத்து அதானி நிறுவனம் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்:குஜராத்தின் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கு, 1,500 துாண்கள் தாங்கக்கூடிய அளவிலான மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து 'அதானி சிமென்ட்' நிறுவனம் சாதனை படைத்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாதில் ஜகத் ஜனனி மா உமியா கோவில் கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக உயரமான கோவில் என்ற பெருமையை பெறும் வகையில், 1,500 துாண்களுடன், தரையில் இருந்து 504 அடி உயரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணியில், அதானி நிறுவனத்தின் சிமென்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கான அடித்தளம் அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. மிக உயரமான, 1,5--00 துாண்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் கோவிலின் அடித்தளம் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அதானி சிமென்ட் நிறுவனம் மற்றும் 'பி.எஸ்.பி., இன்ப்ரா' நிறுவனம் இணைந்து அடித்தளம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்காக, அதானி சிமென்டின் தனியுரிம கலவையான 24,100 கன மீட்டர் உடைய 'ஈக்கோ மேக்ஸ் எம். - 45' எனப்படும் கார்பன் கான்கிரீட்டை பயன்படுத்தி அடித்தளம் அமைக்கப்பட்டது. மூன்று நாட்களாக இரவு பகல் என 54 மணி நேரம் இந்த அடித்தளம் அமைக்கும் பணி நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 450 அடி நீளம், 400 அடி அகலம், 8 அடி ஆழம் என்ற கணக்கில் மிகச்சிறந்த முறையில் அடித்தளம் அமைக்கப்பட்டது. கட்டமைப்பின் வெப்ப அழுத்தத்தை குறைக்கும் வகையில், 28 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் வெப்பநிலையை வைக்கும் வகையில், அடித்தளத்தில் 'கூல்கிரீட் பார்முலேஷன்' பயன் படுத்தப்பட்டுள்ளது. நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் அமைக்கும் பணி, 'கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பஹேட்டி உறுதிபடுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gokul Krishnan
செப் 19, 2025 21:17

ஒரு காலத்தில் மஹாசிவராத்திரி என்றால் தொலைக்காட்சிகளில் பழமையான சிவன் கோவில்களைப் பற்றி அங்கு நடக்கும் நான்கு கால பூஜைகள் குறித்து விளக்குவார்கள். காண்பிப்பார்கள். ஆனால் இன்று ஒருவர் மேடை போட்டு பல வண்ண விளக்குகள் ஆடும் ஆட்டத்தை தான் அனைத்து டிவி சேனல்களில் காண்பிக்கப்படுகிறது அது போல் தான் இதுவும்


Venugopal S
செப் 19, 2025 17:38

அதானி கம்பெனிக்கு கொடுக்க மத்திய பாஜக அரசாங்கத்திடம் பெரிய காண்ட்டிராக்ட் எதுவும் இல்லாத போது இது போன்ற சிறு வேலைகள் கொடுப்பது வழக்கம் போல!


Krish N
செப் 19, 2025 11:46

உன்னுடைய அகங்காரம் தெரிகிறத்து. அஞ்ஞானத்தின் விளைவுகள்.


முதல் தமிழன்
செப் 19, 2025 07:32

எத்தனை கடவுள்கள். எந்த கடவுளுக்கு இந்த கோயில்?


SANKAR
செப் 19, 2025 09:17

built by his business partner


மாபாதகன்
செப் 19, 2025 10:32

பெருமைக்கு புகழுக்கு ஏங்கி திரியும் அல்பய்களின் ஆசைக்கு???


N Sasikumar Yadhav
செப் 19, 2025 15:45

குட்டிச்சுவற்றை நோக்கி வணங்கும் நீங்க இந்துக்களின் நம்பிக்கையில் தலையிட உரிமையில்லை


Rathna
செப் 19, 2025 20:53

நாங்கள் அரேபிய சுவரை வணங்க விரும்பவில்லை. ஹிந்து மதம் கடவுள் ஒருவனே என்பதை பல இடங்களில் பல முறைகளில் சொல்கிறது. ஆனால் அவர் அவர்கள் தங்கள் விருப்பப்படி வணங்க ஹிந்து கலாச்சாரம் சுதந்திரம் அளித்துள்ளது. கோவில் என்பது ஒரு அடையாள குறிதான். அதை தாண்டி இரக்கம், கருணை, அடுத்த மதத்து காரனை நிந்தனை செய்யாமை, கொலை செய்யாமை, பெண்களை மானபங்கம் செய்யாமை என்பதையும் ஹிந்துக்கள் கடைபிடிக்கிறார்கள். இவைதான் முக்கியம். யாவரும் பார்க்காத கடவுள் அல்ல. இந்த நன்னடத்தையை செய்தாலே போதும், கடவுள் பக்கத்தில் வந்து விடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை