உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., சீட்டுக்கு 30 கோடி: கட்டுப்படியாகாது என மா.செ.,க்கள் புலம்பல்!

அ.தி.மு.க., சீட்டுக்கு 30 கோடி: கட்டுப்படியாகாது என மா.செ.,க்கள் புலம்பல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ., உறவை முறித்துக் கொண்ட, அ.தி.மு.க., பொதுச்செயலரான பழனிசாமி, வரும் லோக்சபா தேர்தலில், மிகப் பெரிய கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக கூறியிருக்கிறார். ஆனால், எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை.ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை, பா.ஜ., பக்கம் சாய்ந்துள்ளன. த.மா.கா.,வும் புதிய தமிழகமும், எந்த முடிவும் எடுக்கவில்லை. புரட்சி பாரதம் மட்டும், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறது.பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் கட்சிகளை, கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., முயற்சித்து வருகிறது. அதோடு, தி.மு.க., கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டு, வெளியேறும் கட்சிகள் தம்மை நோக்கி வரும் என்றும், பழனிசாமி காத்திருக்கிறார்.ஆனால், பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தனித்து செயல்படுவதால், அ.தி.மு.க., பக்கம் திரும்ப, சில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டு சேர, அ.தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இச்சூழலில், லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை, பழனிசாமி துவக்கி உள்ளார். 'போட்டியிட விரும்புவோர், கட்சிக்கு, 30 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தேர்தல் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்வோருக்கே சீட்' என, சில நிபந்தனைகளை அவர் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.'அதுபோன்றவர்களை மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் பரிந்துரை செய்தால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இல்லையெனில் கட்சி தலைமையே தேர்வு செய்யும். அவர்களுக்கு மாவட்ட செயலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்சியை சாராத, பண பலமிக்க பிரபலங்கள் போட்டியிட விரும்பினாலும், கட்சியில் சேர்க்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படும்' என்றும் பழனிசாமி தரப்பு கூறுவதாக தெரிகிறது.இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முன்னாள் அமைச்சர்களே பெரும்பாலும், மாவட்ட செயலர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, தேர்தலில் நிறுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், கட்சிக்கு 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் செலவு முழுதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கேட்டதும், பின்வாங்கி விட்டனர். அடுத்தவருக்காக கோடிக்கணக்கில் செலவழிக்க, அவர்களுக்கு என்ன பைத்தியமா?அரசியலுக்கு புதியவராக இருந்தாலும், கட்சிக்கு அப்பாற்றப்பட்டவராக இருந்தாலும், பணம் இருந்தால் அரவணைப்போம் என கூறியிருப்பது தான், கட்சிக்குள் அனலை கிளப்பியிருக்கிறது. எம்.ஜி. ஆரும் ஜெயலலிதாவும் அப்படிப் பார்த்தா சீட் கொடுத்தனர்? சாமானியரையும் ஜெயிக்க வைத்து மந்திரியாக்கினர். அப்படிப்பட்ட கட்சியில் இப்படியொரு நிபந்தனையா?இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Ĺionel
ஜன 11, 2024 07:09

ஆம் அதிமுக திமுக இதில் ஏதாவது ஒன்றின் தான் பிஜேபி பிழைப்பு நடத்த வேண்டும்


gopalasamy N
ஜன 10, 2024 12:38

Getting some crores from DMK these LIES are spread since ADMK is now strong


Jai
ஜன 09, 2024 22:35

நாளை தேர்வுக்கு இன்று வினாத்தாள் வெளியாகிவிட்டது, இருந்தாலும் பெயில் மார்க்கு வாங்குவதே நம் தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்தாக உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர் அமையவில்லை என்றால் நாம் கட்டிக் காப்பாற்றிய தொழில் வளங்கள் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சிவகாசியில் இருந்து வட மாநிலத்துக்கு போய்விடும். ஓட்டுக்கு கொடுக்கிற காசு பார்க்காமல் நம் எதிர்காலத்திற்கு ஒரு அமைச்சர் கிடைக்கிற மாதிரி ஓட்டு போட வேண்டும். கடந்த பத்து வருடங்களா பார்லிமென்ட் கான்டீன் டோக்கன் பயன்படுத்துவதும் MP பதவியை பயன்படுத்தி வெட்டி அரசியல் செய்வது மட்டுமே எம் பிக்களின் வேலையாக உள்ளது.


V GOPALAN
ஜன 09, 2024 22:05

In DMK it is double now றது60 crores


Sundar
ஜன 09, 2024 20:07

இது வரை தன் கட்சிகாரர்கள் அடிச்ச பணத்தை பிடுங்க எடப்பாடியார் சூப்பர் பிளான் போட்டுள்ளார்.


Vijay D Ratnam
ஜன 09, 2024 15:58

எடப்பாடியாரை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என்று சசிகலாவும், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் குடுமிப்புடி சண்டை போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா மறைவின் மூலம் அதிமுகவை வலிமை இழக்க செய்து, பாஜகவை எப்படியாவது இரண்டாவது இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று அமித்ஷா அண்ட் கோ, பன்னீர்செல்வத்தை வைத்து அண்டர் கிரவுண்ட் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், பொறுமையாக நேர்த்தியாக அரசியல் காய்நகர்த்தி எடப்பாடி பழனிசாமி முதலில் தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றினார். அடுத்து அவர் செய்த காரியம், சாவு வீட்டில் உள்ளே புகுந்த டிடிவி.தினகரனை விரட்டியடித்தார். தங்கமணியையும் வேலுமணியையும் அனுப்பி ஒழுங்கு மரியாதையா கட்சியை விட்டு வெளியே போய்டு என்று துரத்திவிட்டார். ஜெயிலுக்கு போன சசிகலாவை, அவர் குடும்பத்தை அதிமுகவிலிருந்து நீக்கி நிரந்தரமாக வெளியேற்றினார். அதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்களின் செல்வாக்கை பெற்று கூடவிருந்தே குழிபறித்துக்கொண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். முறைப்படி தேர்தல் நடத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார். காலை சுற்றிய பாம்பை எப்படி கழட்டி விடுவது என்று சரியான நேரத்துக்காக காத்திருந்தார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையிலிருந்து ஆட்டையாம்பட்டி வார்டு கவுன்சிலர் பஸ் கண்ணாடி உடைத்த சமாச்சாரம் வரை வளவளவென பேசும் அண்ணாமலையின் அதற்கு வகையா அமைந்தது. அதிமுகவின் காட்ஃபாதர் பேரறிஞர் அண்ணாவை பற்றி ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசினார் என்று ஒரு காரணத்தை சொல்லி ஜஸ்ட் லைக் தட் பாஜகவுடனான கூட்டணியை அத்து விட்டுவிட்டார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து விட்டு வந்த மறுநாள் இனி எந்தக்காலத்திலும் பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்று சொல்லி தமிழ்நாட்டில் பாஜக என்ற பேச்சுக்கு சாவுமணி அடித்துவிட்டார். அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்ததில் இருந்து கட்டுமரக்கம்பெனி வீசும் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் கும்பலும், அண்ணாமலை ரசிகர் மன்றமும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம் போகுதே என்று தவியாய் தவிக்கிறார்கள். அதனால் தான் இந்த 30 கோடி ரூவா புரளி பேச்செல்லாம். ஆனால் எடப்பாடி இப்போதும் பொறுமையாக காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். அதிமுக்கியாவில் இருந்து விலகி இருந்த, ஒதுங்கி இருந்த சசிகலா குடும்பத்தால் ஓபிஎஸ்ஸால் ஓரங்கட்டப்பட்டு இருந்த பழைய தொண்டர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். அதிமுக தொண்டர்களையும் தாண்டி கட்சி சார்பற்ற தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம் இருக்குது. அது எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அதிமுக கொடி எனும் எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். இங்கே திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுகாவுக்குத்தான். அதுபோல அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் திமுகாவுக்குத்தான். உதாரணத்துக்கு இந்த நயினார் நாகேந்திரன்லாம் எம்.பி தேர்தலில் பாஜகவில் நின்று டெபாசிட் கூட வாங்க முடியாது - அதே அதிமுக எம்.எல்.ஏ வேட்பாளராக நின்று அதே தொகுதியில் மாபெரும் வெற்றி பெற முடியும். மக்கள் கையில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் இருக்கிறது. நான்கு ஆண்டு கால எடப்பாடி பழனிசாமி ஆட்சி. மூன்று ஆண்டு கால மு.க.ஸ்டாலின் ஆட்சி. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இங்கே மற்ற அரசியல் கட்சிகள் இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றின் காலை நக்கித்தான் பொழப்பு நடத்தணும்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 12, 2024 07:58

ஆஹா இவளவு பெருமைகள் உள்ள இவர், எதற்காக சிறுபான்மையினர் காலில் விழுகிறார்?


Ramalingam Shanmugam
ஜன 09, 2024 15:02

யார் போட்டி ஈடா தயார்


ஆரூர் ரங்
ஜன 09, 2024 13:03

ஒரு காலத்தில் சசி நடராஜன், எம்எல்ஏ டிக்கட் வழங்க பணம் வாங்கினார் ன்னு குற்றச்சாட்டு எழுந்தது. சீட் கிடைக்காதவர்கள் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர் ன. அதெல்லாம் கட்சி நிதிக்கு போய் விட்டது என்றாராம் அம்மா இருந்த காலத்திலேயே அப்படி ????.???? இப்போதும் மாறவில்லை.


Murugesan
ஜன 09, 2024 12:52

அயோக்கியரிடம் அதிமுக


S.Bala
ஜன 09, 2024 12:18

Nobody will travel in the sinking boat that too spending that much amount. Nobody knows that they will reach their destination.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ