உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்த அ.தி.மு.க., தளவாய்சுந்தரம் பதவி பறிப்பு

ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்த அ.தி.மு.க., தளவாய்சுந்தரம் பதவி பறிப்பு

கன்னியாகுமரியில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை துவக்கி வைத்ததற்காக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரத்திடம் இருந்து, அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவிகளை பறித்து, நடவடிக்கை எடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.தமிழகம் முழுதும், 58 இடங்களில் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஊர்வலம் நடந்தது. அதில், ஈசாத்திமங்கலம் என்னும் இடத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்.இது, அக்கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., ஆதரவு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் கலந்து கொண்டதுடன், அதை துவக்கி வைத்த செயல், அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் வகித்து வந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர் பதவிகள் பறிக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தான் வகித்து வரும் கட்சி அமைப்பு செயலர், மாவட்ட செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்து, தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bala
அக் 10, 2024 17:36

ஆர் எஸ் எஸ் இயக்கம் சமூக பாதுகாப்பு சேவைகள் இயக்கம். நல்ல பல சேவைகளை வழங்குகிறது இந்து ஜனா தன தர்மம் என்ற ஒற்றை அடைமொழி பிடிக்காத கயவர்கள் / திருடர்கள் கூட்டம். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்து சமயம் என ஒன்றினைவோம். ஓம் நமச்சிவாய நம


Srinivasan Venkatesan
அக் 10, 2024 10:02

சாக்கடை என்று சொல்லும் நீ ஒரு கூவம்


Subash BV
அக் 09, 2024 13:53

DONT HOLD MUSLIMS TAILS. PUT HINDUISM FIRST.


yts
அக் 09, 2024 09:30

சாக்கடை என்று சொல்பவருக்கு சாக்கடை இல்லாமல் இருந்தால் உன் வீடு நிலைமை யோசித்துப் பார்


Nandakumar Naidu.
அக் 09, 2024 08:56

அப்படி என்றால் அஇஅதிமுக தேசவிரோத கட்சி என்று அர்த்தம். இந்துக்கள் மற்றும் இந்தியர்கள் இந்த கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.


பேசும் தமிழன்
அக் 09, 2024 07:35

SDPI கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய.... பத்து தோல்வி பழனிசாமி அவர்களை ஏன் தலைமை பதவியில் இருந்து நீக்க கூடாது ???


pmsamy
அக் 09, 2024 07:32

ஆர் எஸ் எஸ் இந்தியாவின் சாக்கடை


கண்ணன்
அக் 09, 2024 08:07

நல்ல கண்டுபிடிப்பு. சற்று இரண்டுமாதங்களுக்குமுன் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அயராது உழைத்து பல் உயிர்களை இந்தச் ஆர் எஸ் எஸ் தான் காத்தது. அப்போது மணக்கும் மற்றோர் என்னசெய்தனரோ?


N Sasikumar Yadhav
அக் 09, 2024 09:45

உன்னய மாதிரியான ...இந்த உலகத்திலேயே கிடையாது மதமாற்றம் செய்யும் பயங்கரவாத கும்பலுங்களுக்குதான் சாக்கடையாக தெரியும்


பேசும் தமிழன்
அக் 09, 2024 18:31

உங்களை போன்ற சாக்கடைகளுக்கு.... நல்லது எல்லாமே தவறாக தான் தெரியும்.


hari
அக் 09, 2024 21:11

பிம் சாமி.... உன் வீட்ல சாக்கடை இல்லனோ உன் வீடும் நாறிடும்... போவியா சும்மா பின்னாத்திட்டு


மோகனசுந்தரம்
அக் 09, 2024 06:29

இந்த எட்டப்பன் பழனி ஆண்டி இதுவரையில் அதிமுகவை அழித்தது போதாது என்று மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறான்.


முக்கிய வீடியோ