உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு: கோடை சாகுபடியை தவிர்க்க அட்வைஸ்

பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு: கோடை சாகுபடியை தவிர்க்க அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், கோடை பருவ சாகுபடியை தவிர்க்கும்படி, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் சம்பா, தாளடி பருவ நெல் அறுவடை முடிந்து, கோடை பருவ சாகுபடி காலம் துவங்கியுள்ளது.

ஆயத்த பணி

இப்பருவத்தில் நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் மட்டுமின்றி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம்.இதற்கான ஆயத்த பணிகளில், விவசாயிகள் இறங்கியுள்ளனர். பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் நீராதாரமாக உள்ள ஏரிகள், குளங்களிலும் வறட்சி நிலவுகிறது.அத்துடன், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் தலைதுாக்கி உள்ளது.

பரிந்துரை

நிலத்தடி நீரை தொடர்ந்து சாகுபடிக்கு உறிஞ்சினால், குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படும். சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கும். எனவே, ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, கோடை உழவு பணிகளை தவிர்க்க வேண்டும் என, விவசாயிகளை வேளாண் துறையில் அறிவுறுத்திஉள்ளனர். அதேநேரத்தில், ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு திருப்தியாக உள்ள இடங்களில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்ளும்படி பரிந்துரையும் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramesh Sargam
மார் 15, 2024 23:56

சாகுபடியை தவிர்ப்பதால் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகாதோ? அதையும் யோசித்து, விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க அரசு ஒரு வழியை காணவேண்டும். இதே அரசு டாஸ்மாக் தண்ணீர் பற்றாக்குறை என்றால் சும்மா இருக்குமா?


தம்பையா
மார் 15, 2024 21:35

அடப்பாவிகளா... தண்ணியும் இல்லை. இனிமே சோறும்.இல்லியா


PRAKASH.P
மார் 15, 2024 16:49

All seems politics party planned to sell water sources to private company


ஆரூர் ரங்
மார் 15, 2024 16:47

டெல்டாக்கார முதல்வரே.. இந்த அறிவு சென்ற ஜூன் மாதம் கர்நாடகாவில் மழை பொய்த்துப் போனபோது இருந்திருக்க வேண்டும். பருவமழையின் போக்கை கணிக்காமல் வெட்டிப் பெருமைக்காக மேட்டூர் அணையை ஜூன் 12 அன்று திறந்து விட்டது ஏன்? அதனால்தான் குறுவை பயிருக்கு தண்ணரில்லாமல் போனது. சம்பா அம்போவாகிவிட்டது . ஆக வாக்குவங்கிக்காகவும் மக்களை ஏமாற்றவும் எந்த அறிக்கை???? வேண்டுமானாலும் விடுவர்.


நரேந்திர பாரதி
மார் 15, 2024 14:47

"எனவே, ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, கோடை உழவு பணிகளை தவிர்க்க வேண்டும் என, விவசாயிகளை வேளாண் துறையில் அறிவுறுத்திஉள்ளனர்."... இதுதான் திருட்டு திராவிடியா மாடலின் டெவலப்மென்ட்...டெவலப்மென்ட் ...டெவலப்மென்ட் ... வருடம் முழுவதும் பொத்துகிட்டு ஊத்தினாலும் மழை நீரை சேமிக்க தெரியாத நாதாரிகள்...அடுத்தவன் கிட்ட தண்ணீரை பிச்சை கேட்கும் நிலைமையில்தான் எப்போதும் உள்ளனர் திருந்தாத ஜென்மங்கள் இதென்ன லாபம்?


g.s,rajan
மார் 15, 2024 13:03

நமது நாட்டில் பொதுவாக எல்லா இடங்களிலும் ,ஊர்களுக்கும் உள்ளே, வெளியே சாலைகளில் இருபுறமும் இருந்த நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டி கோடிக்கணக்கில் காசு பார்த்தாச்சு,நாடு முழுவதிலும் மக்களிடம் காசு வசூல் செய்ய சுங்கச் சாவடி அமைத்து நெடுஞ்சாலை போட்டாச்சு, சாலைகளில் சாலைத் தடுப்புக்களில் அரளிச் செடியை வெச்சுட்டா மழை வந்துவிடுமா???


jayvee
மார் 15, 2024 13:02

மாநிலமெங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன என்று பெருமைபட்டுக் கொண்ட தலைவர் எங்கே ?


ராம ஆதவன்
மார் 15, 2024 17:28

அது வேற வாய். இது நா... வாய். ஹா, ஹா. ????


g.s,rajan
மார் 15, 2024 12:30

நமது நாட்டில் சாகுபடி செய்யும் விவசாயிகளை சாகு(ம்)படி செய்யலாமா ...???


g.s,rajan
மார் 15, 2024 12:27

நமது நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்களின் விலை உயரும் ,நிச்சயம் விலைவாசி மிக மிகக் கடுமையாக உயரக்கூடும், நித்தம் வேளா வேளைக்கு மக்களின் வயிறு பசிக்கும் என்பதால் பசியைத் தவிர்க்க ஏதாவது நல்ல ஆலோசனை கிடைக்குமா...???


g.s,rajan
மார் 15, 2024 12:20

நமது நாட்டில் மக்களின் இயற்கை உபாதைகளுக்கு ஏதாவது நல்ல யோசனை சொல்லுவாங்களா ...???


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ