உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விதவிதமான போதை பொருட்கள் புழக்கம்; அ.தி.மு.க., புகார்

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விதவிதமான போதை பொருட்கள் புழக்கம்; அ.தி.மு.க., புகார்

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், விதவிதமான போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன' என அ.தி.மு.க., வைத்த குற்றச்சாட்டால், ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. ராஜ்யசபாவில் நேற்று தேர்தல் கமிஷன் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, இந்திய துறைமுகங்கள் மசோதாவை, கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தாக்கல் செய்தார்.

அதன் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், விதவிதமான போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழக துறைமுகங்கள் வழியாக போதைப் பொருட்கள் அதிகமாக வருகின்றன. சென்னை, துாத்துக்குடி துறைமுகங்கள் வாயிலாக வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த, தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக துறைமுகங்களை தி.மு.க.,வினர் தவறான வழிகளுக்கு பயன்படுத்த துவங்கி விட்டனர். சில சமயங்களில் போதைப் பொருட்கள் பெருமளவில் பிடிபடும்போது, அதில் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி வருகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து பலமுறை பேசியும் நடவடிக்கை இல்லை. போதைப் பொருட்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மாணவர்களின் வாழ்க்கை பாழாகிறது. எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்ததை கேள்விப்பட்டு, வெளிநடப்பு செய்த தி.மு.க., - -எம்.பி.,க்கள், சபைக்குள் வந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 'மசோதாவுக்கு சம்பந்தமில்லாமல் தம்பிதுரை பேசுகிறார். சபை விதிகளுக்கு எதிராக பேசும் அவரை, பேச அனுமதிக்கக் கூடாது' என்றனர். அதற்கு தம்பிதுரை, ''பல ஆண்டுகளாக இந்த சபையை வழி நடத்திய எனக்கு விதிகள் தெரியும். எனக்கு பாடம் நடத்த வேண்டாம். கேள்வி கேட்க, தி.மு.க.,வுக்கு உரிமை கிடையாது,'' என்றார். இதனால், கடும் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் முடிவில், இந்திய துறைமுகங்கள் மசோதா நிறைவேறியது. -- நமது டில்லி நிருபர் - '


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

மனிதன்
ஆக 19, 2025 19:44

அது திமுக வந்தபின் அல்ல...நீங்கள் கூட்டணி வைத்த பாஜக வந்தபின்... குஜராத்திலிருந்து, அதானியின் துறைமுகத்திலிருந்து....


kamal 00
ஆக 19, 2025 20:26

இல்லை உன்னோட வீட்டுல ஜாபர் சாதிக் ஒளிச்சு வச்சுருப்பான்


V K
ஆக 19, 2025 16:07

ஒருதன் போதை பொருள் விற்பனை மூலம் ஒரு தமிழ் படம் எடுத்து விட்டான் மங்கை என்ற படம் அவனுக்கு என்ன நடந்தது ஒன்றும் இல்லை அந்த படத்தின் இயக்குனர் கீர்த்திகா உதயநிதி மிக சிறப்பு


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 14:39

அது மாதிரி விற்றால் தான் அமீர் போன்றோர் அவரின் இறைவன் மிகப்பெரியவன் என்று உணர்த்த முடியும், eenapiravigal


Padmasridharan
ஆக 19, 2025 13:13

உண்மைதான். போதை ஆசாமிகளை வைத்துதானே காவலர்களும் பணம்/பொருள் அதட்டி, மிரட்டியடித்து அதிகார பிச்சை கேட்க முடிகிறது. இவர்களால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தொல்லைகள் நடக்கின்றது.


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:37

நீயும் ஒரு டம்மி தானே..


vivej
ஆக 19, 2025 15:37

அதை ஒரு அடைப்பு சீனு சொல்லக்கூடாது


kamal 00
ஆக 19, 2025 20:27

நீ மூச்சு விட கூடாது


rameshkumar natarajan
ஆக 19, 2025 10:20

All these drugs are entering india through borders. Who is protecting borders? Why drugs are always caught in Mudra Port in Gujarat?


ராமகிருஷ்ணன்
ஆக 19, 2025 09:37

விடியலின் ஆட்சியில் தான் புதுசு புதுசா போதை பொருட்கள் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்து உற்பத்தி விற்பனையை திமுகவினர் செய்து சம்பாதிக்கின்றனர் அது பொருக்கவில்லையா உனக்கு.


முருகன்
ஆக 19, 2025 06:33

இவர் சொல்லும் போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு மட்டும் வானத்தில் இருந்து வந்தது மாதிரி பேசுவது ஏன் வரும் வழி பற்றி பேச தைரியம் இல்லாதவர்.


ஆரூர் ரங்
ஆக 19, 2025 07:39

வேறெது ? அயலக அணி மூலம்தான் வருகிறது


kamal 00
ஆக 19, 2025 20:28

உன் வீட்டுக்கு பக்கம் வந்தா உள்ள விடுவ போல


புதிய வீடியோ