உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  கூட்டணி கட்சிகளுக்கு 100 சீட்: 134ல் அ.தி.மு.க., போட்டி

 கூட்டணி கட்சிகளுக்கு 100 சீட்: 134ல் அ.தி.மு.க., போட்டி

பா.ஜ.,வுக்கு 65, பா.ம.க.,வுக்கு 30, இதர கட்சிகளுக்கு 5 என, மொத்தம் 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 39 தொகுதிகளில், தி.மு.க., தலைமையிலான 'இண்டி' கூட்டணி, 46.97 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, 23.05 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன.பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி இணைந்த தே.ஜ., கூட்டணி, 18.28 சதவீத ஓட்டுகளை கைப்பற்றியது. இதில், 28 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 11 தொகுதிகளில் பா.ஜ.,வும் இரண்டாம் இடத்தை பிடித்தன.இந்த, 39 லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 234 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட, 80 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி கட்சிகள் முன்னணி வகிக்கின்றன.இந்த 80 தொகுதிகளில், 75ல் பா.ஜ., தற்போது போட்டியிட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ., தலைமை வலியுறுத்தியுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், பா.ஜ.,வுக்கு, 65 தொகுதிகளை ஒதுக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., ஆகிய கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., 134 தொகுதிகளில் போட்டியிட்டு, மீதமுள்ள 100 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி கைப்பற்றிய, 18.28 சதவீத ஓட்டுகள் அடிப்படையில், 65 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும். கூட்டணியில் இணையும் பட்சத்தில், பா.ம.க.,வுக்கு, 30 வரை ஒதுக்கப்படலாம்.த.மா.கா., உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு, 5 இடங்கள் என, 100 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு, அ.தி.மு.க., ஒதுக்க வாய்ப்பு உள்ளது.இதில், தே.மு.தி.க., இணையும் பட்சத்தில், அக்கட்சிக்கு, 18 தொகுதிகள் ஒதுக்க ஏதுவாக, பா.ஜ.,- பா.ம.க.,வுக்கான தொகுதிகள் குறைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Veeraa
டிச 17, 2025 20:46

maximum 18-20 seats only they can expect to win unless there is no backstabbing by PMK/ADMK. ADMK can get more votes from BJP/PMK


Krishnamurthy Venkatesan
டிச 17, 2025 19:26

அண்ணாமலை அவர்கள் தனி கட்சி ஆரம்பித்து விஜயுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம்.


Hari Prasath
டிச 17, 2025 18:03

மனசாட்சி இருக்கா? பிஜேபிக்கு 65 கொடுத்தா எளிதில் திமுக வென்று ஆட்சி அமைக்கும். பிரிந்து கிடைக்கும் பாமாகவிற்கு 30+ சீட்டு என்பது மிக மிக அதிகம். கற்பனைக்கு அளவில்லையா? தேமுதிக எங்கே செல்லும்??


Kadaparai Mani
டிச 17, 2025 16:29

Correct data


Anbuselvan
டிச 17, 2025 12:20

அமுமுக மற்றும் பன்னீர்செல்வம் மற்ற இதர கட்சிகளுக்கு பிஜேபி க்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்து கொடுக்க வேண்டும் என ஒரு கருத்தையும் கூறி இருக்கலாம்.


duruvasar
டிச 17, 2025 12:18

அப்பாடா காக்கையாரின் காரசார செய்தி வந்துவிட்டது . மகிழ்ச்சி.


Haja Kuthubdeen
டிச 17, 2025 10:17

150 தொகுதிகளுக்கு குறையாமல் அஇஅதிமுக நிச்சயம் போட்டியிடும். பாஜக.. பாமக.. தேமுதிக.. புதியதமிழகம்.. தமாக.. போன்ற கட்சிகளுடன் புதியதமிழகம். ஜான்பாண்டியன்..மூவேந்தர்..பார்வர்டு பிளாக்..போன்ற சிறிய கட்சிகளோடு தேர்தலை சந்திக்கும்.பெரிய அளவில் தொகுதி சிக்கலும் இல்லை...மறுபுரம் காங்கிரஸ் 36..விசி 10வது கம்யூ 10 இடது கம்யூ 10 முஸ்லிம் லீக் 6 வைகோ 6 கொங்கு 3 ஜவாகிருல்லா 3 வேல்முருகன் மற்ற சில்லரை கட்சிகள் 4தொகுதிகள் ஒதுக்கியது போக 120தொகுதிகளே திமுகவிற்கு மிஞ்சும்.ஜனவரி மாதம் ஊகங்களுக்கு பதில் கிடைத்து விடும்.


Sanjay
டிச 17, 2025 09:53

Admk 164, Bjp 25, Pmk 20 1rajyasabha Dmdk 10 1 rajyasabha TMC 5 others 10


Karunai illaa Nidhi
டிச 17, 2025 20:14

சஞ்சய் உமக்கு மனசாட்சியே இல்லையா? பேசாம 234 தொகுதியையும் அதிமுக எடுத்துக்கணும் என்று சொல்லிடுங்களேன்.


Oviya Vijay
டிச 17, 2025 08:38

இந்தக் கூட்டணி ஒற்றை இலக்கத்தை தாண்டி வெற்றி பெறாது...


பாமரன்
டிச 17, 2025 08:36

கனவுன்னாலும் ஒரு ஞாயம் வாணாமா பாஸு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை