உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி

அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் நெருங்குவது, பல கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறி, கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தனி அணி அமைத்த அ.தி.மு.க., மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், 'தானே முதல்வர் வேட்பாளர்' என்பதில் விஜய் உறுதியாக இருந்ததாலும், பா.ஜ., மேலிடத்தின் நெருக்குதல்களாலும், கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி உருவானது. அதன்பின், 'வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க., -- தி.மு.க., இடையேதான் போட்டி. எப்படி இருந்த கட்சி, இப்படி பா.ஜ.,விடம் சரணடைந்து விட்டது' என, அ.தி.மு.க.,வையும் விஜய் உரச துவங்கினார். இப்போது, கரூர் சம்பவத்தால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள விஜய், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், கூட்டணி குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய்க்கு வலை வீசி வரும் அ.தி.மு.க., இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, த.வெ.க.,வை இழுக்க முயற்சித்து வருகிறது. பழனிசாமியின் பிரசார கூட்டங்களில், த.வெ.க., கொடியுடன் பலர் பங்கேற்பதும், அதைப் பார்த்து உற்சாகம் அடைந்த அவர், 'பிள்ளையார் சுழி போட்டு விட்டனர் ' என பேசியதும், தமிழக அரசியலில் பரபரப்பாகி வருகிறது. 'அ.தி.மு.க., -- த.வெ.க., கூட்டணி அமைந்தால், அது மக்கள் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்' என, தி.மு.க.,வும், காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் நினைக்கின்றன. 'அ.தி.மு.க., பக்கம் விஜய் சென்று விட்டால் தனித்து விடப்படுவோம்' என்பதை உணர்ந்த அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ' த.வெ.க., வந்தால், பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விட்டு விடுவார் ' என எச்சரித்துள்ளார். இதனால், த.வெ.க., கூட்டணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பழனிசாமி, கடைசி நேரத்தில் தங்களை கழற்றி விட்டு விடுவாரோ என்ற அச்சம், பா.ஜ.,வுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் நெருங்கி வருவது, தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., போன்ற கட்சிகளை மட்டுமல்லாது, பா.ஜ.,வையும் கலக்கமடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Theni Saaral
அக் 12, 2025 22:43

எப்படியோ திமுக வராம இருந்தா சந்தோசம்


மாயவரம் சேகர்
அக் 12, 2025 21:00

பாவம் தினகரன்.எடப்பாடி எதிர்ப்பாக பாஜகவை கழட்டி விட்டார்,தவெக உடன் கூட்டணி போட ,தயாராக இருந்தார். இப்போது தவெக ,அதிமுக கூட்டணி ஏற்பட்டால் , அதிலும் பாஜக தொடர்ந்தால் என பயந்து புலம்பி உளறுகிறார் சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நரியின் கதையாக.


ஆசாமி
அக் 12, 2025 20:32

comedy. eps backstabbing incoming fast


Haja Kuthubdeen
அக் 12, 2025 20:21

விஜய் அஇஅதிமுகவில் கூட்டணி சேர்ந்துவிட்டால் என்னாகும் என்பது உபி களுக்கு நிச்சயம் தெரியும்.அதனால்தான் கதறல்...


Natchimuthu Chithiraisamy
அக் 12, 2025 16:58

அதிமுக தவெக பிஜேபி கூட்டணி உறுதி வெற்றியும் உறுதி. இவர்கள் 5 லட்சம் கோடியை அப்படியே எடுத்துச்செல்ல மாட்டார்கள். மனசாட்சி உள்ளவர்கள்.


Natchimuthu Chithiraisamy
அக் 12, 2025 16:54

தினமலர் வாசகர் கருத்தை எடப்பாடி பழனிசாமி அவர்களும் விஜய் அவர்களும் அண்ணாமலை அவர்களும் படிக்கிறார்கள்


Srinivasan Narasimhan
அக் 12, 2025 15:56

நாமும் வெட்கமே இல்லாமல் இவர்கள் குடுக்கும் பிச்சை காசை வாங்கிப்போம்


Vasan
அக் 12, 2025 15:56

ADMK will have alliance with DMK in 2031.


Rajah
அக் 12, 2025 14:39

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திராவிடம் என்ற விஷச் சொல்லை வைத்து மக்களை ஏமாற்றவில்லை. எடப்பாடிக்கு திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்று முதல்வர் சொல்கின்றார். தெரியாமல் இருப்பதே நல்லது. யார் யாரோடு கூட்டணி வைத்தாலும் திராவிடம் அழிந்தால் தமிழகம் முன்னேறும்.


Mr Krish Tamilnadu
அக் 12, 2025 14:18

விஜய் சினிமாவில் உயர ஒரு செந்தூரபாண்டி ஆரம்ப காலத்தில் தேவை பட்டார். மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்து உள்ளார். காலம் விஜயை வழி நடத்துகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை