உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பின் பேரில், வரும் 10ல் டில்லி செல்லும், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி என்ற கருத்தை வலியுறுத்த உள்ள தகவல் பரவி இருக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியை விட்டு, தனித்து போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் கூடினாலும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க.,வுடனான கூட்டணி முறிவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையே காரணம் என்ற குற்றச்சாட்டை, பா.ஜ.,வினரும் பேச துவங்கினர்.இந்நிலையில், அண்ணாமலை சர்வதேச அரசியல் சான்றிதழ் படிப்புக்காக லண்டன் சென்றுவிட, தமிழக பா.ஜ.,வை ஒருங்கிணைத்து நடத்த, ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை இங்கு இல்லாத நேரத்தில், அ.தி.மு.க.,வுடன் இணைக்கமான சூழலை ஏற்படுத்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 3ம் தேதி டில்லி சென்ற ஹெச்.ராஜா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை முறித்ததே, கட்சியின் தோல்விக்கு காரணம். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதே, கட்சிக்கு நல்லது என, ராஜா கூறியுள்ளார்.'இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள் கருத்துக்களை அறிந்து வாருங்கள். இதுகுறித்து, பிரதமரிடம் பேசி நல்ல முடிவெடுக்கலாம்' என, அமித்ஷா கூறி அனுப்பியுள்ளார். இதையடுத்தே, தமிழகம் திரும்பிய ராஜா, 'பழனிசாமியை நல்ல நண்பர்' என்று கூறி, அ.தி.மு.க.,வுடன் இணக்கம் காட்டியுள்ளார். சமரச முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.இதற்கிடையே, வரும் 10ம் தேதி டில்லிக்கு வருமாறு, ராஜாவுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. டில்லி செல்லும் ராஜா, அ.தி.மு.க., கூட்டணி குறித்த, தமிழக பா.ஜ., தலைவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உள்ளார். அண்ணாமலை தவிர்த்து முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு இருப்பதை, அமித் ஷாவிடம் ராஜா சொல்வார். ஏற்கனவே, த.மா.கா., தலைவர் வாசன் வழியாக, அ.தி.மு.க., கூட்டணிக்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Bala
செப் 11, 2024 16:52

திரு அண்ணா மலை அவர்கள் , அரசியல் நிகழ்வுகள் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டை பாடிக் கறக்கனும். என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் திமுக/அதிமுக/ காங்கிரஸ்/நாம்தமிழர்/ பாட்டாளி மக்கள் கட்சி/விடுதலை சிறுத்தைகள்/ கம்னீஸ்டுகள் மற்றும் இதர கட்சிகளிடம் நடவடிக்கையும் அதே போல் மக்களின் மனநிலையும் அறிந்து செயல்பட்ட ஒரு தலைவர் தமிழகத்தில் உள்ளார் என்றால் அவர் திரு அண்ணாமலை மட்டுமே. பாரதீய ஜனதா கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்தனர் எல்லோரும் கூவி கூவி பேட்டி கொடுத்தார்கள் ஆனால் மேலே உள்ள கட்சிகளிடம் சரிக்கு சரி நேர்மையாக அரசியல் செய்தவர் படித்தவர் பண்பாளர் திரு அண்ணாமலை மட்டுமே. திரு அண்ணாமலையை கட்சி இழந்தால் பாஜக- வை மீண்டும் பழைய நிலைக்கு செல்லும். மேலும் திமுக/அதிமுக கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து இவரை போல் உழைக்க யாருமே இல்லை என்பதை பாஜக உணர வேண்டும்.


raj
செப் 09, 2024 21:27

பிஜேபிக்கு tamiநாட்டில் சமாதி கட்டும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்


மோகனசுந்தரம்
செப் 09, 2024 17:08

அண்ணா திமுகவுடன் கூட்டணி என்றால் இப்பொழுது இருக்கும் ஓட்டும் கூட உனக்கு கிடைக்காது ஐயா!


sureshpramanathan
செப் 09, 2024 15:40

BJP Delhi command shall wait till Annamalaiji comes back No point get few MLAs in 2026 and be second fiddle with corrupt AIADMK If they do I think Mr Annamalai will leave BJP Big loss to BJP Lots of good people will leave BJP and they will be left with few useless olds which are good for nothing neither to BJP nor to the people


Mohana Sundaram
செப் 09, 2024 17:12

Sir you are absolutely correct. if they do so whatever vote percentage they got in Parliament election, they will go down to 5%.


Sridhar
செப் 09, 2024 15:34

அதிமுகவும் திமுகவுக்கு இணையான ஊழல் கட்சிதான் என்றபோதும், ஜெயலலிதாவின் ஆட்சித்திறனும் தமிழக நலனை ஒரு பொழுதும் விட்டுக்கொடுக்காத அவரின் சிந்தனைகளும், அதிமுகவிலுள்ள குறைகளை சற்றே ஒதுக்கிவைக்க முக்கியமான காரணமாய் இருந்தது. அவர் இல்லாத அதிமுக வெறும் ஊழல் மூட்டை மற்றும் வாக்குவங்கியில் வெத்துவேட்டு. அதனுடன் கூட்டு வைத்துக்கொண்டு திராவிடிய ஊழலை எதிர்ப்பெதென்பது கேலிக்கூத்தாக இருக்கும். பாஜாகாவில் இன்றைக்கு அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள், நாளைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்காதவர்களாக வெறும் தேர்தல் அரசியல்வாதிகளாத்தான் இருப்பார்கள். ஒரு பெரும் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிற கூட்டத்தோடு கூட்டணி வைக்கலாம் என்கிற சிந்தனையே இவர்களுக்கு மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும். மேலும் இவ்வளவு நாட்கள் மக்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் போல இவர்கள் கனிமவள கொள்ளை, சாராய ஊழல், போதை கலாச்சாரம் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றினார்களா என்ற கேள்விக்கும் விடை அளிக்க தயாராக இருக்கவேண்டும்.


ko ra
செப் 09, 2024 15:15

அப்படி கூட்டணி உண்டானால் நான் என் BJP உறுப்பினர் தகுதி யை ரத்து செய்வேன்.


N Sasikumar Yadhav
செப் 09, 2024 15:00

திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் வேண்டாமென்றுதான் மக்கள் பாரதியஜனதா கட்சிக்கு நடுநிலை மக்கள் வாக்களித்தார்கள் . மறுபடி மறுபடி திருட்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பிறகு பாரதியஜனதா கட்சி தனியாக எதற்கு


kulandai kannan
செப் 09, 2024 14:48

பாஜக பொருத்து ஆடவேண்டும். கூட்டணி தேவையில்லை.


saravan
செப் 09, 2024 14:08

இப்ப எடப்பாடி சொல்லுவார் யார் யார் பாஜக வில் இருக்கவேண்டும் என்று....அதில் ராஜ பெயர் இருக்கு ராஜ ஹாப்பி தமாசு ஒடிப்போ


KR india
செப் 09, 2024 12:50

திரு.அண்ணாமலை தமிழக பி.ஜெ.பி தலைவராக நீடிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. பி.ஜெ.பி கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளாது. திரு.அண்ணாமலை, தமிழக பி.ஜெ.பி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு உள்ள காலங்களில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேல்மட்ட நிர்வாகப் பொறுப்பில் இருந்த உயர்திரு.இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ஒருபோதும், சக கூட்டணி தோழமை கட்சி தலைவர்களையோ, அல்லது தோழமை கட்சியினரின் மறைந்த நிறுவனர்களையோ தவறாக பொது மேடைகளில், விமர்சித்தது இல்லை. கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைபிடித்தனர். திரு.அண்ணாமலை அவர்கள், தி.மு.க வை விமர்சித்த சாக்கில், அ.தி.மு.க வும் அப்படித் தான் என்று முதன்முதலில் விமர்சனம் செய்த போதே, அ.தி.மு.க தலைமை நாகரிகமாக கண்டித்தது. ஆனால், அ.தி.மு.க கூட்டணி தயவால், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டு, அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல், மீண்டும் திரு.அண்ணாமலை தவறு செய்தார். அதாவது, கூட்டணி கட்சியின் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தி பேசினார். எதிர்க்கட்சியான தி.மு.க கூட அவ்வாறு மறைந்த தலைவர்களை பற்றி வெளிப்படையாக விமர்சிக்க வில்லை. அப்போது தான், அ.தி.மு.க வெகுண்டெழுந்து, கூட்டணியை முறித்து கொண்டது. விளைவு, இருவருக்கும் நஷ்டம் தற்போது, தி.மு.க ஆட்சியில், ஒரு சிறிய தவறுக்கு கூட, மிகப் பெரிய தண்டனையை பா.ஜ .க ஆதரவாளர்கள் பெற்று வருகின்றனர். சமீபத்திய உதாரணம் : அற்ப காரணத்திற்காக, ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு சிறை பிடிக்கப் பட்ட விவகாரம். அ.தி.மு.க வும், பாரதீய ஜனதாவும் ஒன்றாக போட்டி இட்டால் மட்டுமே, அனைத்து சாதி இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும். இதை அ.தி.மு.க வும் உணர வேண்டும். அ.தி.மு.க தலைமை, எத்தனை உட்டாலங்கடி ஆட்டம் போட்டாலும், சிறுபான்மையினரின் ஓட்டை உங்களால் ஒருபோதும் கவர முடியாது. ஒரு பகுதியில், நூறு சதவீத சிறுபான்மை ஓட்டுகள் என்று வைத்து கொண்டால், அவற்றில், வெறும் இரண்டு சதவீதம் வேண்டுமானால் கிடைக்கலாம். அதை வைத்து, அ.தி.மு.க வின், ஒட்டு சதவீதம் கூட உயராது. யதார்த்தத்தை உணர்ந்து, பா.ஜ.க வுடன், அ.தி.மு.க இணக்கமாக போவதே மேல். அதற்கேற்றார் போல், டெல்லி மத்திய பா.ஜ.க அரசும், அண்ணாமலையை, கர்நாடக மாநிலத்தை கவனிக்க, அனுப்பி விட வேண்டும். தமிழக பா.ஜ.க விற்கு மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா தலைமை வகிப்பதே சிறந்த நிர்வாகத்தை தரும். அவர் காலத்து, சக நிர்வாகிகளான திரு.பொன்.ராதா கிருஷ்ணன் எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட்டார். டாக்டர்.தமிழிசை, இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக, நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப் பட்டார். மற்றொரு கோவை ராதா கிருஷ்ணன் கவர்னராக பணியாற்றி வருகிறார். ஆனால் உழைத்த உழைப்புக்கு, எந்தவித வெகுமதியும் பெறாமல் இருக்கும் திரு.H.ராஜாவுக்கு தலைமை பொறுப்பு கொடுப்பது, அவரது பல வருட உழைப்பை அங்கீகரிப்பது போல், பொருத்தமாக இருக்கும். திரு.அண்ணாமலை அ.தி.மு.க நிறுவனங்களை இழிவுபடுத்தி பேசியதற்கு பரிகாரமாக, திரு. H.ராஜா அவர்கள் பொறுப்பேற்ற பின்பு எம்.ஜீ.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்க வேண்டும். தேவை பட்டால், திரு.அண்ணாமலை செய்த தவறுக்கு அவர் சார்பாக அ.தி.மு.க வினரிடம், H.ராஜா அவர்கள் மன்னிப்பு கூட கேட்கலாம். அவ்வாறு செய்தால் உங்கள் புகழ் தான் உயரும்


கண்ணன்,மேலூர்
செப் 09, 2024 14:36

ஏலே நீ யாரு இப்படி பிரசங்கம் பண்ற கட்ட கடைசியில் அண்ணாமைலயை பங்கம் பண்ணி கருத்தை போடுற மேலும் கமல் மாதிரியே புரியாமல் நீண்ட கருத்தை போட்ருக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை