உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேட்பாளர் தேர்வில் அமித் ஷா: பா.ஜ., நிர்வாகிகள் கலக்கம்

வேட்பாளர் தேர்வில் அமித் ஷா: பா.ஜ., நிர்வாகிகள் கலக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார். பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு, 5 முதல் 6 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணிக்கு, 10 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பது அமித் ஷா விருப்பம். தமிழக பா.ஜ.,வில் சில மூத்த தலைவர்கள், டில்லி மேலிட தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தொடர்பில் உள்ளனர். இதை வைத்து, தங்களுக்கும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தேர்தலுக்கு தேர்தல் 'சீட்' வாங்கி விடுகின்றனர். ஆனால், வெற்றி பெறுவதில்லை. இம்முறை அந்த நடைமுறையை உடைத்து, தகுதியானவர்களையே வேட்பாளராக்க வேண்டும் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்துள்ளார். அதுவும் தன் நேரடி பார்வையில் தேர்வு செய்யவும் முடிவெடுத்துள்ளார். இதற்காக, மத்திய உளவுத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார். அவர்கள், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகள் எவை; யாரை வேட்பாளராக நிறுத்தினால், கட்சி வெற்றி பெறும் என்ற தகவல்களை சேகரித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து, தமிழக சட்டசபைக்கான பா.ஜ., வேட்பாளர்களை அமித் ஷா அறிவிக்க உள்ளார். இந்த தகவல், தமிழக பா.ஜ., முக்கிய தலைவர்களுக்கு தெரிய வந்ததால், மேலிட தலைவர்களின் சிபாரிசில், 'சீட்' வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அருண், சென்னை
நவ 09, 2025 09:55

திரு.அமிட்ஷா அவர்களே பாரததுக்கே சாணக்கியவா இருந்தாக்கூட, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், இந்த 3 மாநிலங்களை பாஜகவால் பிடிக்க முடியாது... இந்த 3 மாநிலத்தில் ஹிந்துக்களின் ஒற்றுமை இருக்கோ இல்லைலோ..மற்ற 2 மதத்திலும் ஒற்றுமை உண்டு... சோறு (விலைவாசி ஏற்றம் ஒரு பொருட்டே இல்லை) கிடைக்குதோ இல்லையோ, மதம்தான் முக்கியம்...ஏன்னா அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வரும், தமிழக அரசின் சலுகைகள் அப்படி...இனி கடவுளாலயும் காப்பாற்ற முடியாது... திரு.அண்ணாமலையையும் ஓரம் கட்டிடீங்க.? அப்புறம் எப்படி..இப்போ வாங்கின 11% வாக்கு மேலும் சரியும், EPSஐ நம்பி மோசம் போயிட்டீங்க


duruvasar
நவ 09, 2025 09:33

அட ராகவா இதென்னடா சோதனை ?


Vasan
நவ 09, 2025 05:52

மோடி, அமித் ஷா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், அண்ணாமலை அவர்கள் தலா 2 இடங்களில் போட்டியிடலாம். வெற்றி நிச்சயம்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 09, 2025 05:21

மோடியே வந்து தேர்வு செய்தாலும் ஒட்டுற வோட்டு தான் ஒட்டும். டெப்பாசிட் கூட் கிடைக்காது.


vivek
நவ 09, 2025 06:29

பாவம் பொய்ஹிந்து...புலம்பிக்கொண்டே இரு


duruvasar
நவ 09, 2025 09:32

ஐயா இப்படி அந்த நோட்டா என்கிற வார்த்தையை சொல்ல மறந்துடிங்களே? என்ன சில்லறை இல்லாததால் ரூபாய் 50 குறைவாக கிடைத்தா? அடுத்தமுறை 250 ஆக வந்து சேரும்


முக்கிய வீடியோ