உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் மருந்தகங்களில் சுகர், பி.பி., நோயாளிகளுக்கு மட்டுமா மருந்துகள்?

முதல்வர் மருந்தகங்களில் சுகர், பி.பி., நோயாளிகளுக்கு மட்டுமா மருந்துகள்?

மதுரை : முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய்(சுகர்), பி.பி.,(உயர் ரத்த அழுத்தம்) உட்பட 10 வகை நோய்களுக்கு மட்டுமே மருந்துகள் இருப்பதால் விற்பனை மந்தமாக உள்ளது. இதில் இலக்கு நிர்ணயித்து எங்களை வதைக்கின்றனர் என தமிழ்நாடு கூட்டுறவு அரசு ஊழியர் சங்கத்தினர் குமுறுகின்றனர்.தமிழகத்தில் ஆயிரம் முதல்வர்கள் மருந்தகங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. அதில் 500 மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலமும் மீதி தனியார் தொழில்முனைவோர் மூலம் துவக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. அதில் பெரும்பகுதி பி.பி., சுகர் நோய்கள் சார்ந்தே உள்ளது. குழந்தைகளுக்கான 'சிரப்' வடிவ மருந்துகள் குறைவு. சுகர், பி.பி., மருந்துகளை எத்தனை பேர் வாங்குவர். தேவை போக மருந்து இருப்பு இருந்தால் எங்களை விற்கச் சொல்லி இலக்கு நிர்ணயித்து கட்டாயப்படுத்துகின்றனர் என்கிறார் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீத கிருஷ்ணன். அவர் கூறியதாவது: அந்தந்த பகுதியில் உள்ள டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுக்கேற்ப தான் மருந்து, மாத்திரைகள் விற்பனையாகும். நுாற்றுக்கும் மேற்பட்ட நோய்களுக்கான மாத்திரைகள் இருந்தாலும் முதல்வர் மருந்தகங்களில் குறிப் பிட்ட 10 வகை நோய்களுக்கான மாத்திரைகள் தான் உள்ளன. மாத்திரை சீட்டுடன் வருபவர்கள் பாதி மாத்திரை இல்லாவிட்டால் மீதி மாத்திரையும் வாங்காமல் வேறு மருந்து கடைக்கு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு தான் விற்பனை இழப்பு ஏற்படுகிறது. மலிவு விலைக்கு மருந்துகள் விற்பது நல்ல விஷயம் தான். அனைத்து நோய்களுக்கான மாத்திரைகளையும் இருப்பு வைத்தால் தான் விற்பனைதடையின்றி நடைபெறும். ஏற்கனவே தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அம்மா மருந்தகங்களில் அப்பகுதி மக்களின் தேவைக்கேற்ப உள்ளூரில் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் மருந்தகங்களில் அரசு தரும் மருந்துகளை மட்டுமே வாங்கி விற்க முடியும். மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை கேட்டாலும் தருவதாக உறுதி அளிக்கின்றனரே தவிர இதுவரை மருந்தகங்களுக்கு அனுப்பவில்லை. குறைவான விலையிலான மாத்திரைகள் நோயாளிகளுக்கு கிடைக்கவேண்டும் என்றால் அனைத்து வகை மாத்திரைகளையும் விற்க அனுமதி தரவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sheik Ismail
ஏப் 02, 2025 13:08

அனைத்து மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் அப்போது தான் மருந்து வாங்க வருவார்கள்


Mahendran R
ஏப் 02, 2025 11:24

வாக்குறிதி கொடுத்தை செய்யாமல் பழைய பென்ஷன் தராமல் ஏதோதுதே செய்து பணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Durai
ஏப் 01, 2025 14:10

மாத்திரை இல்லை


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:04

இது முதல்வர் மருந்தகம் என்றால், அப்ப அந்த டாஸ்மாக் மருந்தகத்தின் மற்றொரு பெயர் என்ன? கலைஞர் கருணாநிதி மருந்தகமா அல்லது உதயநிதி மருந்தகமா?


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:04

இது முதல்வர் மருந்தகம் என்றால், அப்ப அந்த டாஸ்மாக் மருந்தகத்தின் மற்றொரு பெயர் என்ன? கலைஞர் கருணாநிதி மருந்தகமா அல்லது உதயநிதி மருந்தகமா?


vsm
ஏப் 01, 2025 11:25

இப்படி ஏட்டிக்குபோட்டியாக எதைச்செய்தாலும் ஒன்றும் விளங்காது... ஆளத்தெரியாதவன் கையில் ஆட்சி என்பது நாய் முழுத்தேங்காயை உருட்டுவது போலத்தான். . சும்மா பொழுதுதான போகும் அல்லது தேங்காய் சாக்கடையில் விழும்...


vbs manian
ஏப் 01, 2025 09:37

வழக்கம் போல் சொதப்பல். வெறும் விளம்பரம். டெல்லியிலும் கெஜ்ரிவால் தொடங்கிய முஹல்லா கிளினிக்குகளிலும் இதே நிலைமை. மருத்துவர் மருந்துகள் சோதனை கருவிகள் பற்றாக்குறை. நோயாளிகளை ஏனோ தானோ என்று துளியும் அக்கறையின்றி கவனிப்பு. மக்கள் வரிப்பணம் விரயம்.


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 09:31

தலைமுடியிழந்த ALOPECIA நோயாளிகளுக்கு மறைப்பு தொப்பி, டோப்பா கூட விற்கலாம். நல்ல டிமாண்ட் இருக்கும் .


vijay,kovai
ஏப் 01, 2025 09:11

அனைத்துமே தேவையில்லாத ஆணி தான்


சமீபத்திய செய்தி