உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதமாற்றவாதிகளுக்கு படியளந்து ஹிந்து மதத்தை அழிக்க முயற்சி; தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கண்டனம்

மதமாற்றவாதிகளுக்கு படியளந்து ஹிந்து மதத்தை அழிக்க முயற்சி; தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு சமூக நீதி விடுதியில், மாணவியரை கட்டாய மதமாற்றம் செய்வதை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூக நீதி விடுதியில், பணியாற்றும் லட்சுமி என்பவர், மாணவியரை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துவதாகவும், மறுக்கும் மாணவியரை வன்கொடுமை செய்வதாகவும், உணவுப் பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விடுதி மாணவியரின் பெற்றோர் புகார் அனுப்பி உள்ளனர். கட்டடங்களின் பெயரை மட்டும் விதவிதமாக மாற்றுவதால் என்ன பயன்? அரசு சமூக நீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, விடுதிக்குள்ளேயே ஜாதி கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடப்பதுதான் தி.மு.க.,வின் சமூகநீதியா? அரசு விடுதியில் பணிபுரியும் ஊழியருக்கு, மதமாற்றம் செய்யும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? பிற மதங்களை பாதுகாத்து, ஹிந்துக்களை மதமாற்றம் செய்தால், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா; அல்லது தி.மு.க.,வே, மதமாற்றவாதிகளுக்கு படியளந்து, ஹிந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறதா? அதிலும், மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது கோரத்தின் உச்சமல்லவா? சமத்துவத்தை பேணும் நம் நாட்டில் மாணவ - மாணவியர் இடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. லட்சுமியை பணிநீக்கம் செய்வதோடு, பிற அரசு விடுதிகளையும் முதல்வர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
செப் 24, 2025 18:26

கூட்டணி வைக்காமல் ஜெயிக்க தைரியம் இருந்து இதெல்லாம் பேசினால் நல்லா இருக்கும்.


ராஜா
செப் 23, 2025 15:54

மத சுதந்திரம் மற்றும் சமூக உரிமைகள் இந்தியராக இருந்தால் மட்டுமே போதும்.


Mario
செப் 23, 2025 11:44

அந்த நாலரை கோடி எங்கே?


தமிழன்
செப் 23, 2025 11:05

ராஜாகள் காலத்தில் ஒவ்வரு கோவில் அருகில் ஒரு மஜித் கட்டி கொடுத்தார் திருவிழா காலங்களில் மஜீத்துக்கு இந்து தரப்பு மூலம் வருடத்திற்கு ஒரு முறை சந்தநக்குடம் என்ற ஒரு திருவிழா நடக்கும் அப்போது சொந்தமாகி இருந்தோம் இந்த பாளாப்போன அரசியல் வந்த பிறகு எல்லாம் நாசமா போச்சு தயவு செய்து மதத்தை வைத்து அரசியல் வேண்டாம்


N Sasikumar Yadhav
செப் 23, 2025 13:51

உங்க திராவிட மாடலிடம் சொல்லுங்க


ஆரூர் ரங்
செப் 23, 2025 14:24

எந்த மசூதியிலும் சந்தனக் கூடு நடத்துவதில்லை. இஸ்லாமே ஏற்காத சூபி அடக்க ஸ்தலங்களில் அமைக்கப் பட்டுள்ள தர்காகளில் மட்டுமே விழாக்கள் உண்டு.


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 10:45

இப்பதான் ஒரு பாஜக தலைவர் போல் பேசி இருக்கார் இவர். சரி இதற்காக இவரை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருக்க தகுதி ஆனவர் என்று சொல்ல முடியாது. அண்ணாமலை மட்டுமே பாஜக தலைவர் பதவியை ஏற்று கொள்ள தகுதியான ஒரே மனிதன்.


பாலாஜி
செப் 23, 2025 08:27

ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு படியளந்து பாஜக செய்வதை மறைப்பதற்கு நயினார் நாகேந்திரன் கதறுகிறார்.


N Sasikumar Yadhav
செப் 23, 2025 13:53

பாஜகவை திட்டுவதையே கொள்கையாக கொண்ட கோபாலபுர கொத்தடிமையான நீங்க மதமாற்றம் செய்வதை தட்டி கேட்டால் ஆர்எஸ்எஸ் என கம்பு கடிக்கீறீர் ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்த இயக்கம் பாஜகவின் தாய்


G Ragavendran
செப் 23, 2025 07:06

100% உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை