உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை

கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் சொல்லப்படும் முக்கிய தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு தெரிவது எப்படி என, பா.ஜ., மேலிடம் விசாரித்து வருகிறது.

தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, டில்லியில் இருந்து தமிழக பா.ஜ.,வுக்கு தகவல்கள் தரப்படுகின்றன. இதற்காக, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன், 'ஜூம் மீட்டிங்' வாயிலாக, ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விபரங்களை, கட்சியின் நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு செல்கின்றன. இதுகுறித்து, பா.ஜ., மேலிடத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, இந்த செயலில் யார் ஈடுபடுகின்றனர் என்பதை, மத்திய உளவுத்துறை வாயிலாக, கட்சி மேலிடம் சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை