உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பா.ஜ.,

தமிழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அ.தி.மு.க., ஏற்கனவே பிரசாரத்தை துவங்கிவிட்டது. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜ.,வும் பிரசாரத்தை துவங்கிவிட்டது.பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., படுபிசியாக இருந்தாலும், தமிழக அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தமிழக தேர்தல் அறிக்கையை தயாரிக்க, பா.ஜ., முடிவெடுத்து விட்டதாம். விரைவில் பா.ஜ., குழு ஒன்று தமிழகம் வரவிருக்கிறதாம். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பல சீனியர் தலைவர்களை இந்த குழு சந்திக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=23qwlue7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., அரசின் ஊழல்கள், போதை பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு நிலைமை என, பல விஷயங்களை இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க உள்ளதாம். நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன், அனுராக் தாகூரையும் இந்த குழுவின் அங்கத்தினராக, தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளாராம். தமிழகத்தில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் இந்த குழுவிற்கு உதவி செய்வாராம்.'பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், கச்சத்தீவு குறித்து ஒரு முக்கிய விஷயம் நிச்சயம் சொல்லப்படும்' என்கின்றனர். இந்த தேர்தல் அறிக்கை பொங்கலன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gajageswari
அக் 26, 2025 14:49

இனி தமிழக அரசு கடன் வாங்காது என்று உறுதிமொழியை தரவேண்டும். ராசி மணல் அணை கட்டப்படும். மேம்பாலம் மட்டுமே கட்டப்படும்.


pakalavan
அக் 26, 2025 13:32

இப்பவும் சொல்றேன், அதிமுக காரனுங்க, பிஜேபி கூட்டனிய விரும்ப மாட்டானுங்க, எடப்பாடி பஜக வை கழட்டிவிட்டுருவார்,


T.sthivinayagam
அக் 26, 2025 09:58

பூரண மதுவிலக்கு எதிர் பார்கலாமா என டாஸ்மாக் எதிர்ப்பாளர்கள் கேட்கிறார்கள்


vivek
அக் 26, 2025 10:05

திமுகவை கேட்டு சொல்லணும் என்று மக்கள் கூறுகிறார்கள்


T.sthivinayagam
அக் 26, 2025 11:58

திமுகாவை பாத்து தான் தயாரிக்கனும் என்று சிலர் விரும்புவார்களா.


Venugopal S
அக் 26, 2025 07:25

எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையையும், தேர்தல் வாக்குறுதிகளையும் சாதாரண மக்கள் எவரும் படிப்பதுமில்லை,அதை சீரியசாக எடுத்துக் கொள்வதுமில்லை!


SUBBU,MADURAI
அக் 26, 2025 09:33

குறிப்பாக 2021 ம் ஆண்டு தேர்தலில் திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளைப் போல்தானே அதை முதலில் உதாரணமாக சொல்லு


Oviya Vijay
அக் 26, 2025 04:29

அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை... ஏனெனில் எப்படியும் நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை... இருந்தாலும் நீங்கள் கொடுக்கப் போகும் வாக்குறுதிகளை நீங்கள் தமிழ்நாட்டில் தோற்றாலும் மத்திய பாஜக அரசிடமிருந்து நிதியை பெற்றாவது நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுங்கள்... இல்லையெனில் அது வெறும் வெற்று அறிவிப்புகளாகவே மாறி விடும்...


vivek
அக் 26, 2025 08:18

கொத்தடிமைகள் உளறி கொண்டுதான் இருக்கும்...


vivek
அக் 26, 2025 08:20

அதே அலுமினிய தட்டு தான் வேணும்னு சொல்றார்...


T.sthivinayagam
அக் 26, 2025 11:48

மத்திய பாஜக அரசிடம் நிதியை பற்றி பேசினால் மாநில தலைவர் பதவிக்கு தான் ஆபத்து வரும் என்று தலைவருக்கு நன்றாக தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை