உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி கட்சியினரை உள்ளடக்கி பூத் கமிட்டி அமைக்கும் பா.ஜ.,

கூட்டணி கட்சியினரை உள்ளடக்கி பூத் கமிட்டி அமைக்கும் பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகம் முழுதும், 68,000 ஓட்டுச்சாவடிகளிலும், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அடங்கிய குழுவை ஏற்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் மதுரை வந்தபோது, மாநில நிர்வாகிகளிடம், 'அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் 'பூத்' கமிட்டி முதல் ஓட்டுச்சாவடி வரை இணைந்து பணியாற்ற வேண்டும்' என, அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகம் முழுதும் உள்ள, 68,000 ஓட்டுச்சாவடிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு பூத் கமிட்டிகள் உள்ளன. தமிழக பா.ஜ.,விலும், 50,000க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் உள்ளன. அ.ம.மு.க.,வுக்கும் பல மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு பூத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளில், ஒவ்வொரு கட்சிக்கும் தலா இருவர் என, மொத்தம், 10 - 15 பேரை ஒருங்கிணைத்து, குழு அமைக்க வேண்டும். இக்குழு வாயிலாக மக்களிடம், தி.மு.க., ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விளக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் உள்ள, மொத்த ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறும் வகையில், இக்குழு செயல்பட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. விரைவில், குழு அமைக்கும் பணி துவக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

haja kuthpudeen
ஜூன் 15, 2025 20:36

ஆர்ட்டிஸ்ட் விஜய் கதறலை பாருங்க...சந்தோசமா இருக்கு...


Oviya Vijay
ஜூன் 15, 2025 09:54

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எங்கள் கட்சியில் பூத் கமிட்டியில் போடுவதற்குக் கூட போதுமான தொண்டர்கள் இல்லை எனும் கம்பெனி ரகசியத்தை வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்கும் பொருட்டு கூட்டணிக் கட்சி தொண்டர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை பூத் கமிட்டியில் போடப்போகிறோம் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... இந்த கம்பெனி ரகசியம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தால் நம் கட்சியின் மானம் விமானம் ஏறிவிடும் என்பதனால் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளவும்... நன்றி ஹே...


புரொடஸ்டர்
ஜூன் 15, 2025 07:59

எத்தனை முயற்சிகள் செய்தாலும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை