உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெங்களூருவில் வாடகை வயிற்றை பிசைகிறது !

பெங்களூருவில் வாடகை வயிற்றை பிசைகிறது !

பெங்களூரு : ஐ.டி., நகரமான பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்களால் அதிக வாடகை வசூலிக்கப்படுவதால் பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக சமூக வலை தளங்களில் பகிரப்படுகிறது. இந்தியாவின் பிரபல நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இங்கு தொழில்கள் பெருகுவதுடன், ஐ.டி. நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பணியாளர்கள் மட்டுமின்றி தங்குமிடமும் பெரும் சிம்ம சொப்பனமாக உள்ளது.ஒரு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டிற்கு 40 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். 600 சதுர அடி முதல் 800 சதுர அடிக்குள் தான் அளவு இருக்கும். அட்வான்ஸாக 4 லட்சம் வரை நிர்பந்திக்கின்றனர். அப்பார்ட்மென்டில் ஒரு பிளாட் 20 ஆயிரத்திற்கு மேல்தான் வாடகைக்கு உள்ளது. 300 சதுர அடி முதல் 400 சதுர அடி வரை மட்டுமே இந்த பிளாட்களில் உறைவிடம் இருக்கும்.இது தொடர்பாக சமூக வலைதளங்களில், இப்படியா அநியாயமாக வாடகை வசூலிப்பது ? மும்பையை விட இங்கு வாழ முடியாத அளவிற்கு வாடகை பலரையும் வாட்டி உள்ளது. என்றும் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivagiri
ஜன 24, 2025 19:25

அதான் இப்போ ஓசூரில் செட்டில் ஆகுறாங்க . . .


Naveen Kumar
ஜன 24, 2025 14:33

Wrong news, Bangalore is losing the crowd. 80% of new gen are working from native places. In my apartment 5 months no one has taken for rent. Many houses are vacant. In next 3 years tamil and Kerala people will shift to Coimbatore.


C G MAGESH
ஜன 24, 2025 10:59

கட்டுமர குடும்ப முதலீடுகள் நிறைய பெங்களூரில் உள்ளது. அதனால் தான், காவிரி பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டு, பிரச்னை தீராமல் பார்த்து கொள்வார்கள்.


தியாகு
ஜன 24, 2025 08:20

நல்லா விசாரிங்க, பெங்களூருவில் நம்ம கட்டுமர வாரிசு ஒன்னு வாழுது , அவர்கள் பினாமி கம்பெனிகள் அபார்ட்மெண்ட்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.


தமிழ்
ஜன 23, 2025 23:43

அப்படியே பூனா வையும் இதுல சேர்த்துக்கோங்க


Ram pollachi
ஜன 23, 2025 20:38

பொள்ளாச்சியில் கடை, வீடுகளுக்கு அநியாயமாக வாடகை வாங்குகிறார்கள்... குடிக்க, குளிக்க, வாகனங்கள் நிறுத்த எந்த வசதியும் இல்லை.... பணம் மட்டும் பத்தவே மாட்டேங்குது...


Natesh
ஜன 23, 2025 18:12

Not everyone getting high salary, there is huge variance that's why most of the families struggling. how many of their salary above 1 lakh ? There is no meaning in living in this useless city if your salary is not more than 1.5 lakhs. And how many house owners paying tax even after 100% increase in rent. Owners are really over greedy and this will lead to economical collapse


Saai Sundharamurthy AVK
ஜன 23, 2025 18:05

பெங்களூருவில் உள்ளவர்கள் எல்லாம் அதிக சம்பளம் வாங்குபவர்கள் என்கிற நினைப்பே தவறு. அதிக சம்பளம் வாங்கினால் அதிக வாடகை கொடுக்க வேண்டும் என்பது என்ன நியாயம் !!! சட்டத்தில் இப்படி ஏதாவது எழுதப் பட்டிருக்கிறதா ??? இப்படி கொள்ளை வாடகை வாங்கினால் அது சாதாரண குடும்பங்களையும் பாதிக்கிறது. எல்லோரும் அரசியல்வாதிகளோ,, வியாபாரிகளோ, தொழிலதிபர்களோ கிடையாதே !!! ஓட்டு போட அந்தந்த பகுதிகளில் மக்கள் தொகை வேண்டும். ஆனால், வாடகை மட்டும் குறைக்க முடியாது என்றால் என்ன நியாயம் ??? ஊர் நரகம் தான் ஆகும்.


Ram
ஜன 23, 2025 17:10

சம்பளம் நிறைய வாங்கும்போது அதற்கு தகுந்தாற்போல்தான் வாடகை இருக்கும்


முருகன்
ஜன 23, 2025 16:45

சாதாரண மனிதன் சம்பாதிப்பதை விட நாலு மடங்கு சம்பளம் வாங்குவதற்கு இந்த வாடகை தான் சாரி தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை