உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதி பெயர்களை குறிப்பிடாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு

ஜாதி பெயர்களை குறிப்பிடாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு

- நமது சிறப்பு நிருபர் - ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது வழங்கப்படும் கேள்வித்தாளில், ஜாதிப்பெயர்கள் இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதை மாற்றுமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

40 கேள்விகள்

முதற்கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கடந்த 2011ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட படிவத்தில் 29 கேள்விகள் இடம்பெற்ற நிலையில், இந்த முறை 40 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மக்களின் மதம் மற்றும் அவர்கள் பட்டியல் இனத்தவாரா அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரா என்ற விபரங்களை பதிவு செய்ய கணக்கெடுப்பாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வலியுறுத்தல்

திருமணம், மனைவி, குழந்தைகள் தொடர்பான விபரங்களுடன், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் கணக்கெடுப்பு படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஜாதி என்ற கேள்விக்கு மக்கள் குறிப்பிடும் ஜாதி பெயரை அப்படியே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாதிப் பெயர்களை குறிப்பிடாமல், கணக்கெடுப்பு படிவம் தயாரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தெலுங்கானா மற்றும் பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2026 20:05

ஜாதி, மதம் எல்லாம் வீட்டுக்குள்ளே மட்டுமே இருக்கவேண்டும் . பொது வெளியில் அல்ல.


PATTALI
ஆக 15, 2026 17:32

இப்போதெல்லாம் அனைத்து மதத்திலும், அனைத்து ஜாதிகளிலும் நன்றாக படித்தவர்களும், பணக்காரர்களும், கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள். எனவே வசதிவாய்ப்புகள் இல்லாத ஏழ்மை நிலையில் இருக்கும் பின்தங்கிய குடும்பங்கள் முனேற்றம் அடைய பொருளாதார அடிப்படையிலான இடஒதிக்கீடுகள் முறையை கடைபிடிப்பது நல்லதீர்வாக இருக்கலாம். அதுவும் கல்விக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடுகள் கொடுக்கவேண்டும், அதன்பிறகு வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பொதுவான இடஒதுக்கீட்டு முறையை மட்டுமே கடைபிடித்தால் நன்றாகஇருக்கும். இதனால் எதிர்காலங்களில் ஜாதிமத பிளவுக்குள் மற்றும் மோதல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.அப்படி செய்தால் இந்தியாவும் ஏறக்குறைய சமநிலையான வளர்ச்சியடையவும் வாய்ப்புள்ளது.


ஆரூர் ரங்
ஆக 15, 2026 15:38

இப்போது முழுக்க முழுக்க கணினி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான சாதிப்பெயர்களை சாய்ஸ் ஆக கணினியில் குறிப்பிட்டு அதிலிருந்து மக்கள் தத்தமது சாதியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வைத்து பதிவு செய்யும் சாத்தியமில்லை . ஒரு நாளைக்கு நான்கு குடும்பங்களின் விவரங்களைக் கூட சேகரித்து பதிவு செய்ய முடியாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு போகாத ஊருக்கு வழி. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை இந்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது எளிதல்ல. ஏற்கனவே 5 ஆண்டுகள் தாமதம்


Parthasarathy A K
ஆக 15, 2026 13:34

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே மஹா கவி பாரதியார் அவர்களது பாப்பாப் பாட்டு கவிதையில் "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி , கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் " என்று சொல்லி இருக்கிறார் . தேசியக் கவி அவர்களது வாக்கின் படி செயல் பட்டால் அன்றி அனைவருக்குமான சட்ட பூரண சமமான கல்வி , வேலை வாய்ப்பு மற்றும் அனைத்தும் கிடைப்பது சாத்தியமில்லை


KKeyan
ஆக 15, 2026 13:00

உலகத்திலேயே இரண்டே சாதிதான். ஒண்ணு இருக்கிறவர்கள் இன்னொன்னு இல்லாதவர்கள். வருமானம், சொத்து அடிப்படையில் கணக்கீடு செய்து இல்லாதவர்களுக்கு சலுகை செய்வதே நன்மை தரும்.


சத்யநாராயணன்
ஆக 15, 2026 12:36

தகுதி தேர்வுகள் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றிற்கு முற்றிலுமாக இட ஒதுக்கீடு முறை நீக்கப்பட வேண்டும் மேலும் கல்விக்காகவும் பயிற்சி வகுப்புகளுக்காகவும் கட்டண சலுகைகளை பொருளாதார அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் இந்தியாவில் ஜாதியின் பயன்பாடு என்பது கேவலம் ஓட்டு வங்கிக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது ஓட்டு வங்கி அரசியல் இருக்கும் வரை இதெல்லாம் வெறும் கனவுதான்


ஆரூர் ரங்
ஆக 15, 2026 09:14

1. ஒரே சாதிக்கு பல பட்டப் பெயர்களும் ஒரே பட்டப் பெயருள்ள பல சாதிகளும் உள்ளன. 2. மஹாராஷ்டிரா மாதிரி சென்சசீல் 40000 க்கும் மேற்பட்ட சாதி களும் உட்பிரிவுகளும் உள்ளது தெரியவந்தது. 3. ஆக நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேல் உட்பிரிவுகளிருக்கக்கூடும். 99 சதவீத சாதியினர் தனி ஒதுக்கீடு கேட்கிறார்கள். ஆக சாதிவாரி கணக்கெடுப்பு வீண்.


Sekar Times
ஆக 15, 2026 08:00

சாதி மற்றும் மதச் சான்றிதழ்கள் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். சாதிகள் ஒழிக்க அதுவே சிறந்தது


vijay
ஆக 15, 2026 07:16

அவங்க இஷ்டத்துக்கு ரூல்ஸ் மாத்திக்கிறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை