உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வரின் உறவினர் ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்

முதல்வரின் உறவினர் ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, முதல்வர் ஸ்டாலின் நெருங்கிய உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்; தொழில் அதிபர். இவரது மகன் ஆகாஷ் பாஸ்கரன். சினிமாவில் இயக்குநராகி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன், 2015ல், சென்னை வந்த இவர், விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' என்ற படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.இவர், 2024ல், முதல்வர் குடும்பத்தை சேர்ந்த மு.க.முத்து மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தார். 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தான் தாரணியின் தந்தை.திருமணத்திற்கு பின், ஆகாஷ் பாஸ்கரனின் அபார வளர்ச்சி தமிழ் சினிமா வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், கோடிகள் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்தார். அதர்வா நடிப்பில், 'இதயம் முரளி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில், ஆகாஷ் ஈடுபடுவதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த, 16,17 ம் தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு சம்பளமாக, 80 கோடி ரூபாய் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி இருந்தனர். ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகவில்லை. நடிகர்களுக்கு பரிமாற்றம் செய்துள்ள பணம் தொடர்பாக, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், சினிமா பி.ஆர்.ஓ.,க்கள் இரண்டு பேரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

டாஸ்மாக் அதிகாரிகள் ஆஜர்

இதற்கிடையே, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா மற்றும் கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர், நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.இருவரிடமும், மதுபானங்கள் கொள்முதல், விற்பனை மற்றும் பார் டெண்டர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மூன்று மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kr
மே 22, 2025 21:33

How will the Police even try to find someone in Police Ministers house. Model is like that


Kulandai kannan
மே 22, 2025 20:25

சுப்ரீம் கோர்ட்டின் காதில் விழுந்தால், இதற்கும் தடை விதிப்பார்கள்.


RK
மே 22, 2025 18:41

தமிழ்நாடு அரசு பல ஆயிரம் கோடி கடன் வாங்கியதே படம் எடுக்கத்தான் போல...


pmsamy
மே 22, 2025 10:57

நல்ல நகைச்சுவை


ஆரூர் ரங்
மே 22, 2025 10:42

சம்பளத்தில் ஒரு பகுதி செக்காகவும் மீதி ரியல் எஸ்டேட் நிலமாகவும்( வழிகாட்டு மதிப்பை விட குறைவாக) கூட கைமாறுகிறது. மேலும் அன்னிய நாடுகளில் முதலீடாக கூட அளிக்கிறார்கள். நடிகர்களின் சம்பளத்தில் ஒரு பகுதிக்கு பதில் அவரது பினாமிகளுக்கு வெளிநாட்டு/ வெளிமாநில வெளியீட்டு உரிமையை அடிமாட்டு விலைக்கு கொடுப்பதும் உண்டு. ஆனால் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமை விடியல் குடும்ப நிறுவனத்துக்கு மட்டுமே. இதெல்லாம் அட்வான்ஸ்ட் அறிவியல் முறை.


ராமகிருஷ்ணன்
மே 22, 2025 10:11

சினிமா துறை களவாணிகளின் கூடாரமாக மாறி விட்டது. வெளங்கிடும்


RAAJ68
மே 22, 2025 07:21

சிக்கல் என்னவென்றால் சம்பளம் பணமாக கொடுத்துள்ளனர். அவ்வளவு பெரிய தொகை பணமாக வாங்க கூடாது அதனால் நடிகர்களுக்கு சிக்கல். மேலும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுதவதால் பாஸ்கர்கு சிக்கல். இந்தப் பணம் உதயநிதி கொள்ளை அடித்த பணம் என்பதால் உதயநிதிக்கு சிக்கல். எனவே என் மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று சமாதானம் பேசுவதற்கு முதல்வர் டெல்லி போகிறார்


Ramona
மே 22, 2025 06:48

பிறந்த குழந்தைகளுக்கு கூட தெரியும், சினிமாவும், ரியல் எஸ்ட்டேட் தொழில் தாங்க கருப்பு பணத்த வெள்ளை பணமாக மாற்ற சரியான கேட்வே, இல்ல என்றால் வாடகை சைக்கிள் சவாரி போனவங்க இன்று, ரோல்ஸ் ராய்ஸ் கார்ல சுத்தராங்க, அதை நாமும் வாயை பிறந்து பார்க்கிறோம், கஞ்சா, அபின், சாராய, விலை மாதுகள், ரியல்எஸ்ட்டேட், காலேஜ், ஆஸ்பத்திரி, அரசியல்வாதிகளா, ஹவாலா, ஆட்கடத்தல் போன்ற நேர்மையான தொழில்புறிவோர்களுக்கு நம்ம நாட்டுல எங்கும் சிகப்பு கம்பள வரவேற்ப்பு ,சல்யூட் அடித்து வரவேற்ப்பு , வருமான வரி கட்டி ,கடன் பட்டு வாழ்பவர்களை இந்த சமூகம் கண்டுக்காது, எல்லாம் நம்ம தலையெழுத்து என்று வாழறவங்களை என்ன சொல்ல.


Padmasridharan
மே 22, 2025 06:41

2026 தேர்தலுக்கு முன்னரே முடிச்சி சூரிய வெளிச்சத்திற்கு கொண்டு வருவாங்களா இல்ல 2026 தேர்தல்ல விஜயம் செய்தபின் வெளியில் வருமா சாமி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை