உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சர்வே முடிவு அடிப்படையில் கூட்டணி: பா.ம.க., - நா.த.க.,வுக்கு இ,பி,எஸ்., துாது

சர்வே முடிவு அடிப்படையில் கூட்டணி: பா.ம.க., - நா.த.க.,வுக்கு இ,பி,எஸ்., துாது

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமைக்காத காரணத்தால், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது; ஏழு தொகுதிகளில் டிபாசிட்டை பறி கொடுத்ததுடன், 13 இடங்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.அடுத்த ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில், அந்த தவறை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், எவ்வளவு 'சீட்' கிடைக்கும் என்பதை அறிய, தனியார் அமைப்பு வாயிலாக 'சர்வே' நடத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hji97f6y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த சர்வே அறிக்கையில், 'தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 94 தொகுதிகளை கைப்பற்ற முடியும். த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், கூடுதலாக ஐந்து தான் தேறும். பா.ம.க.,வுடன் மட்டும் கூட்டணி வைத்தால், 114 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், 140 தொகுதிகளில் வெல்ல முடியும்' என, கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பா.ம.க.,வையும், நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் பழனிசாமியை, அவரது சேலம் இல்லத்தில், தன் குடும்ப திருமண விழாவுக்கு அழைக்க, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார். அப்போது, 45 தொகுதிகள் வரை கொடுப்பதாகவும், 2026ல் ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாகவும் பழனிசாமி கூறியுள்ளதாக தெரிகிறது.அதேபோல், பா.ம.க.,வுக்கு அடுத்த நிலையில், நா.த.க.,வுக்கும் சீட் வழங்கப்படும் என, அக்கட்சித் தலைவர் சீமானுக்கும், பழனிசாமி தரப்பில் துாது விடப்பட்டுள்ளது. இரு கட்சிகளிடமிருந்து இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.அதனால், கூட்டணி அமைப்பதற்கு முன், கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தனக்கு விரோதமாகச் செயல்படும் நிர்வாகிகளை களையெடுக்கவும், 'சீக்ரெட் கமிட்டி' ஒன்றை பழனிசாமி அமைத்து உள்ளார்.கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தினகரன், சசிகலா, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிக்கவும், சீக்ரெட் கமிட்டிக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இந்த கமிட்டி தரும் அறிக்கையின் அடிப்படையில், டெல்டா மாவட்ட அமைப்பு செயலர்கள் சிலரை முதற்கட்டமாக களையெடுக்க, பழனிசாமி சமீபத்தில் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Thirumal s S
பிப் 24, 2025 00:41

அதிமுக யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் பிஜேபி தவிர. இப்ப இருக்கிற கட்சியாவது இருக்கும் இல்லை என்றால் பிஜேபி இருக்கிற தையும் தின்னும் முன் போல.


Ragothaman Subramaniam
பிப் 23, 2025 06:12

ஆளுமைப் பண்பு தலைமை பண்பு ஏதும் அற்ற பழனிசாமி அவர்கள் பூனை போல் இருந்து கொண்டு புலியாக மாற நினைக்கிறார் திரு எம் ஜி ஆர் அவர்கள் வளர்த்த அதிமுக எந்நாளும் அவருடைய வாழ்க்கையில் தோற்றது இல்லை ஆனால் ஜெயலலிதா அம்மையார் செய்த சிறு தவறுகளால் இரண்டு முறை திமுக பதவிக்கு வர முடிந்தது ஆனால் தன்னுடைய கடைசி காலத்தில் அம்மையார் உறுதியாக இருந்து திமுகவை பின்னங்கால் பட தோற்கடித்துக் கொண்டே இருந்தார் இது சரித்திரம் இச்சரித்தரத்தை மறுபடியும் செயல்படுத்த இபிஎஸ் அவர்கள் தேசிய சக்திகளுடன் கைகோர்த்தால் மட்டுமே இது நடக்கும் இல்லையேல் கட்சியை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் மிகப்பெரிய பாவத்தை அவர் வாழ்நாள் முழுவதும் சுமப்பார் இது உறுதி


RAMAKRISHNAN NATESAN
பிப் 21, 2025 20:29

நிருபரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூது விட்டாரா பழனி ? உடனே ஊ பீயி ஸ் பின்பாட்டு பாடுறாங்களே ?


Easwar Kamal
பிப் 21, 2025 17:43

சர்வே முடிவு போல நடந்தால் நல்லாத்தான் இருக்கும். அனல் கரகம் அப்படி நடக்க விடாதே. பிஜேபி கூட கூட்டணி இல்லாமல் உங்களுக்கு ரெட்டை இலை இல்லையே. ரெட்டை இலை இல்லாமல் போனால் உங்கள் நிலமை என்ன என்பது நன்றாகவே தெரியும் அல்லவே. பிஜேபி உடன் சேர்ந்து போனால் வெற்றி கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும். இல்லாவிட்டால் என்றைக்கும் எதிர் கட்சிதான்.


orange தமிழன்
பிப் 21, 2025 15:14

மங்கிகளுக்கு ( திராவிட) பெரும் கவலை.......


RAAJ68
பிப் 21, 2025 14:18

மத்தியில் ஆளும் பிஜேபி அரசை உங்கள் டிவியில் மைனாரிட்டி அரசு என்று தினமும் சொல்கிறீர்கள். இனி எந்த காலத்திலும் நீங்கள் ஆட்சிக்கு வரவே முடியாது. திமுக வந்தாலும் பரவாயில்லை நீங்கள் ஆட்சிக்கு வரவே கூடாது. அம்மாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்த நீங்கள் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆவீர்கள் என்று கனவு காண வேண்டாம். 2026 தேர்தலுடன் உங்களுடைய சகாப்தம் முடிவடையும். இது மக்களின் சாபம். பத்து சீட்டு கூட உங்களுக்கு கிடைக்காது.


SP
பிப் 21, 2025 14:03

எடப்பாடி யார் நீங்களாக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தான் நாங்கள் தயார் என்று அனைத்து கட்சிகளும் அறிவிக்க வேண்டும்


எஸ் எஸ்
பிப் 21, 2025 13:14

ஒன்றுபட்ட அதிமுக பிஜேபி பாமக புதிய தமிழகம் கூட்டணி ஏற்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்


angbu ganesh
பிப் 21, 2025 11:37

ஜாதி காட்சிகளை நம்பி ஏமாறாதிங்க


Oviya Vijay
பிப் 21, 2025 11:26

எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா... எப்படியாவது பாஜக தலைமையில் வலுமிக்க ஒரு புது கூட்டணி அமைந்து விடாதா... எப்படியாவது எடப்பாடியார் மனம் கனிந்து அண்ணாமலையோடு இணங்கிச் சென்று அதிமுகவும் கூட்டணியில் இணைந்து விடாதா... இப்படியே எப்படியாவது எப்படியாவது என்று கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள் சங்கிகள். அதுவும் அடுத்த தேர்தலுக்கு அதிக நாட்கள் கூட இல்லை. மேலே கனவு காணும் யாவும் மிக விரைவில் நடந்து விடாதா என்று பெரும் ஏக்கத்தில் உள்ளனர்... ஆனால் 2026 தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இவரகள் புலம்பல் தொடரும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும்... திமுக கூட்டணி உடைவதற்கு வாய்ப்பில்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை