உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்

தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்

கோவை: ''தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்து இருப்பதால், தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இல்லை,'' என, கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு உணவு பொருட்களின் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதில்லை. சந்தையை பொறுத்தவரை பொருட்களின் விலை ஏறுவதும், இறக்குவதும் இயல்பானது. 2024ம் ஆண்டு திடீரென தேங்காய் எண்ணெய் விலை லிட்டர், 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்ந்தது. அதன் பிறகு 500 ரூபாயாக உயர்ந்து, இப்போது லிட்டர் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கொப்பரை விலை கிலோ 90 ரூபாயிலிருந்து, 180 ரூபாயாக உயர்ந்ததே தேங்காய் எண்ணெய் விலை இருமடங்காக உயர காரணம் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் தேங்காய் விளைச்சல், 40 சதவீதம் வரை குறைந்து இருப்பதால், கொப்பரை தேங்காய் உற்பத்தி, 75 சதவீதமாக குறைந்து விட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 'தென்னை விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் இல்லை. புதிதாக தென்னை விவசாயத்துக்கு வருபவர்கள் மகசூல் எடுக்க, 7 முதல் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது' என்கின்றனர் எண்ணெய் உற்பத்தியாளர்கள். கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறியதாவது: இன்று தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. அதனால் தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்க்க மட்டும்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது கேரளம் போல, சமையலுக்கும் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். காஸ்மெடிக் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் மகசூல் குறைந்து விட்டது. அதனால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதால், தென்னை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இப்போது தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், 400 முதல் 480 ரூபாய்க்கும், பிரீமியம் தரம் லிட்டர் 500 முதல் 600 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ram pollachi
ஏப் 27, 2026 23:33

தேங்காய் தொட்டிக்கு மிகப் பெரிய டிமாண்ட் உள்ளது..... இதில் இருந்து ஹேர் டை தயாரிக்கிறார்கள்.... வீட்டில் சேரும் தொட்டிகளை தெருவில் வீசவோ, எரிக்கவோ வேண்டாம் அதை எடைக்கு போட்டால் கணிசமான பணம் கிடைக்கும்...


Ram pollachi
ஏப் 27, 2026 23:26

தேங்காய் தொழில் முழுவதும் இடைத்தரகர்களை நம்பியே உள்ளது.... பறித்தல், உரித்தல் சந்தைப்படுத்துவது எல்லாம் இவர்கள் வேலை... விவசாயிகளுக்கு பெரிய லாபம் கிடையாது.... அடிக்கிற வெயிலுக்கு தேங்காய் எல்லாம் வெடி குண்டு போல் வெடித்துவிடும் அதில் காற்று புகும் போது காய் கெட்டு விடும் வியாபாரிகளுக்கு நஷ்டம்....


Ram pollachi
ஏப் 27, 2026 23:16

குளிர்காலத்தில் தே.எண்ணெய் கெட்டியாகி உறைந்திட வேண்டும், விரைவில் சிக்கு வாசம் வர வேண்டும் அதுதான் கலப்படம் இல்லாத எண்ணெய்.... நேந்திரம் சிப்ஸ் கெட்டு போகாமல் இருக்க முழுக்க முழுக்க பாமாயில் பயன்படுத்துகிறார்கள்....


Govi
ஏப் 27, 2026 08:37

விளைச்சல் இல்ல நோய் தாக்குதல் சைட் பிரிக்க ஏகபட்ட தோப்புகள் காலி செய்ய பட்டண


விஸ்வ நாதன்
ஏப் 27, 2026 06:11

தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடிவதில்லை


SANKAR
ஏப் 27, 2026 06:56

and it started only in 2024 ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை