உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் வா! மீண்டும் வா!

மீண்டும் வா! மீண்டும் வா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இண்டியா கூட்டணியில் ஒரு பக்கம் இழுபறி நீடிக்கிறது. இன்னொரு பக்கம் திரிணமுல், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணியிலிருந்து விலக தயாராகி வருகின்றன.மற்றொரு கட்சியான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., பக்கம் தாவ முடிவெடுத்துவிட்டது. இப்படி எதிர்க்கட்சிகளின் கூட்டணி பரிதாப நிலையில் இருக்க, பா.ஜ., சத்தம் இல்லாமல் பிரசார வேலைகளை முடித்துவிட்டது.புதுடில்லியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பா.ஜ., தேர்தல் பிரசார பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டன. பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் உட்பட பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனராம். பல மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடல்கள் தமிழிலும் ஒலிக்க உள்ளன.'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்கிற வாசகம் பாடல் முழுக்க ஒலிக்குமாம். அனைத்து மொழி பாடல்களுக்கும் இளையராஜாவின் ஆலோசனைப்படி, ட்யூன் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி