உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தேர்தல் தள்ளிவைப்பு; பின்னணியில் முத்தரசன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தேர்தல் தள்ளிவைப்பு; பின்னணியில் முத்தரசன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தேர்தல் தள்ளி போடப்பட்டதன் பின்னணியில், தற்போதைய மாநில செயலர் முத்தரசன் இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், 26வது மாநில மாநாடு, சேலத்தில் நடந்தது. நான்கு நாள் மாநாட்டில், முக்கிய அம்சமாக, அடுத்த மாநில செயலர் யார் என்பது குறித்து, தனி அறையில் ஆலோசிக்கப்பட்டது. தேசிய பொதுச்செயலர் ராஜா, அவரது மனைவி ஆனி, தேசிய செயலர் நாராயணா உள்ளிட்ட, 31 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதில், புதிய செயலரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு விவாதமும், வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. மாநில செயலர் பதவிக்கு, 75 வயது கடந்த முத்தரசனால் மீண்டும் போட்டியிட முடியாது. 131 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். அதில், நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரித்தால், முத்தரசனை மாநில செயலராக மீண்டும் தேர்வு செய்ய முடியும். ஆனால், நிர்வாக குழு உறுப்பினராக முத்தரசன் இருக்க வேண்டும்; அதில் அவர் இல்லை என்பதால், அவரால் மீண்டும் மாநில செயலர் பதவிக்கு போட்டியிட முடியாது. அதனால், தன் ஆதரவாளர் சந்தானத்தை மாநில செயலராக தேர்வு செய்ய, முத்தரசன் விரும்பினார். ஆனால், வீரபாண்டியன், பெரியசாமி, மூர்த்தி போன்றோர் போட்டியாக வந்ததால், ஒருமனதாக சந்தானத்தை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், மாநில செயலர் தேர்தல், மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில், பஞ்சாபில் நடக்கவுள்ள அகில இந்திய மாநாட்டில், மாநில செயலர் தேர்தலை நடத்தலாம் என, கட்சியினரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாக ரீதியான செயல்பாடுகளில், கம்யூ., இயக்கங்களும் மற்ற கட்சிகளைப் போல சென்று கொண்டிருப்பதாக கட்சியினர் பலரும், இந்த நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு வருத்தப்படுகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nagarajan D
ஆக 20, 2025 21:21

பாரதத்தின் சாபம் சொட்டை காந்தியும் அவன் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டமும்.. உலகத்தின் சாபம் இந்த கேவலமான உண்டியல் பொறுக்கிகள்


pv, முத்தூர்
ஆக 20, 2025 15:36

பதவியில் இருந்தால்தான் பெட்டி வாங்கமுடியும்.


கூத்தாடி வாக்கியம்
ஆக 20, 2025 09:48

அட இவர் என்னத்த சொல்ல அங்க தி முக ஒத்து போரவன் தான் அடுத்த தலிவரு


பேசும் தமிழன்
ஆக 20, 2025 09:42

பெட்டியை.... யார் வாங்குவது என்பதில் கடும் போட்டி இருக்கும் போல தெரிகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 20, 2025 09:03

இருக்குற பத்து சிவப்பு டர்க்கி துண்டுகளுக்கு வேலை வேணுமே. தேர்தல் வரைக்கும் வேலை பார்த்தால்தான் பொட்டி கிடைக்கும்.


எவர்கிங்
ஆக 20, 2025 09:01

பதவி வெறி மனித இயல்பு


Ragupathy
ஆக 20, 2025 08:40

நன்றாக செயல்பட்டு வந்த மகேந்திரனை ஒதுக்கிவிட்டு தா.பாண்டியன் சூழ்ச்சியால் தலைவரானார் முத்தரசன்... இவரும் அந்த வேலையைத்தான் செய்வார்.


ராமகிருஷ்ணன்
ஆக 20, 2025 07:39

திருட்டு திமுகவிடம் பணம் வாங்கி பொழைக்கிற பொழப்பு ஒரு பொழப்பா, தகரடப்பா கட்சியை கலைத்துவிட்டு வேற வேலை பாருங்க


சந்திரன்
ஆக 20, 2025 07:06

வேறென்ன பெட்டிதான்


முக்கிய வீடியோ