உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நீதிபதி குறித்து சர்ச்சை பேச்சு; மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது புகார்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நீதிபதி குறித்து சர்ச்சை பேச்சு; மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது புகார்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலை களங்கப்படுத்தும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம், மாநாடு நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.

அவ நம்பிக்கை

மனுவை விசாரித்த நீதிபதி தனபால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹாலில் மார்ச் 9ல் உள்ளரங்க மாநாடாக நடத்த அனுமதிக்கப்பட்டது.

இதில், வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:

மலை விவகாரத்தில் உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்துவிட்டு, நாளை ஓய்வு பெற்ற பிறகு, ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை, நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். தீயை பற்ற வைப்பவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால், உன்னை போல் முட்டாள் இந்த உலகில் இல்லை. எந்த துறை என்றாலும், எந்த உயரிய பதவியில் இருந்தாலும், எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன்தான். இவ்வாறு அவர் பேசினார்.இதுகுறித்த செய்திகளின் அடிப்படையில், மதுரை வழக்கறிஞர் முருக கணேசன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அதில், 'இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பு சாசன சட்டத்தை பாதுகாத்து வரும் பாதுகாவலராக இருந்து வரும் நீதிபதியை அவமதிக்கும் வகையிலும், மக்களின் நம்பிக்கையான நீதிமன்ற தீர்ப்பின் மீது அவநம்பிக்கையை உண்டாக்கும் வகையிலும் மக்கள் பிரதிநிதியான வெங்கடேசன் பேசியுள்ளார்.கண்ணியமிக்க நீதிபதி வழங்கிய தீர்ப்பினை, சுயஆதாயம் பெறும் குற்றமுறு உள்நோக்கத்தோடு வழங்கியுள்ளதாக பேசிஉள்ளார். நீதிமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் அசிங்கம், அயோக்கியன் என்ற தரக்குறைவான வார்த்தைகளாலும், நீதிபதியையும், அவர் வழங்கிய தீர்ப்பையும் ஒருமையில் அவமதிக்கும் வகையிலும் விளம்பர பிரியராக பேசியுள்ளார்.

சட்ட நடவடிக்கை

மக்கள் பிரதிநிதியாக உள்ள நபர் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் மோசமாக சித்தரித்து பொது வெளியில் எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லாமல் சுய ஆதாயத்திற்காக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாக பேசியது, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமான பழிச்சாட்டுதலாகும். சட்ட திட்டங்களை மதித்து நீதிமன்றங்களுக்கு கீழ்படிந்து வரும் நபர் என்பதையும் பொருட்படுத்தாமல் சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'புகாரை பெற தாமதம்'

மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது புகார் அளித்த முருக கணேசன் கூறுகையில், “போலீஸ் கமிஷனரிடம் மார்ச் 13ல் ஆன்லைனில் புகார் தெரிவித்த நிலையில், ஸ்டேஷனில் நேற்று புகார் கொடுத்தேன். அதை பெற தாமதம் செய்தனர். நுண்ணறிவு பிரிவில் இருந்து கூறிய பிறகே புகாரை பெற்றனர்; மார்ச் 24ல் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், 'ரிட்' மனு தாக்கல் செய்ய உள்ளேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S.jayaram
மார் 20, 2025 15:56

மதுரை மேப் வெங்கடேசன் தமிழர்களின் விரோதி மலையாளிகளின் ஆதரவாளன், மேப் ஆக இருக்கும் இருந்தால் முல்லைப் பெரியார் நீர்த்தேக்கத்தில் தண்ணீரை 142 அடிக்கு உயர்த்த நீதிமன்றம் உத்தரவு இருந்தும் அதை தெக்கவிடாமல் 136 அடி தண்ணீர் எட்டியவுடன் உடனே தண்ணீரை திறக்கசொல்லி நிர்பந்தம் செய்யும் கேரள அரசை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாதவன், கீழடி அகழ்வாய்வு கிடைத்த தமிழர்களின் சின்னங்களை திராவிட நாகரிகம் என்றவன் இவையெல்லாம் MP யாக்கிய மதுரை மக்களை சொல்லணும் மதுரை ரயில்வே டிவிஷனில் காலியாக இருந்த இடங்களுக்கு திருவனந்தபுரத்தில் தேர்வாம் ஏன் தமிழ்நாட்டில் இடங்கள் இல்லையா மண்டல அலுவலகமே சென்னையில் உள்ளது அதை விடுத்து மலையாளிகளையும், கம்யுனிஸ்ட் தொண்டர்களையும் உள்ளே நுழைக்கமுயற்சி செய்த தமிழின துரோகி


Sangi
மார் 20, 2025 09:08

இவருக்கு மட்டுமே ஏதோ தவறாக வாக்களித்து போல சொல்கிறீர்களே. எனக்கென்னவோ இந்த ஏதோ பெரிய திருட்டுத்தனமாக செய்து ஜேயித்திருப்பர் என தான் தோன்றுகிறது


V SURESH
மார் 19, 2025 18:53

சு. வெங்கடேசன் எப்பொழுதும் தேவையில்லாமல் பேசுகிறார் . செயலில் எதுவுமில்லை. பாவம் மதுரை மக்கள் தலையெழுத்து?


பேசும் தமிழன்
மார் 19, 2025 18:42

இவருக்கு ஓட்டு போட்ட மதுரை மக்களை என்ன சொல்ல ???


surya krishna
மார் 19, 2025 16:57

oottu potta ilichavaaya himdukkal.....


RAJAKUMAR PT
மார் 19, 2025 13:36

இவனுக்கு ஓட்டு போட்ட மதுரை மக்களை சொல்லனும் அவர்களுக்கு எதிராக தைரியமாக பேசுகிறார். என்ன செய்வது நம் மக்கள் ரோஷம் இல்லாதவர்கள்.


theruvasagan
மார் 19, 2025 12:46

சப்பையான மேட்டருக்கெல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி தானாகவே முன்னே வந்து நடவடிக்கை எடுக்க ஓடி வரவங்க அரசியல்வியாதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால் கண்ணைப் மூடிக்கொண்டு வாயையும் காதையும் பொத்திக்கிட்டு கிடப்பாங்க போல.


Krishna R
மார் 19, 2025 10:12

தீயை பற்ற வைப்பதும், குளிர் காய்பவனும், அப்புறம் அணைக்காமல் பெரிதாக்குவதும் ஒருவனே...அந்த சார் யார்???


naranam
மார் 19, 2025 09:47

அதிகாரத் திமிர் பிடித்த இவரைத் திஹார் சிறையில் போடுவது நல்லது.


Srinivasan Krishnamoorthy
மார் 19, 2025 12:44

what power this mp has except shouting useless. all these indi alliance MPs are burden on people


Ramesh Sargam
மார் 19, 2025 13:00

பூமிக்கு திரும்பிவந்த அதே ராக்கெட்டில் விண்ணுக்கு இவனை நிரந்தரமாக அனுப்புவது மிக மிக சிறந்தது.


நிக்கோல்தாம்சன்
மார் 19, 2025 07:17

இவனுக்கு 3 மாதம் பங்களாதேஸ் 3 மாதம் பாகிஸ்தான் 6 மாதங்கள் தொண்டாமுதூர் கெம்பனுர் இல் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி