உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., உடன் கூட்டணி வைக்க காங். , - எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய பேச்சு

த.வெ.க., உடன் கூட்டணி வைக்க காங். , - எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்துடன், கூட்டணி அமைக்க வேண்டும்' என, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலிடம், தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ரகசியமாக பேசிய தகவல் வெளியாகியுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், தன் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு உண்டு என, த.வெ.க., கட்சியை துவக்கியதும், அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jlicqnjj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விருப்பம்

அத்துடன், தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன், கூட்டணி அமைக்கப் போவதில்லை என, அக்கட்சி தீர்மானம், நிறைவேற்றி உள்ளது.'தி.மு.க., கூட்டணியில், ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்' என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், ஏற்கனவே சத்தியமூர்த்தி பவனில் நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மும்பையில் கிரிஷ் ஷோடங்கரை, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருவர் சந்தித்து, கூட்டணி தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சு நடத்தி உள்ளார்.இதற்கிடையில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, தென் மாவட்ட காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்டாலும் கிடைக்காது; அதிக தொகுதிகளும் கிடைக்காது.

அதிகாரப்பகிர்வு

இந்த முறை, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், அடுத்த 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்ய, தொண்டர்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆட்சி அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால் தான், கட்சியை வளர்க்க முடியும். அதற்கு த.வெ.க., விடம் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். விஜய்க்கு தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கேரள மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர். அதற்கு, கே.சி.வேணுகோபால், 'பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் மும்முரமாக உள்ளார். அந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி மாற்றம் குறித்து ஆலோசிக்கலாம். அதுவரை தி.மு.க., கூட்டணியில், பொறுமையாக இருக்க வேண்டும்' எனக் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
ஜூலை 13, 2025 09:04

சுவிசேஷ பிரசங்கம், எழுப்புதல் கூட்டங்கள் குறைவற நடக்கும்..அவை ஓட்டு ஆக மாறுமா? என்பதே கேள்வி.... கத்தோலிக்க திருச்சபை கும்பல், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொள்வது இயல்பானதே..


Oviya Vijay
ஜூலை 12, 2025 16:34

இவ்வாறு மட்டும் நடந்து தவெக தலைமையில் காங்கிரஸ், மக்கள் நீதி மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அனைத்தும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுமேயானால் கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பேற இயலாது... இந்த சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நடந்தேறும்... ஆனால் நான் மேலே குறிப்பிட்ட படி கூட்டணி அமைய வேண்டுமே... ஏற்கனவே பலமுறை கூறி வருகிறேன்... திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைக் கூட அந்த கூட்டணியிலிருந்து உருவாமல் திமுகவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வீர்...


Balasubramanian
ஜூலை 12, 2025 12:22

அப்படி போடு அரிவாளை! எண்பது தொகுதிகள் தந்தால் திமுக உடன் கூட்டணி! இல்லை என்றால் விஜய் கட்சி எவ்வளவு தந்தாலும் அதை அப்படியே வாங்கிக் கொள்வோம் என்று சொல்லி விட்டு தேர்தல் வரை இழுத்து அடியுங்கள்! இரண்டு கட்சிகளையும் மக்களையும் யாருடன் கூட்டணி என்று மயங்க வைத்து, கடைசியில், ஐந்தே பத்தோ தொகுதி போதும் இவர்களுக்கு என, யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணியில் இணைவது தான், நூற்றாண்டு கடந்த ஒரு அகில இந்திய கட்சிக்கு அழகு!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 10:51

அகில இந்திய கட்சி பாரத நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாய் ஆண்ட கட்சி நேற்று முளைத்த தமிழகத்தின் ஆளும் கட்சியின் பி டீம் கட்சியோடு கூட்டு வைத்து ஜெயிக்க முடியுமா என்று யோசிக்கிறது. தேசிய கட்சிக்கு இதை விட பெருத்த அவமானம் வேறு எதுவும் இல்லை. பேசாமல் கட்சியை கலைத்து விடலாம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 12, 2025 03:27

கிருஸ்துவ மதத்தினர் எல்லாம் ஓரணியில் என்ற நிலைப்பாடு முஸ்லிம்களை தாஜா செய்யும் கூஜாவுக்கு சற்றே அதிருப்தியாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை