உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விமர்சித்தால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

விமர்சித்தால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வென்றது.இந்த முறை ஆட்சியை பிடித்துவிடுவோம் என நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, முடிவுகளை அறிவிப்பதில் திடீர் தாமதம் ஏற்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியது. அதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் காங்., புகார் அளித்தது. அதற்கு தேர்தல் கமிஷன் சமீபத்தில் பதில் அளித்தது. அதில், 'தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்., வைத்துள்ளது' என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதனால் காங்., தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு நேற்று காரசார கடிதம் எழுதினர். அதன் விபரம்:தேர்தல் கமிஷன் குற்றமற்றது என உங்களுக்கு நீங்களே சான்றளித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.இதுபோன்ற பதில்களை நாங்கள் எப்போதும் கடந்து சென்று விடுவோம். ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷனின் தொனியும், அவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளும், காங்., மீது அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.தேர்தல் கமிஷனுக்கு யார் ஆலோசனை வழங்குகின்றனர், வழிநடத்துகின்றனர் என்பது தெரியாது. ஆனால், அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு என்பதை மறந்துவிட்டதை போல் தெரிகிறது.தேர்தல் கமிஷன் அளிக்கும் ஒவ்வொரு பதிலும் தனிப்பட்ட தலைவர்கள் அல்லது கட்சியின் மீதான தாக்குதலாகவே உள்ளன. நீங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நோக்கம் எனில், அந்த உணர்வை மிகக் சிறப்பாகவே உருவாக்கி வருகிறீர்கள்.நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, வழக்கு தொடுத்த கட்சியை அவதுாறாகவோ, மோசமானவர்களாகவோ சித்தரிப்பது இல்லை. தேர்தல் கமிஷன் இதுபோல கருத்து தெரிவிப்பதை தொடர்ந்தால், அந்த கருத்து களை நீக்குவதற்கு நீதிமன்ற உதவியை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
நவ 02, 2024 23:33

நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பது..... நடுநிலையான தேர்தல் ஆணையம் மீது வீண் பழி சுமத்தி.... ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட.... கான் கிராஸ் கட்சியை தடை செய்தாலும் பரவாயில்லை..... அது நாட்டுக்கு நல்லதாகவே இருக்கும்.


Ramesh Sargam
நவ 02, 2024 20:12

தேர்தலில் தோற்றால் முன்பெல்லாம் வாக்கு இயந்திரத்தின்மீது குற்றம் சாட்டினார்கள். இப்ப தேர்தல் ஆணையகத்தின்மீதே குற்றச்சாட்டு. நீதிமன்றம் இவர்களுக்கு சாதகமா தீர்ப்பு வழங்காவிட்டால், இவர்கள் நீதிமன்றத்தின் மீதே குற்றம் சாட்டுவார்கள் .


Saai Sundharamurthy AVK
நவ 02, 2024 11:26

போங்கள் ! போங்கள் ! ஓடுங்கள் ! ஓடுங்கள் ! நீங்கள் மக்களுக்கு வேண்டாம்.....!!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 02, 2024 11:08

தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்று வெளிவரும்படி காசு கொடுத்து தயார் செய்யுங்கள். அப்புறம் சில காலம் ஊடகங்களுக்கு பொழுது போகும் உங்கள் செல்லப் பேரன் ராகுல் அவர்களும் மூஞ்சியை ஜம்மென்று வைத்து கொண்டு மைக் முன்பாக பேசுவார். கார்கே கோபமாக விசாரணை கமிஷன் கேட்பார்.மக்களுக்கும் சிறிது காலம் பொழுது போகும். உங்கள் உலக மகா பொருளாதார மேதை மேன்மை தாங்கிய திரு.சிதம்பரம் அவர்களை துணைக்கு சேர்த்து கொள்ளவும். தனிமையில் அவர் பெயர் போட்டோ ஊடகங்களில் தற்போது வெளிவராததால் ஏக்கத்துடன் இருக்கிறார்.


A Viswanathan
நவ 02, 2024 09:43

நீதி மன்றம் எதற்கு.ஐநா சபைக்கே போங்க.


theruvasagan
நவ 02, 2024 07:45

நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது வழக்கு தொடுத்த கட்சியை அவதூறாகவோ மோசமாகவோ விமரிசிப்பதில்லை. வழக்கை எதிர்கட்சிக்காரன் மீது தொடுக்காமல் நீதிபதி மேலேயே போட்டால் அவர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை