உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி: அன்புமணி திட்டம்

இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி: அன்புமணி திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.,க., சம்மதிக்காவிட்டால், தனித்து போட்டியிடவும், எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் களமிறங்கவும், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qvnqauta&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ஆட்சியில் பங்கு தர வேண்டும்; 4 அமைச்சர் பதவிகள் தர வேண்டும்; ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 35 தொகுதிகள் வேண்டும்' என, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு, பழனிசாமி தரப்பு எந்த முடிவும் சொல்லவில்லை. ராமதாஸ் - அன்புமணி மோதல் போக்கு முடிந்த பின் பார்க்கலாம் என, பழனிசாமி காத்திருக்கிறார். அன்புமணியின் கூட்டணி ஆட்சிக்கான உடன்பாட்டை பழனிசாமி ஏற்கவில்லை என்றால், தனித்து போட்டியிடுவது குறித்து, அன்புமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துள்ளார். வட மாவட்டங்களில், வன்னியர் அடர்த்தியாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றும், அன்புமணி கருதுகிறார். மேலும், சேலம் மாவட்டம், பென்னாகரம் தொகுதியில், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அன்புமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் நிலைமை ஏற்பட்டால், பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில், 60 சதவீதம் வன்னியர் இருப்பதால், அங்கு களமிறங்க அன்புமணி ஆலோசித்து வருகிறார்.

'லோகோ' வெளியீடு

பா.ம.க., தலைவர் அன்புமணி மேற்கொள்ள உள்ள, தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கு, 'லோகோ' எனப்படும் இலட்சினை வெளியிடப்பட்டது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான, ஜூலை 25ல், சென்னையை அடுத்த திருப்போரூரில் இருந்து, தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி துவக்குகிறார். வரும் நவ.,1 வரை, பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்காக, 'உரிமை மீட்க... தலைமுறை காக்க...' என்ற பெயரில், 'லோகோ'வை அன்புமணி நேற்று வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T.sthivinayagam
ஜூலை 24, 2025 21:21

பாமகவிற்கு முதல்வர் பதவியை தர என்டிஏ முன்வர வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


பாரத புதல்வன்
ஜூலை 24, 2025 09:41

இத்துடன் உலக செய்திகள் நிறைவடைந்தது..... நன்றி வணக்கம்!!


vbs manian
ஜூலை 24, 2025 09:34

அது என்ன தமிழகத்தில் எல்லோரும் தமிழர் உரிமை தமிழர் உரிமை என்று சொல்லி போராட்டம் கட்சி நடத்துகிறார்கள். தமிழகத்தில் யாருக்குமே உரிமை இல்லையா. அந்நியர் ஆட்சியா நடக்கிறது.


Haja Kuthubdeen
ஜூலை 24, 2025 09:04

இதை அய்யாமுடிவு செய்வார்...ஓரமா போயி விளையாடு...


Anvar
ஜூலை 24, 2025 09:02

நாங்களும் அதையே தான் விரும்புகிறோம் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதா பா ம க ஒரு ...


D Natarajan
ஜூலை 24, 2025 07:39

தனியாக போட்டியிட்டால் PMK க்கு கோவிந்தா . ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாது


மணி
ஜூலை 24, 2025 05:01

தனியா விடனும். இன்ன பிற .வி.சி.க. இடது வலது தனிய கழட் டி உட னும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை